செவ்வாய், 24 செப்டம்பர், 2013

பல்கலைக்கழக கட்டணத்துக்காக உணவு உண்ணும் போட்டியில் மாணவன்

உணவு உண்ணும் போட்­டி­களில் பங்­கேற்று வெற்றி பெறும் பணத்தைப் பயன்­ப­டுத்தி தனது பல்­க­லைக்­க­ழக கட்­ட­ணங்­களை மாணவன் ஒருவன் செலுத்தி வரும் சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

விஸ்­கொன்ஸின் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணினி பொறி­யியல் துறையில் கல்வி கற்று வரும் எறிக் டால் என்ற மாண­வரே இவ்­வாறு உணவு உண்ணும் போட்­டி­களில் பங்­கேற்று வெற்றி பெறும் பணத்தைப் பயன்­ப­டுத்தி தனது பல்­க­லைக்­க­ழக கட்­ட­ணத்தை செலுத்தி வரு­கிறார்.

பிக் ரெட்ஸ் ஸ் ரீக்­ஹவுஸ் என்ற உண­வ­கத்தால் உணவு உண்­ப­தற்­கான போட்டி நடத்­தப்­ப­டு­வதை அறிந்த எறிக் டால், தான் விரை­வாக உணவு உண்டால் உண­வுக்­கான கட்­ட­ணத்தை செலுத்­து­வதை தவிர்ப்­ப­துடன் மேல­திக பணப் பரி­சையும் பெற முடியும் என்பதை உணர்ந்தார்.

அந்த உண­வ­க­மா­னது 3 இறாத்தல் வெண்ணெய் சான்ட்விச் உணவை 10 நிமி­டங்­க­ளிலும் குறை­வான நேரத்தில் உண்­ப­வர்­க­ளுக்கு மேற்­படி பரிசை வழங்­கு­கிறது.

எறிக் அந்த உணவு உண்ணும் போட்­டியில் 2011 ஆம் ஆண்டு முதல் பங்­கேற்று இது­வரை 18000 அமெ­ரிக்க டொலரை பரி­சாக பெற்­றுள்ளார்.

இந்­நி­லையில் அவர், அள­வுக்­க­தி­க­மான உணவால் தனது நிறை அதி­க­ரிப்­பதை தடுக்க தின­சரி நடைப்­பயிற்சி, ஹொக்கி விளை­யாட்டு என்­ப­வற்றில் ஈடுபட்டு வருவதுடன் வாரத்துக்கு இரு தடவை பாரந்தூக்கும் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல