வியாழன், 10 அக்டோபர், 2013

தொப்புள் புகழ் நஸ்ரியாவும் தேவர்மகன் சிவாஜியும்

நம்ம தொப்புள் புகழ் நஸ்ரியாவும் தேவர்மகன் சிவாஜியும் இப்ப உள்ள சூழ்நிலைக்கு பேசினா எப்பிடி இருக்கும்?

சிவாஜி - அம்மாடி நஸ்ரியா...

(நஸ்ரியா தேடுகிறார் )

சிவாஜி - நாந்தேன்...இங்கிட்டு வா...

(நஸ்ரியா முன்னாடி வருகிறார் )

சிவாஜி - கமிசனர் ஆபிஸ் போனீங்களா?

நஸ்ரியா - ஆமாங்கையா...

சிவாஜி - தொப்புல படம் புடிச்சாய்ங்கன்னு சண்ட போட்டீகளே...இப்ப இந்த ஊரோட நிலம புரிஞ்சுதா?

நஸ்ரியா - நல்லாவே புரியுது...நான் செஞ்ச தப்பும் புரியுது! அதுக்கு தண்டனையா இந்த தமிழ் திரையுலக விட்டே போயிரலாம்னு இருக்கேன்...

சிவாஜி - திரையுலக விட்டு...ஹும்.. திரையுலக விட்டு போறீங்களா? நடந்ததுக்கு பரிகாரம் தேடாம திரையுலக விட்டு போறது கோழத்தனம் இல்ல?

நஸ்ரியா - அதுக்காக....

சிவாஜி - அதுக்காக?

நஸ்ரியா - அதுக்காக நடக்குற காவாளித்தனத்த ரசனைன்னு நினைசுகிட்டு இருக்கது முட்டாள்தனம் அய்யா...

சிவாஜி - இந்த காவாலிப்பய கூட்டத்துல கொப்பனும் ஒருத்தந்தாங்கிறத மறந்திராத...

நஸ்ரியா - அப்பிடிப்பார்த்தா நானும்தான்யா ஒருத்தி..ஆனா அத நினைச்சு பெருமைப்பட முடியல..200 வருஷம் பின்தங்கி இருக்கிற இந்த ஃபீல்டுல என் அழகை எல்லாம் வேஸ்ட்டாக்க விரும்பலயா..

சிவாஜி - 200 வருஷம் பின்தங்கிதான் போய்ட்டோம் ஒத்துக்கிறேன்.. 2000 வருசமா வேல்கம்பையும் அருவாவையும் தூக்கிகிட்டு வெற்றிவேல் வீரவேல்னு சுத்திகிட்டு இருந்த பயக..வருஷம் 16 படத்துல குஸ்பு குளிச்ச குளத்த பார்க்க ஓடிப்போயி வரிசைல நின்ன பயக முக்காவாசிப்பயக நம்ம பயகதான்...திடீர்னு அவன தொப்புல பார்க்காத விஞ்ஞானம் பேச வாடான்னா எப்பிடி வருவான்? நீதான் நடிகையாச்சே..கூட்டிகிட்டு வா..அங்க கூட்டிகிட்டு வா, ஆனா அந்தப்பயக மெதுவாதான் வருவான்..மெதுவாதான் வருவான்..

நஸ்ரியா - மெதுவான்னா எம்புட்டு மெதுவாயா? அதுக்குள்ளே நான் செத்துருவேன் போலிருக்கு?

சிவாஜி - போ..செத்துப்போ..நான் தடுக்க முடியுமா? எல்லாப் பயபுள்ளைகளும் ஒருநாளைக்கு சாக வேண்டியதுதான்.. வாழ்றது முக்கியம்தான் இல்லைன்னு சொல்லல, மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கைய வாழ்ந்துட்டு போறதுதான் அந்த சாவுக்கே பெரும..வெத வெதச்சவன்ன பழம் சாப்புடணும்னு நெனக்க முடியுமோ..நான் என் கடமைய செஞ்சுபுட்டேன்..நீ உன் கடமைய செஞ்சியா?

நஸ்ரியா - மூஞ்சிய படம் புடிக்க சொன்னா தொப்புல படம்புடிக்கிற இந்த காவாலிப்பய ஊர்ல என்ன கடமைய செய்ய சொல்றீங்ககையா?

சிவாஜி - நீ பெருசா பெரிய ஹீரோயினா வரணும்கிறதுக்காக... தான் பீரு குடிக்க வச்சிருந்த காசகூட எடுத்து ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்த்தானே அந்த காவாலிப்பய கூட்டத்துக்கு என்ன பண்ணுன நீ? ஏதாவது பண்ணு? அதுக்கப்பறம் இந்த ஃபீல்ட விட்டுப்போ... தொழிலதிபர கல்யாணம் பண்ணு அடுத்த நாளே டைவர்ஸ் பண்ணு..போயேன்..என்ன இப்ப..

நஸ்ரியா - இதெல்லாம் ஃபீல்டுல இருந்துதான் செய்யணும்னு இல்லையா.. நாலு கலை நிகழ்சிகளில் குத்தாட்டம் போட்டும் செய்யலாம்.. என்ன விடுங்கையா..நான் போறேன்...

சிவாஜி - போயிட்டு வர்றேன்னு சொல்லுங்களேன்.. அந்த நம்பிக்கைதான் ஒரு ரசிகனுக்கு முக்கியம்...பே .. எல யார்ரா அவன்? எங்கடா அந்த டைரெக்டரு?

சற்குணம் - ஐயா..

சிவாஜி - இங்கதான் இருக்கியா... அம்மணி இந்த ஃபீல்ட விட்டே போறாங்களாம்..ரொம்ப நாள் இங்க கலை சேவை பண்ண மாட்டாங்களாம்.. அவங்களுக்கு அந்த தொப்புள் போட்டோ நெகடிவ் எல்லாம் கொடுத்து அனுப்பிடு.. தெலுங்குல போயி.. தொப்புளுக்கு மட்டும் துணிய சுத்தி மனவாடுங்க ஆட விடுவானுங்க..அப்பறமா இங்கன வரட்டும்...

@ டெர்ரர் கும்மி

Facebook
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல