வியாழன், 10 அக்டோபர், 2013

கனடாவில் கௌரவம் பெறும் இறந்து போன தமிழ் பெண்!

The Manoranjana Kanagasabapathy Act, that will implement stricter fines and penalties for distracted driving

ஒன்ராரியோ மாகாண சபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது.

மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை என்கிற பெண் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வாகன விபத்தில் இங்கு அண்மையில் துரதிஷ்டமாக இறந்து உள்ளார். இவர் பயணித்த பஸ் வண்டி மீது ட்ரக் வண்டி மோதியது. பொறுப்பற்ற வாகன ஓட்டமே மரணத்துக்கு காரணம் ஆனது.

இந்நிலையில் இம்மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவரான பாஸ் பால்கிசூன் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக இதை சபைக்கு சமர்ப்பித்து உள்ளார்.

இது நிறைவேற்றப்படுகின்ற பட்சத்தில் மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை சட்டம் என்று அழைக்கப்படும்.

இது நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சட்டத்தில் கொண்டு வரப்படுகின்ற திருத்தம் ஆகும்.

தண்டப் பணம் 300 அமெரிக்க டொலர் முதல் 700 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்படுவது திருத்தத்தின் முக்கிய அம்சம்.

இச்சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இராது, அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றுவார்கள் என்று பால்கிசூன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
 
இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுடன் பால்கிசூன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல