வியாழன், 10 அக்டோபர், 2013

கனேடிய அரசாங்கம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக Divaina பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது!

இலங்கை::கனேடிய அரசாங்கம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக சிங்களப் Divaina பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

கனேடிய அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக புலிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது.

இது தொடர்பிலான தகவல்களை கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கனேடிய பிரதமர் ஸ்டிபன் ஹார்பர் இந்த பொலிஸ் அறிக்கையை வாசிக்கவில்லை.

கனேடிய அரசாங்கம் ஒரு ஆண்டில் 11 மில்லியன் டொலர்களை புலி ஆதரவு அமைப்பு ஒன்றுக்கு வழங்கியுள்ளது.

கனடாவின் இரண்டு வங்கிகளும், சிங்கப்பூரின் இரண்டு வங்கிகளும் புலிகளுக்கு நிதி வழங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 50,000 டொலர் பணம் அனுப்பி வைக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

புலிகளுக்கு நிதி திரட்டிய பிரதான நபர் மொன்டரல் நகரைச் சேர்ந்த மணிவன்னன் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனேடிய பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிய தகவல்களும் அம்பலமாகியுள்ளதாக Divaina பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல