சனி, 9 நவம்பர், 2013

சிறிலங்கா இராணுவத்தின் பாலியல் பலாத்காரங்கள்- பிபிசி வெளிப்படுத்திய ஆதாரம் ( வீடியோ)

போர் முடிந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டுமல்ல இப்போதும் சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் தமிழர்கள் சித்திரவதைக்குள்ளாகி வருவதாகவும் பிபிசி வெளியிட்டிருக்கும் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 12க்கு மேற்பட்டவர்கள் பாலிகல் பலாத்காரம் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இந்நிகழ்ச்சியை தயாரித்த பிரான்ஸிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

நந்தினி என்ற பெண்ணை வானில் கடத்தி சென்ற இராணுவத்தினர் இரவு பகலாக மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணை பரிசோதித்த பிரித்தானிய சட்டவைத்திய நிபுணர் ஒருவர் அப்பெண்ணின் பெண் உறுப்பு உட்பட 12 இடங்களில் சிகரட்டால் சுட்ட அடையாளம் காணப்படுவதாகவும் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இக்காணொளியை இங்கே காணலாம்





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல