சர்வதேச ஆயுத வியாபாரம் பற்றி மீடியாக்களில், ‘இந்த நாடு இவ்வளவு ஆயுதங்களை வாங்குகிறது’ என நான்கு வரி செய்தியுடன் அனேக டீல்கள் முடிந்து விடுகின்றன. சில டீல்களில் அவ்வளவுதான் செய்தியே! ஆனால், வேறு சில டீல்களின் பின்னணியில், ‘கண்ணைக் கட்டி காட்டில் விடும்’ சமாச்சாரங்கள் உள்ளன.
இதுவரை நடந்த சில ஆயுத டீல்களில் சுவாரசியமாக பல தந்திரங்கள் உள்ளது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்களில் பல கதைகள் அடிபடுவது வழக்கம். தமிழ் மீடியாக்கள் வரை இந்தக் கதைகள் வந்து சேர்வதில்லை. சாம்பிளுக்கு ஒன்று தருகிறோம், பாருங்கள். வாசகர்கள் ஆதரவு இருந்தால், தொடர்ந்து வெவ்வேறு சம்பவங்களை வெளியிடலாம்.
1998-ம் ஆண்டின் இறுதிப்பகுதி.
தான்சானியா (Tanzania – கிழக்கு ஆபிரிக்கா) நாட்டு அரசாங்கத்திற்கு வெளியே சொல்லமுடியாத ஒரு சங்கடம். இந்த அரசு, தனியார் நிறுவனம் ஒன்றுடன் செய்து வைத்திருந்த மிகச் சாதாரணமான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை சிலர் கண்களில் விளக்கெண்ணை விட்டு கவனிக்க தொடங்கி, விபரங்களை சேகரிக்கவும் தொடங்கினார்கள்.
இது வழமையாக நடப்பதுதானே.. அரசாங்கம், தனியார் நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் அதில் ஏதாவது ஊழல் நடந்திருக்கலாம் என்று எதிர்க்கட்சியினர் விபரங்களை சேகரிக்க தொடங்குவார்கள்தானே..
இது அந்த ரகம் அல்ல. இந்த வர்த்தக ஒப்பந்தம் பற்றிய தகவல்களை சேகரித்த ‘சிலர்’, எதிர்க்கட்சியினர் அல்ல. உளவுத்துறைகள்! அதுவும், சி.ஐ.ஏ. உட்பட, வெளிநாட்டு உளவுத்துறைகள்!
மிக துரிதமாக, எக்கச்சக்கமான துருவல்கள் எல்லா மட்டங்களிலும் திடீரென ஏற்படத் தொடங்கின. தான்சேனியாவில் இருந்த வெளிநாட்டு தூதரகங்கள் சிலவும் இந்த தனியார் வியாபார ஒப்பந்தம் பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்க, விவகாரம் ஹாட் ஸ்டஃப் ஆகியது.
இப்படிப் பரபரக்கப்பட்ட அந்த விற்பனை ஒப்பந்தம் எது பற்றியது தெரியுமா, ஆயுதங்களே, யுத்த தொழில்நுட்பமோ பற்றியது அல்ல.
கடல் உணவான இறால் விற்பனை சம்பந்தப்பட்டது!
தான்சானியா அரசு, ஒரு தனியார் நிறுவனத்துடன் இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வைத்திருந்தது. இரண்டுமே, வேறு வேறு விதமானவை, ஒன்றுடன் ஒன்று தொடர்பே இல்லாதவை.
அரசுடன் ஒப்பந்தம் செய்திருந்த அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் பெயர் ரெஜினால்டு நோலன். இவர் தான்சேனியா நாட்டவர் அல்ல, அயர்லாந்து நாட்டவர். இவரது நிறுவனத்துடன் தான்சானியா அரசு செய்துகொண்ட இரு ஒப்பந்தங்களில் ஒன்றுதான், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட இறால் விற்பனை ஒப்பந்தம்.
தான்சேனியாவில் உள்ள மாங்குரோவ் காட்டின் கடற்கரை பகுதியில் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் இறால் பண்ணை அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இறாலை வாங்கி, ஏற்றுமதி செய்யும் வர்த்தக நடைமுறை ஒப்பந்தம் அது.
இந்த அரசு – தனியார் விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி, தான்சானியா அரசுக்கு எல்லா மட்டங்களில் இருந்தும் நெருக்கடிகள் வரத்தொடங்கின. வெளிநாட்டு தூதரகங்கள் நேரடியாக தலையிட்டு, அரசு தலைமையுடன் பேசின. ஆனால், தலையீடு எல்லாமே ரகசியமாக நடந்தது.
என்ன விவகாரம் இது? இந்த ஐரிஷ்காரரின் நிறுவனத்துடன் தான்சேனியா அரசு இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வைத்திருந்தது. இரண்டுமே, வேறு வேறு ரகமானவை என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? ஒன்று, இந்த இறால் விற்பனை.
இரண்டாவது ஒப்பந்தம், ‘காதும் காதும்’ வைத்ததுபோல தான்சானியா பாதுகாப்பு அமைச்சுடன் செய்யப்பட்டிருந்தது. வருடத்திற்கு சுமார் 570,000 டாலர் பெறுமதியான ஆயுதங்களையும் யுத்த தளபாடங்களையும் பாதுகாப்பு அமைச்சுக்கு இறக்குமதி செய்து கொடுக்கும் ஒப்பந்தம் அது.
தான்சானியா அரசின் இந்த இரண்டாவது ஒப்பந்தம், ஒரு நிழலான ஒப்பந்தம். குறிப்பிட்ட ஒப்பந்தம் ரெஜினால்டு நோலனுக்கு கிடைப்பதற்கான காரணமே, அவரது நிறுவனத்திடமிருந்த கப்பல் போக்குவரத்து நெட்வெர்க். ஆபிரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரமாக அதிகமாக நடமாடும் கப்பல் நெட்வெர்க் அவருடையது.
இந்த ஐரிஷ்காரர், ஆரம்பத்தில் ஒரு நடுத்தர அளவுள்ள கப்பலை வைத்து, மீன் ஏற்றுமதி வியாபாரம் செய்தவர். அதன்பின் குறுகிய காலத்தில், ஆபிரிக்காவின் கிழக்கு கடலில் பெரிய கப்பல் நெட்வெர்க் ஒன்றை உருவாக்கினார். அந்தக் கப்பல்களின் எண்ணிக்கை பெருகியதன் காரணமே, 1980களில் தான்சானியாவுக்கு செய்யப்பட்ட ஆயுத விநியோகங்களில் கிடைத்த பணம்தான்.
இந்த ஆயுத சப்ளையிலுள்ள முக்கிய விஷயம் என்ன தெரியுமா?
தான்சேனியா அரசு ராணுவத்துக்காக வாங்கப்பட்ட ஆயுதங்களை கப்பல் மூலமாக கொண்டுவந்து கொடுத்தவர் மாத்திரமல்ல – அந்த ஆயுத இறக்குமதியில் தான்சானியா அரசுக்கும், சர்வதேச ஆயுதம் வியாபாரிகளுக்கும் இடையேயுள்ள இடைத் தரகரே ரெஜினால்டு நோலன்தான்.
இடையே புழங்கிய பணம் எக்கச்சக்கம்.
தான்சேனியா அரசுக்கும் நோலனுக்கும் இடையே இருந்த டீலே அலாதியானது.
வழமையாக ஒரு நாடு ஆயுதம் வாங்கும்போது, ஒரு பக்கத்தில் ஆயுத தரகர்களுடன் டீல் வைப்பார்கள். அவர் மூலமாக, ஆயுத வியாபாரிகளுடன் டீல் வைத்துக் கொள்வார்கள். ஆயுதங்களை ஏதாவது வெளிநாட்டில் வைத்து தமது பொறுப்பில் எடுத்துக் கொள்வார்கள். அதன்பின், கப்பல் நிறுவனத்துடன் ஒரு டீல் வைத்து, தமது நாட்டுக்கு கொண்டுவருவார்கள்.
ஆனால், தான்சேனியா அரசு – ரெஜினால்டு நோலன் ஆயுத டீல் அப்படியல்ல! ஆரம்பத்தில் இருந்து, ஆயுதங்கள் தான்சானியா வரை வந்து சேர்வது வரை ரெஜினால்டு நோலனின் பொறுப்பில் ஆயுதங்கள் இருக்கும்படியான ஒரு செட்டப். அதாவது பணம் கொடுப்பது மட்டும் தான்சேனியா அரசு. மீதி யாவும், ரெஜினால்டு நோலன் பொறுப்பு.
தான்சேனியா இந்த ரூட்டில் ஆயுதம் வாங்குகிறது என்ற விஷயம் சி.ஐ.ஏ.வுக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் அதில் தலையிடவில்லை. அதில் சிக்கல் ஏதாவது ஏற்படாதவரை தலையிடவும் முடியாது! ஆனால், நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
1998-ம் ஆண்டு ஆரம்பத்தில், தான்சேனியா, ஆயுத ஆர்டர் ஒன்றை ரெஜினால்டு நோலனின் நிறுவனத்திடம் கொடுத்தது. வெவ்வேறு ரக ஆயுதங்கள் அடங்கிய ஆர்டர் அது. ரெஜினால்டு நோலனும், ஒரே ஆயுத வியாபாரியிடம் வாங்காமல், வெவ்வேறு ஆயுத வியாபாரிகளிடம் வாங்கினார்.
அதாவது, எந்திர துப்பாக்கிகள் ஒரு இடத்தில் வாங்கப்பட்டன. தோளில் வைத்து இயக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றொரு இடத்தில் வாங்கப்பட்டன. டாங்கிகள் மற்றொரு வியாபாரியிடம் வாங்கப்பட்டன.
பொதுவாக, ஆயுத வர்த்தகத்தில் யாரும் ஒரே ஷிப்மென்டை இப்படி பிரித்து பிரித்து வேறுவேறு இடங்களில் வாங்குவதில்லை.
இந்த நடைமுறை, சி.ஐ.ஏ.வுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. என்ன நடக்கிறது என்பதை சற்றே க்ளோஸாக கவனிக்க தொடங்கினார்கள். அப்போதுதான், இந்த ஆயுத டீலில் யாரும் எதிர்பார்க்கவே முடிந்திராத தந்திரம் ஒன்று இருந்தது தெரியவந்து, சி.ஐ.ஏ.வே திகைத்துப் போனது, “ஆபிரிக்க மாயாஜாலமா இது?”
சி.ஐ.ஏ.வுக்கு ஆச்சரியம் ஏற்பட காரணம், ஆயுத வர்த்தகத்தில் யாரும் ஒரே ஷிப்மென்டை இப்படி பிரித்து பிரித்து வேறுவேறு இடங்களில் வாங்குவதில்லை.
காரணம், ஒரே இடத்தில் அனைத்தையும் வாங்கும்போது, சுமார் 20 சதவீதம்வரை விலையில் தள்ளுபடி கிடைக்கும் என்பது ஒரு விஷயம். மற்றைய விஷயம், ஒரே இடத்தில் வாங்கினால், ஏற்றுமதி பர்மிட், ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பின் சர்டிஃபிகேட், துறைமுக கிளியரன்ஸ் என பல நிர்வாக நடைமுறைகளை ஒரே இடத்தில் முடித்து விடலாம்.
வெவ்வேறு இடங்களில் ஆயுதங்கள் வாங்கும்போது, ஒவ்வொரு இடத்திலும் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். அதிக காலம் பிடிக்கும். செலவும் அதிகம். ஒரு இடத்தில் ஆயுதங்கள் ரெடியாகிவிட, மற்றைய இடத்தில் ரெடியாகாது. இதனால், முழு ஆயுதங்களையும் ஒரே கப்பலில் ஏற்ற முடியாது. அந்த வகையிலும் செலவு அதிகம்.
இதனால்தான், சி.ஐ.ஏ.வுக்கு இந்த ஆயுத டீல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. என்ன நடக்கிறது என்பதை சற்றே க்ளோஸாக கவனிக்க தொடங்கினார்கள்.
நாம் குறிப்பிட்டதுபோல, அனைத்து ஆயுதங்களும் ஒரே நேரத்தில் கிளம்ப முடியவில்லை. மொத்த ஆயுதங்களையும், 5 ஷிப்மென்ட்களாக பிரித்தார்கள். அவற்றில் இரு ஷிப்மென்ட்கள், இரு வெவ்வேறு துறைமுகங்களில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டன. இரு துறைமுகங்களில் ஆயுதங்களை ஏற்றியதும், ரெஜினால்டு நோலனின் கப்பல்கள்தான்.
இரு ஷிப்மென்ட்டுகளுக்குமான பணம், ஆயுத வியாபாரிகளுக்கு முழுமையாக செட்டில் செய்யப்பட்டிருந்தது. விற்பனை கான்ட்ராக்டின் பிரதிகள் சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும், தான்சேனியா நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கும் வந்து சேர்ந்தன. பர்மிட், மற்றும் இதர ஆவணங்கள் அனைத்துமே பக்காவாக இருந்தன.
இரு கப்பல்களும், ஒரே நாளில் ஆயுதங்களுடன் வந்து சேர்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஒரு கப்பலில்தான் ஆயுத ஷிப்மென்ட் வந்து சேர்ந்தது. மற்றைய கப்பல் திட்டமிட்டபடி வந்தது. அதில் ஆயுத ஷிப்மென்ட் ஏதும் இல்லை.
‘ஏதோ நடக்கிறது’ என்ற சந்தேகத்தில் இந்த டீலை கவனித்துக் கொண்டிருந்த சி.ஐ.ஏ. சுறுசுறுப்படைந்தது.
இரண்டாவது கப்பலில் ஏற்றப்பட்ட ஆயுதங்களுக்கு என்ன நடந்தது என்று ஆராய்வதற்கு முன், முதலாவது கப்பலில் வந்து இறங்கிய ஆயுதங்கள் பற்றிய ஆவணங்களை ஆராய்ந்தார்கள். அப்போதுதான், மற்றொரு விஷயத்தை கண்டு பிடித்தார்கள்.
இந்தக் கப்பலில் வந்து இறங்கிய ஆயுதங்களும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான்சேனியாவுக்கு வந்திறங்கிய ஆயுதங்களும், ஒரே சீரியல் நம்பர்களில் இருந்தன!
ஆம். தான்சானியா ராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளில் பத்திரமாக இருக்கவேண்டிய அதே சீரியல் நம்பர் ஆயுதங்கள், மீண்டும் கடலுக்குப் போய், ரெஜினால்டு நோலனின் கப்பல் மூலமாக 2 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் பழைய துறைமுகத்தில் வந்து இறங்கின!
இது என்ன ‘தான்சேனியா மாயாஜாலமா?’ என திகைத்த சி.ஐ.ஏ., என்ன நடந்தது என துருவ தொடங்கியபோது, கிடைத்த தகவல்கள் சுவாரசியமானவை.
புதிய ஷிப்மென்டில் வந்து சேர்ந்தவை பழைய ஆயுதங்கள் என்றால், கப்பலில் புதிதாக ஏற்றப்பட்டு தான்சானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களுக்கு என்ன நடந்தன?
இந்த விஷயங்களை சி.ஐ.ஏ. கிளறிய போதுதான், இறால் விற்பனையுடன் சம்பந்தமான ஏற்றுமதி இறக்குமதி செய்வதாக கூறப்பட்ட கப்பல்களில் ஆயுதங்களும் வெளியே போன சமாச்சாரம் தெரியவந்தது.
விவகாரம் என்னவென்றால், மொசாம்பிக் நாட்டு விடுதலை இயக்கம் ஒன்றுக்கு ஆயுதம் வாங்க வேண்டியிருந்தது. வெளியே பிளாக் மார்க்கெட்டில் ஆயுதம் வாங்குவதைவிட, ஒரு நாட்டின் லைசென்ஸை உபயோகித்து வாங்கினால், மலிவாகவும் வாங்கலாம், காம்பிரமைஸ் பண்ணாமல் தேவையாக ரக ஆயுதங்களையும் வாங்கலாம் (கறுப்பு சந்தையில் சில ரக ஆயுதங்கள் விற்கப்படுவதில்லை) என்பதால் செய்யப்பட்ட விளையாட்டு இது.
ரெஜினால்டு நோலன் இதில் பங்கு வகித்தார் என்பது உறுதியானது. ஆனால், தான்சேனிய நாட்டு அரசும் இதில் உடந்தையாக இருந்ததா என்பதை கடைசிவரை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், தான்சேனிய நாட்டு ராணுவ அதிகாரிகள் சிலர் இந்த டீலில் உதவி புரிந்தார்கள். அவர்கள் ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ உதவி புரிந்தார்கள் என்று அடித்து கூறிவிட்டது தான்சேனியா அரசு.
இவர்களது திட்டம் என்னவென்றால், தான்சேனியா நாட்டுக்கு ஆயுதங்கள் வாங்குவதாக ஆயுத வியாபாரிகளை தொடர்பு கொண்டு ஆயுதங்களை வாங்குவது. அதைவிட முக்கியமாக, ஆயுதங்களுக்கு ‘இறுதிப் பாவனையாளர் சான்றிதழ்’ பெறுவது. ஆயுத ட்ரேடில் இதை EUC என்று சொல்வார்கள். விரிவாக்கம், End-User Certificate.
ஆயுதங்களை கப்பலில் கொண்டு செல்லும்போது, கப்பல் மீது சந்தேகம் ஏற்பட்டு ஏதாவது நாட்டு கடற்படை இவர்களை வழிமறித்து கப்பலை சோதனை செய்து (பெரும்பாலும் அமெரிக்க கடற்படைதான் வழிமறிக்கும்) ஆயுதங்கள் சிக்கிக் கொண்டால், இந்த EUC ஒரு நாட்டின் பெயரில் இருந்தால், ஆயுதங்களை பறிமுதல் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஒரு நாடு வாங்கும் ஆயுதங்கள் என்ற வகையில், அனுமதிக்கப்படும்.
எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ஆயுதங்களை வாங்கினார்கள். அந்த ஆயுதங்கள் ரெஜினால்டு நோலனின் கப்பல்களில் ஏற்றப்படும். அவை தான்சேனியா கடல் எல்லை அருகே வரை பத்திரமாக வந்து சேரும். தான்சேனியா கடல் எல்லையில் வைத்து சிறிய படகுகளில் ஏற்றப்பட்டு மொசாம்பிக் போய் சேரும் என்பது திட்டத்தின் ஒரு பகுதி.
திட்டத்தின் இரண்டாவது பகுதி, வாங்கப்பட்ட ஆயுதங்கள் தான்சேனியாவில் வந்து இறங்கின என்று காட்டுவது.
அதற்காக இவர்கள் போட்ட திட்டம்தான் சூப்பர். ஏற்கனவே தான்சேனியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களில் ஒரு பகுதியை, ராணுவ ஆயுத களஞ்சியத்தில் இருந்து வெளியே கொண்டுவருவது. ரெஜினால்டு நோலனின் இறால் ஏற்றுமதி ஷிப்மென்ட்டுகளுடன் அவற்றை நாட்டுக்கு வெளியே கொண்டு செல்வது.
தான்சேனியா கடல் எல்லையில் வைத்து இந்த பழைய ஆயுதங்களை, புதிய ஆயுதங்கள் வந்த கப்பலுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்வது. அந்தக் கப்பல் தான்சேனியா துறைமுகத்துக்கு வரும்போது, அவற்றில் இருந்து ஆயுதங்கள் இறங்கும். அவை, ராணுவ ஆயுத களஞ்சியத்துக்கு கொண்டு செல்லப்படும். ஆபரேஷன் ஓவர்.
இந்த திட்டம்தான், சி.ஐ.ஏ.விடம் சிக்கிக் கொண்டது.
முதலில் இரு கப்பல்களில் வந்த ஆயுதங்கள், மொசாம்பிக் வரை போய் சேர்ந்தன. தான்சானியா ராணுவ ஆயுத களஞ்சியத்தில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள், இறால் ஏற்றுமதி பெட்டிகளுடன் கடலுக்கு சென்று, திரும்பி வந்தன.
அதில் இவர்கள் விட்ட ஒரேயொரு தவறு, பழைய ஆயுதங்களை இரு கப்பல்களிலும் ஏற்றாமல், ஒரே கப்பலில் ஏற்றியதுதான்.
தான்சேனியா துறைமுகத்துக்கு ஆயுதங்களுடன் வரவேண்டிய இரு கப்பல்களில் ஒரு கப்பலில் மட்டும் ஆயுதம் வந்தது, இப்படித்தான். அதுவே, இந்த ட்ரான்ஸாக்ஷன் மீது சி.ஐ.ஏ. சந்தேகம் கொள்ள காரணமாகியது.
சரி. கடைசியில் என்ன நடந்தது?
சி.ஐ.ஏ. இந்த விவகாரத்தில் புலனாய்வு செய்து, விஷயத்தை புரிந்து கொள்ள சுமார் 3 மாதங்கள் பிடித்தது. அதற்கிடையே புதிய ஆயுதங்களின் மீதி ஷிப்மென்ட்டுகள் 3 கப்பல்களில் கிளம்பி விட்டன. அவை தான்சேனியா வரை வந்து சேரவில்லை. பாதி வழியில் படகுகளில் ஏற்றப்பட்டு, மொசாம்பிக் தீவிரவாத இயக்கத்திடம் போய் சேர்ந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் சி.ஐ.ஏ.வுக்கு தெரிய வந்ததை அடுத்து, ரெஜினால்டு நோலனின் இறால் ஏற்றுமதி கான்ட்ராக்டை ரத்து செய்யும்படி, தான்சேனியா அரசுக்கு சில நாடுகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தமக்கு தெரியாமலேயே நடந்து விட்டது என்று கையை விரித்து விட்ட தான்சேனியா அரசு, இறால் ஏற்றுமதி கான்ட்ராக்ட்டை ரத்து செய்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டது.
இந்த விஷயம் இக்கட்டில் மாட்டிக்கொண்டதால், ரெஜினால்டு நோலனின் பணம் சுமார் ஒரு மில்லியன் டாலர் வரை தான்சானியா அரசிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. இறால் ஏற்றுமதி கான்ட்ராக்டில் நோலனுக்கு அரசு தரவேண்டிய பணம் அது. அது நோலனுக்கு கிடைப்பது கஷ்டம்.
ஆனால் அதைவிட பல மடங்கு பெறுமதியுள்ள ஆயுதங்கள், நோலனின் கப்பல்களில் இருந்து நடுக்கடலில் வைத்து, மொசாம்பிக் தீவிரவாத இயக்கத்துக்கு கைமாறி விட்டதாக சொல்கிறார்கள்.
இந்த மொசாம்பிக் தீவிரவாத இயக்கம் தொடர்பான மற்றொரு சுவாரசியமான கதையும் உள்ளது. வாசகர்களின் ஆதரவு இருந்தால், அந்த விஷயத்தையும் எழுதலாம்.
The End
விறுவிறுப்பு.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக