இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான பிரபல நடிகர்களுக்கு விசிட்டிங் கார்டு சின்னத்திரைதான். மறைந்த நகைச்சுவை நடிகர் சிட்டிபாபுவும் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து பிரபலமானவர்தான்.
நடிகர் சிட்டி பாபுவின் மீடியா பயணம் முதன்முதலாக ஜெயாடிவியில் தொடங்கியது. பாஸ்கியுடன் இணைந்து அவர் நடத்திய அரிகிரி அசெம்ளி பிரபலமானது.
சன் டிவியில் அவர் நடத்திய காமெடி டைம் நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை கிடைக்க வைத்தது. இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் வந்துள்ளார்.
சென்னையில் பிறந்த சிட்டிபாபு நண்பர்களுடன் இணைந்து வாய்ப்பு தேடியதில் கிடைத்ததுதான் ஜெயா டிவி வாய்ப்பு. நடிகரும், தொகுப்பாளருமான பாஸ்கியுடன் இணைந்து பிரபலங்களை கேள்வி கேட்கும் நிகழ்ச்சிதான் அரிகிரி அசெம்ளி. இந்த அறிமுகம் அவரது பயணத்தை மாற்றியது.
சன் டிவியில் இரவு பத்து மணிக்கு காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா உடன் தொகுத்து வழங்கினார். இதில் அவர் நிகழ்ச்சியை முடிக்கும் போது கூறும் கொக்கரக்கோ குமாங்கோ' ரசிகர்களிடையே பிரபலமானது.
இரவு நேர நிகழ்ச்சி ஒன்று 1000 எபிசோடுகளை தாண்டியது காமெடி டைம் ஆகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு பிரபலமானது. காரணம் ரசிகர்களின் வீட்டிற்கு போன் செய்து சிட்டிபாவும்,அர்ச்சனாவும் செய்த கலாட்டதான்.
இந்த பிரபலம்தான் தூள் படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது. இதுவரை 30 படங்கள் வரை நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிலீசுக்கு தயாராக உள்ள மூன்று படங்களும் இதில் அடங்கும்.
சன் டிவியில் நகைச்சுவைக் கலைஞர்களை அடையாளம் காணும் அசத்தப் போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் நடுவராக வந்தார். அதில் மார்க் போடுவதோடு மட்டுமல்லாமல் தொகுப்பாளின், சக நடுவருடன் இணைந்து இவர் செய்த காமெடி பிரபலமானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக