கண்ட்ரோல் பேனலில் கிடைக்கும் ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ் என்பதில் Set Program Access and Defaults எனத் தரப்பட்டிருந்தது. இதன் பொருள் என்ன?
உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சில வேலைகளுக்கான புரோகிராம்களை மாறா நிலையில் செட் செய்திட இந்த Set Program Access and Defaults வசதியினைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, இணையத்தில் பிரவுஸ் செய்திட பயர்பாக்ஸ், இமெயில் பெற தண்டர்பேர்ட், போட்டோ பார்க்க பிக்சர் மேனேஜர், பாட்டு கேட்க விண் ஆம்ப் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு புரோகிராமினை நீங்கள் விரும்பலாம்.
பாடல் பைல் ஒன்றைக் கிளிக் செய்தால், விண் ஆம்ப் இயக்கப்பட்டு அந்த பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என நீங்கள் விருப்பப்படலாம்.
இப்படி குறிப்பிட்ட புரோகிராம்களை, குறிப்பிட்ட பணிகளுக்கு செட் செய்த பின்னர், அந்த புரோகிராம்கள் டிபால்ட், அதாவது மாறா நிலையில் உள்ள, புரோகிராம்கள் என அழைக்கப்படும்.
அவ்வாறு அமைத்திட இந்த வசதியினைப் பயன்படுத்தலாம்.
ஆனால் ஓர் எச்சரிக்கை. இதனை மேற்கொள்ள நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராகக் கம்ப்யூட்டரை அணுகி இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக