வியாழன், 28 நவம்பர், 2013

பாப் அப் பிளாக்கர்

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பாப் அப் பிளாக்கர்,சில வேளைகளில் நல்ல தகவல் களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களையும்ம் தடை செய்து விடுகின்றது. இந்த பிரச்னையை எப்படித் தீர்ப்பது?

பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில், நீங்கள் அனுமதிக்கும் பாப் அப் செய்திகளுக்கான ஒயிட் லிஸ்ட் போன்ற ஒன்றைத் தயாரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்ல் Tools>>Pop Up Blocker என்று செல்லவும்.

இதில் Pop Up Blocker Settings என்று கிடைக்கும். இப்போது ஒரு சிறிய பாக்ஸ் கிடைக்கும்.

இதில் நீங்கள் "Address of Web site to allow" என்று இருக்கும் இடத்தில், எந்த இணைய தளங்களில் இருந்து வரும் பாப் அப் விண்டோக்கள் தேவையோ, அவற்றின் முகவரிகளை டைப் செய்திடவும். பின் "Add" என்ற பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.

இனி அந்த தளத்திற்குச் சென்றால், இந்த தளம் தரும் பாப் அப் விண்டோக்கள் தடையின்றி வருவதனைக் காணலாம்.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொகுப்பிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. Tools/Options சென்று Content டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் "Block Popup Windows" என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால், "Exceptions..." என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இதில் நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்து, அதன் பின் "Allow" பட்டனை அழுத்தவும். இது அந்த தளத்திற்கு பாப் அப் தடையை நீக்கிவிடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல