வியாழன், 28 நவம்பர், 2013

பவர் பாய்ண்ட்டில் கிராபிக்ஸ்

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் கிராபிக்ஸ் ஏதேனும் பயன்படுத்தினால் அதற்கான ஆப்ஜெக்டை ச் சரியான இடத்தில் வைத்திட வேண்டும். இல்லை என்றால் உங்களின் திறமை அவ்வளவுதானா? என்று மற்றவரை எண்ண வைத்துவிடும். அதற்கான சில வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன.

1.கிரிட் – ஐ எப்போதும் பயன்படுத்துங்கள்: கிரிட் என்பது நெடுவிலும் படுக்கையாகவும் நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கோடுகள் ஆகும். இந்த கோடுகளுக்கு அருகே எந்த பொருளை/படத்தை வைத்தாலும் கோடுகள் அருகே பொருட்கள் இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும். இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல் திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும். இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் கிரிட் கோடுகளைக் காட்டவும் மறைக்கவும் உள்ள பட்டனைத் (Show/Hide Grid) தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட் (Standard) டூல் பாரில் உள்ளது. அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 (Shift + F9) பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்–ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் ஆல்ட் பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.

2. கைட் லைன்களின் (Guidelines) உதவி: ஆப்ஜெக்ட் ஒன்று நெட்டு வரிசையிலோ அல்லது படுக்கைவசத்திலோ அமர வைக்க வேண்டும் என்றால் ஸ்கிரீனில் கோடுகளை ஏற்படுத்தி பயன்படுத்துங்கள். இதற்கு Alt + F9 கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9 அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும். இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். இது உங்களுக்குப் போதவில்லையா? கண்ட்ரோல் (Ctrl) அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே விட்டுவிடவும்.

நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது. இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்கினால் நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும் என்றால் இழுக்கும்போது ஷிப்ட் (Shift) கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.

3. கிரிட் மற்றும் கைட்லைன் செட் செய்யும் வழி: Ctrl + G கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும், கிடைக்காதபடியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் ஆல்ட் கீ அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.

4. துல்லிதமான அளவில் அமைத்திட: ஆப்ஜெக்ட் ஒன்றை, மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ அதற்கான ஆரோ கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ (Ctrl) அழுத்தி சம்பந்தப்பட்ட ஆரோ கீயினை அழுத்தவும்.

5. ஆப்ஜெக்டை இரு திசையில் வேகமாக நகர்த்த: ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட் (குடடிஞூt) கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மாறுபக்கத்திலும் செய்ய முடியாது.

போனஸ் டிப்ஸ்: ஆப்ஜெக்ட் ஒன்றை இழுக்கையில் அதனை இன்னொரு காப்பியும் செய்திட வேண்டும் என்றால் இtணூடூ கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டுமென்றால் Ctrl மற்றும் Shift கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல