வியாழன், 26 டிசம்பர், 2013

விண்டோஸ் 7 - டிப்ஸ்: டாஸ்க்பார் சுத்தம்

டாஸ்க்பாரில் கடிகாரம், வால்யூம், பவர் லெவல், நெட்வொர்க் மற்றும் சில ஐகான்களை மறைத்து வைக்கலாம். உங்களுக்குத் தேவையில்லாத பட்சத்தில், எதற்காக நீண்ட குப்பை போல இவை தோற்றமளிக்க வேண்டும்? இதற்கான வேலைகள் என்ன என்று பார்ப்போமா!

1.டாஸ்க்பாரின் வலது பக்கத்தில், மேல் நோக்கி உள்ள அம்புக் குறி ஒன்றைக் காணலாம். அதன் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று சுழற்றுங்கள். அப்போது "Show hidden icons” என்ற சிறிய அறிவிப்பு பட்டன் ஒன்றில் கிடைக்கும்.

2. இந்த பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், "Customize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இப்போது "Notification Area Icons” கண்ட்ரோல் பேனல் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் கீழாக, "Turn system icons on or off” என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது இந்த விண்டோ "Turn system icons on or off” என்ற விண்டோவாக மாறும். இனி ஏதேனும் சிஸ்டம் ஐகான், எடுத்துக்காட்டாக "Clock”, “Volume”, “Network”, “Power”, and “Action Center”, என்பதில் கீழாக இழுக்கவும். இதனை வைத்துக் கொள்ளவா வேண்டாமா என்பதற்கு "On” or “Off” என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். இனி நீங்கள் தேர்ந்தெடுத்தபடி மட்டுமே ஐகான்கள் டாஸ்க்பாரில் காட்டப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல