வியாழன், 26 டிசம்பர், 2013

நேராக டெஸ்க்டாப் செல்ல

விண்டோஸ் 8 வெளியான பின்னர், டெஸ்க்டாப் திரை கிடைக்காமல், மெட்ரோ திரை தரப்பட்டு, அதில் ஒரு கட்டம் டெஸ்க் டாப்பாகத் தரப்பட்டது. இதில் கிளிக் செய்து அல்லது விரலால் தடவி, நாம் டெஸ்க்டாப் திரையைப் பெற வேண்டியிருந்தது.

விண்டோஸ் 8.1ல், நாம் நேரடியாகவே டெஸ்க்டாப் திரைக்குச் செல்ல வழிகள் தரப்பட்டுள்ளன.

இதற்கு, நீங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும்போது, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும்.

அப்போது எழுந்து வரும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும்.

பின்னர், மேலாக உள்ள Navigation டேப்பில் கிளிக் செய்திடவும்.

இதில் நான்காவது ஆப்ஷனாக "When I sign in or Close all applications on a screen, go to the desktop instead of Start” எனத் தரப்பட்டிருக்கும்.

இதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அதன் பின்னர், apply என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்த முறை நீங்கள் கம்ப்யூட்டரை பூட் செய்கையில், கம்ப்யூட்டர் இயக்கம், நேரடியாக டெஸ்க்டாப் சென்று திறக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல