சனி, 21 டிசம்பர், 2013

இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள அமெரிக்காவுக்கு அறிவுரை

அயல்நாட்டு தூதரக அதிகாரிகளை நடத்தும் விஷயத்தில் இந்தியாவை பார்த்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் கூறியிருக்கிறார். இந்திய பெண் துணை தூதர் தேவயானி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய அமெரிக்க அரசுகளுக்கு இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை சுஜாதா சிங், தூதரக அதிகாரிகளை நடத்துவது பற்றி இந்தியாவிடமிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது. வீட்டிப் பெண் பணியாளருக்கு விசா பெற்றதில் தேவயானி பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதை அமெரிக்க சட்டங்கள் படி அலட்சியப்படுத்த முடியாது என அந்நாடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெறவும் அந்நாடு மறுத்துள்ளது. இதனையடுத்து தேவயானியை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வருவது குறித்து மாநிலங்களவையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Dinakaran
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல