கர்ப்பம் தரித்த ஆரம்பத்தில் பப்பாசி, அன்னாசி, வெரலு ஆகியவற்றை உண்பதை தவிர்த்துக் கொள்க. உடல் அழகுக்காக அருந்தும் மருந்து வகைகள் கர்ப்பச் சிதைவையும் அல்லது விகாரமான குழந்தை பிறக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கும்.
கர்ப்பம் தரித்தது முதல் குழந்தை பிறக்கும் வரை கணவனும் மனைவியும் பல்வேறு கனவுகளுடன் காணப்படுவர். கர்ப்பமுற்று மூன்று மாதங்கள் கடந்த பின்னரே கர்ப்பம் நிரந்தரமானதெனக் கருத முடியும். கர்ப்பமுற்று மூன்று மாதங்களுக்குள் கர்ப்பச் சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. இது போன்ற நிலைமை தாய் - தந்தை என்ற ரீதியில் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
கருச்சிதைவு என்பது கருவிலுள்ள குழந்தை பிறப்பதற்கு முன்னரே கருவிலேயே சிதைந்து விடுவதே கருச்சிதைவாகும். அதன் பின்னர் அக்கரு உதிரமாக வெளியேறும். கருச்சிதைவு உடல் ரீதியாகவும் உள ரீதியாகும் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமையாகும்.
கருச்சிதைவு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒன்றரை மாதத்துக்குள் எச்சந்தர்ப்பத்திலோ கருச்சிதைவு ஏற்படலாம்.
அடிப்படை காரணங்களாக உடல் ரீதியான உள ரீதியான பாதிப்புக்களும், ஆயுர்வேதத்தின்படி பித்தம், சளி போன்ற காரணங்களாலும் இரத்தக் குறைபாடு, கர்ப்பப்பை உயர்வது, உடற்கூறு அதிகரிப்பது கர்ப்பச் சிதைவுக்கு காரணமாக இருக்கலாம்.
உளரீதியான காரணங்கள்
மாதாந்தம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கர்ப்பம் தரித்தவுடன் நின்று விடும். இருந்தும் பல இளம் தாய்மார் கர்ப்பமடைந்த பின்னரும் இது குறித்து நினைக்கின்றனர். மாதவிடாய்க்கு தயாராகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மாதவிடாய் ஏற்பட்டு கரு கலைந்து விடுவதுமுண்டு.
இதேபோல், உளரீதியான களைப்பு பல பெண்களை பாதிக்கின்றது. குழந்தை பிறக்கும் போது கடுமையான வேதனைகள் ஏற்படுமா உயிராபத்து ஏற்படுமா? போன்ற எண்ணங்களால் மனக்கிலேசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதுவும் கருச்சிதைவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
இதேபோல், குடும்ப சூழலுக்குள் மாமி- மச்சாள்மாருக்கிடையில் ஏற்படும் சச்சரவு, குடிகாரக் கணவனால் ஏற்படும் மனக்கவலை மற்றும் பொருளாதாரக் கஷ்டத்தால் ஏற்படும் கவலையும் கருச்சிதைவு ஏற்படக் காரணமாக இருந்து விடலாம்.
பிழையான உணவுப் பழக்கங்கள்
பல தாய்மார் கருவுற்றதும் அதிக அமிலங்கள் மற்றும் மிளகாய் கார மடங்கிய உணவு வகைகள், அன்னாசி, வெரலு ஆகியவற்றை உட்கொள்ளக்கூடாது. இவற்றை தவிர்த்து விட வேண்டும். இதேபோல் இந்த அமில உணவு வகைகளில் உப்பு, மிளகாய் போன்றவற்றை கலந்து உண்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இது போன்றவை கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்ததல்ல.
அதேபோல் செயற்கை சுவையூட்டிகள் கலந்த அஜினோமோட்டோ செயற்கை வர்ண மூட்டிய நாவுக்கு சுவையான உணவு வகைகள் உட்கொள்வதாலும் கருச்சிதைவு ஏற்படும்.
இதே போல் மாட்டிறைச்சியை அதிகமாக உண்பதும் தவிர்க்கப்பட வேண்டும். பழங்கள் உணவுகளை நீண்ட காலம் வைத்திருப்பதற்காக பாவிக்கப்படும் போமலின் அடங்கிய உணவு வகைகளும் கர்ப்பந்தரித்திருக்கும் போது தவிர்க்கப்பட வேண்டும். சொசேஜஸ், மீட்போல்ஸ் போன்ற தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், ஏற்கனவே சமைத்த உணவுகள் கருச்சிதைவை ஏற்படுத்தலாம்.
அதேபோல் பழவர்க்கமான பப்பாசியை கர்ப்பமடைந்து சில மாதங்கள் உண்ணக்கூடாது. பப்பாசிப் பால் நேரடியாக கர்ப்பப்பைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
செயற்கை மருந்து வகைகள்
மேற்கத்திய வைத்திய விஞ்ஞான செயற்கை மருந்து வகைகளும் கருச்சிதைவை ஏற்படுத்தலாம் தலைமயிர் வளர்வதற்கு சருமத்தின் நிறத்தை பளிச்சிடச் செய்ய, உடம்பை பாதுகாக்கவென லேபல்களுடன் சந்தையில் விற்பனைக்கு வரும் மருந்து வகைகள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும். இதற்கு மேலதிகமாக சேர்க்கையான வலி நிவாரணிகள் கர்ப்பச் சிதைவை ஏற்படுத்தக் கூடியவையாகும்.
கர்ப்ப காலத்தில் ஏதோவொரு காரணத்துக்காக செயற்கையான மருந்து வகைகளை பாவித்தால் கர்ப்பச்சிதைவு ஏற்படலாம். அல்லது கர்ப்பம் விகாரமடையக் கூடுமென்பதால் வைத்தியரின் ஆலோசனையின்படி மருந்து வகைகளை பாவிக்க வேண்டும்.
அதேபோல் சிற்சில காரணங்களால் முன்னர் கருச்சிதைவுக்குள்ளான மற்றும் கருச்சிதைவு ஏற்பட்ட தாய்மார் மீண்டும் கருச்சிதைவுக்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. பெரும்பாலும் 100 சதவீதத்தினருக்கு இந்த நிலை ஏற்படா விட்டாலும் பெரும்பாலானோருக்கு கருச்சிதைவு ஏற்பட இடமுள்ளது.
கர்ப்பச்சிதைவை தவிர்க்க
வைத்திய நிபுணரொருவரின் ஆலோசனையைப் பெற்று மருந்து வகைகளைப் பாவிப்பது கர்ப்பச்சிதைவை தடுக்கக் கூடியதாகவிருக்கும்.
அதேபோல் பஸ் வண்டிகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்வதால் கர்ப்பப்பை அதிர்வதை தவிர்த்துக் கொள்ள ேவண்டும். கர்ப்பிணிகள் ஆரம்ப காலத்தில் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உடம்பின் உஷ்ணத்தை அதிகரிக்கக் கூடிய இறால், கணவாய், வினாகிரி ஆகியன அடங்கிய உணவு வகைகள் கர்ப்பப்பையில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம் என்பதால் இது போன்ற உணவு வகைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் கர்ப்பிணித் தாய்மார் சுதந்திரமாக நிம்மதியாக காலத்தைக் கழிக்க வேண்டும். அதிக களைப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மிக சுதந்திரமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆடைத் தொழிற்சாலை போன்ற இடங்களில் கடமையாற்றும் கர்ப்பிணித் தாய்மாரும் நடந்து கொண்டே தொழில் புரியும் கர்ப்பிணித் தாய்மாரும் கர்ப்பச்சிதைவுக்குள்ளாகும் சந்தர்ப்பம் அதிகமாகவிருப்பதால் இத்தாய்மார் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கருச்சிதைவுக்கு ஆயுர்வேத சிகிச்சை
வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்வது குறித்து கர்ப்பிணிகள் ஆரம்பம் முதலே கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்பிணிகள் உள ரீதியாக நிம்மதியாகவும் ஓய்வாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் கருச்சிதைவு ஏற்படும் போது உடம்பிலிருந்து பெருமளவு உதிரம் வெளியேறுவதால் மீண்டும் கருத்தரிக்கவோ அல்லது சாதாரண நிலையில் இருக்க முடியாதவாறு உடல்நிலை பலவீனமடையும் என்பதால்.
எனவே பால் சுறாமீன், கடல் மீன் வகைகள் மற்றும் இரும்புச் சத்து அடங்கிய உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
வெள்ளைப் பூண்டு, வெந்தயம், மிளகு, சீரகம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் கருச்சிதைவின் பின்னர் கருப்பப்பையை சுத்தப்படுத்த ஏதுவாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக