ஞாயிறு, 15 டிசம்பர், 2013

கர்ப்ப கால ஆரம்பத்தில் ஏற்­படும் குரு­திக்­க­சிவு

ஒரு பெண் கருத்­த­ரித்து சிசுவைப் பிர­ச­விக்கும் காலம் வரை­யான அந்த 40 வாரங்­களில் பல­வித சிக்­கல்­க­ளுக்கு முகங் கொடுக்க வேண்டி ஏற்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான சிக்­கல்­களில் ஒன்­றுதான் கர்ப்ப காலத்தில் ஏற்­படும் குரு­திக்­க­சி­வு­க­ளாகும். அதிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் அதா­வது முதல் வரும் 28 வாரங்­களில் ஏற்­படும் குரு­திக்­க­சி­விற்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பது அவ­சியம்.



ஒரு பெண் கர்ப்­பந்­த­ரித்து பல­வித எதிர்­பார்ப்­பு­க­ளுடன் அவளின் குடும்­பத்­த­வர்­களும் அவளும் மகிழ்ச்­சி­யுடன் இருக்கும் போது, இவ்­வா­றான ஆரம்ப கர்ப்ப காலத்­தி­லேற்­படும் குரு­திக்­க­சி­வுகள் அவர்­களை வெகு­வாக தாக்­கத்­திற்­குள்­ளாக்­கு­கின்­றன. இவ்­வாறு ஆரம்ப கர்ப்ப காலத்­தி­லேற்­படும் குரு­திக்­க­சி­விற்கு பல கார­ணங்கள் இருந்­தாலும் பெண்கள் நினைப்­பது கரு கலைந்து போவ­தற்­கான அறி­கு­றி­யா­கவே அது உள்­ள­தென. ஆகை­யினால் இவ்­வாறு ஆரம்ப கர்ப்ப காலத்­தி­லேற்­படும் குருதிக்கசி­வெல்லாம் கரு கலை­வ­தற்­கான (Miscarriage) அறி­கு­றி­யல்ல என்­ப­தனை விளங்க வேண்டும். எனவே ஆரம்ப கர்ப்ப காலத்­தி­லேற்­படும் குருதிக் கசி­விற்­கான கார­ணங்­களை ஆராய்வோம்.

இயற்கையாக ஏற்படும் கருக்­க­லையும் நிலை

கருத்­த­ரித்த ஒரு பெண்ணில் ஆரம்ப கர்ப்­ப­கா­லத்தில் இயற்­கை­யா­கவே குரு­திக்­க­சிவு ஏற்­பட்டு கருக்­க­லைந்து போகின்­றது. இந்த ஆரம்ப காலம் எமது நாட்டில் முதல் 28 வாரங்கள் என வரை­ய­றுக்­கப்­பட்­டாலும், மேலை நாடு­களில் முதல் 24 வாரங்கள் என வரை­ய­றுத்­துள்­ளனர். இதற்குக் காரணம் 24 வாரங்­களின் பின் கரு ஒன்று பிர­ச­விக்­கப்­பட்டால் அதனைக் காப்­பாற்றக் கூடிய வச­திகள் அந்­நாட்­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் எமது நாட்டில் காணப்­படும் மருத்­துவ வச­திகள் ஒரு கரு 28 வாரங்­களின் பின்னர் பிர­ச­விக்­கப்­பட்டால் மட்­டுமே அதனை காப்­பாற்றப் போது­மா­ன­வை­யாக உள்­ளன.

இயற்­கை­யாகக் கரு கலைந்து போகும் நிலையின் வகைகள்

ஆரம்ப கர்ப்ப காலத்தில் குரு­திக்­க­சிவு ஏற்­பட்டு எந்­த­வித வயிற்று வலியும் இல்­லாமல் உள்ளே இருக்கும் கருவும் எந்­த­வித சிக்கல் இல்­லாமல் தொடர்ந்து ஆரோக்­கி­ய­மாக வளரும். இதனை ஒரு அச்­சு­றுத்தும் வகை என குறிப்­பி­டலாம். இவ்­வாறு குரு­திக்­க­சிவு ஏற்­படும் போது தமது கரு­வுக்கு ஏதோ சிக்கல் என பெண்கள் அஞ்­சு­வதும், பின்னர் ஒரு ஸ்கேன் (Scan) பரி­சோ­த­னையை செய்து பார்க்கும் போது கரு எவ்­வித சிக்கலும் இல்­லாமல் ஆரோக்­கி­ய­மாக இருப்­பதும் வழக்கம். இதற்கு மேல­திக சிகிச்­சைகள் தேவை­யில்லை. இந்­நி­லையில் மேலும் அவ­ரது கர்ப்­ப­காலம் எவ்­வித சிக்­கலும் இல்­லாமல் தொடர வாய்ப்­புள்­ளது. இவ்­வ­கையை நாம் அச்­சப்­ப­டுத்­திய குரு­திக்­க­சிவு என அழைப்போம் (Threatend Miscarriage)

இரண்­டா­வது வகையில் கரு­வா­னது தாயின் வயிற்­றி­னுள்ளே இறந்து அல்­லது கலைந்து போயி­ருக்கும். பெரி­த­ளவில் வயிற்று வலியோ அல்­லது குருதிக் கசிவோ ஏற்­ப­டாது. ஆனால் சாதா­ரண மருத்­துவ பரி­சோ­த­னைக்கு அவர்கள் வரும் போது நாம் ஸ்கேன் செய்தால், கரு இவ்­வாறு வளர்ச்­சி­யற்று உள்ளே இறந்து அல்­லது கலைந்து இருப்­ப­தனைக் காணக் கூடி­ய­தாக இருக்கும். இது பெண்­ணி­னது தவ­றி­னாலோ அல்­லது அவ­ரது கண­வ­ரது தவ­றி­னாலோ ஏற்­பட்­ட­தல்ல எனும் விட­யத்தை அவர்­க­ளுக்கு எடுத்துக் கூறி அவர்­க­ளுக்கு தேவை­யான ஆறு­த­லையும் ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கு­வது எமது கடமை. இவர்­க­ளுக்கு அடுத்த முறை நிச்­சயம் சிறந்த கரு உரு­வாக வாய்ப்­புள்­ளது. இவ்­வ­கை­யான கரு கலையும் நிலையை அமை­தி­யான கருக்­க­லைவு என அழைப்போம். (Silent Miscarriage)

மூன்­றா­வது வகை­யான கருக்­க­லையும் நிலை மிக முக்­கி­ய­மான வகை. இதன்­போது அதி­கூ­டிய வயிற்­று­வலி மற்றும் குரு­திப்­போக்கு என்­ப­வற்­றுடன் அவ­ச­ர­மாக வைத்­தி­ய­சா­லைக்கு வரு­வார்கள். இதன்­போது இவர்­க­ளது கரு கலைந்து இரத்­த­மா­கவும் சிறு சிறு துண்­டு­க­ளா­கவும் வெளி­யேறும். இந்­நி­லையில் இவர்­க­ளது வயிற்று வலி மற்றும் குரு­திப்­போக்­கிற்கு அவற்றைக் கட்­டுப்­ப­டுத்தும் சிகிச்­சைகள் வழங்­கு­வது அவ­சியம். இவ்­வகை (Incomplete Miscarriage) என அழைப்போம்.

சில­வே­ளை­களில் கலைந்து போன கரு துண்­டு­க­ளாக தாமா­கவே இரத்தப் போக்­குடன் வெளி­யேறி இறு­தியில் மிகுதி எதுவும் கர்ப்­பப்­பையில் தங்­காமல் பூர­ண­மாக வெளி­யேறி விடும். இவர்­க­ளுக்கு மேல­திக சிகிச்­சைகள் எதுவும் தேவை­யில்லை.

இயற்­கை­யாக கரு கலைந்து போவ­தற்­கான கார­ணங்கள்

இயற்­கை­யாக கருக்­க­லைதல் ஒரு பொது­வான பிரச்­சினை. கர்ப்பம் தரித்த 5 பெண்­களை எடுத்தால் அதில் ஒரு­வருக்கு இவ்­வாறு இயற்­கை­யாக கருக்­கலைந்து போகும் நிலை ஏற்­பட வாய்ப்­புள்­ளது. எனவே இது ஒரு பொது­வான பிரச்­சினை. இதற்குக் கார­ணங்­க­ளாக இருக்­கக்­கூ­டி­யது உரு­வான கருவின் நிற­மூர்த்­தங்­களின் அதா­வது பரம்­பரை அல­கு­களின் பல­வீ­னமும் குறை­பா­டுமே ஆகும். இது சற்று வயது கூடிய பெண்கள் கருத்­த­ரிக்­கும்­போது கூடு­த­லாக ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

ஏனைய கார­ணி­க­ளாக நுண்­ணுயிர் தொற்று, கர்ப்­பப்­பையின் உட்­கட்­ட­மைப்பு குறை­பா­டுகள், நீரி­ழிவு நோய், சில மருந்துப் பதார்த்­தங்கள் என்­பன அமையும்.

இயற்­கை­யாக ஏற்­படும் கருக்­க­லை­த­லுக்கு மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­த­னைகள்.

கருக்­க­லை­தலை உறு­திப்­ப­டுத்த ஸ்கேன் பரி­சோ­தனை மற்றும் குருதி வர்க்கம் என்­ப­வற்றை அறியும் பரி­சோ­த­னைகள் அவ­சியம். ஒரு முறை கரு கலைந்­த­வர்­களில் கருக்­க­லை­தலை ஏற்­ப­டுத்­திய கார­ணி­களை கண்­ட­றியும் பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­வ­தில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கரு கலைந்தால் இதற்­கான பின்­னணி கார­ணி­களைக் கண்­ட­றியும் விசேட இரத்தம் மற்றும் ஹோர்மோன் பரி­சோ­த­னைகள் அவ­சியம்.

இயற்­கை­யாகக் கரு கலைந்­த­வ­ருக்குத் தேவை­யான சிகிச்சை

கரு ஒன்று இறந்­த­தாக அல்­லது கலைந்து விட்­ட­தாக உறு­திப்­ப­டுத்­திய பின்னர் இதற்­கான சிகிச்­சைகள் 3 வழி­களில் மேற்­கொள்­ளப்­படும்.

முத­லா­வது: இவர்­களை இரு வாரங்­க­ளுக்கு எவ்­வித சிகிச்­சை­களும் மேற்­கொள்­ளாது காத்­தி­ருக்­கும்­போது உள்ளே உள்ள கலைந்த கரு தானா­கவே மாத­விடாய் போன்ற இரத்­தப்­போக்­குடன் வெளி­யே­றக்­கூ­டிய வாய்ப்­புள்­ளது. இவ்­வாறு வெளி­யே­றிய பின் மேல­திக சிகிச்­சைகள் தேவைப்­ப­டாது.

அடுத்த சிகிச்சை வகை:

இவ்­வாறு கரு கலைந்து உள்­ள­வர்­க­ளுக்கு சில­வகை மருந்­து­களை வழங்கி அவற்றை கர்ப்­பப்­பை­யி­லி­ருந்து வெளி­யேற்ற முடியும் இதுவும் கூடு­த­லா­ன­வர்­க­ளுக்கு வெற்­றி­ய­ளிக்கும்.

இறு­தி­யா­க­வுள்ள சிகிச்சை முறை: வயிறு கழு­வுதல் என அழைக்­கப்­படும் சத்திர சிகிச்சை முறையில் கலைந்துள்ள கருவின் பாகங்களை முற்றாக அகற்றுதல் ஆகும். இது ஒரு சத்திரசிகிச்சை முறையாக இருப்பதால் இதனை இறுதித்தீர்வாக முன்வைப்போம்.

எனவே இயற்கையாக நடைபெறும் கருக்கலையும் நிலை கர்ப்பமாகும் பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை இது குறித்து மனம் சோர்ந்து விடாது இருக்க வேண்டும். இது ஆரோக்கியமற்ற நிறமூர்த்த அலகுகளின் குறைபாடுகள். கருவே கலைந்து போகின்றதே தவிர இது உங்களின் தவறினால் நடப்பதில்லை.

இது ஒரு முறை நடத்தால் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு மிகமிகக்குறைவு. இது துரதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் நடைபெற்றால் இதற்கான காரணங்களை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

டாக்டர் கு.சுஜாகரன் 
மகப்பேற்று பெண் நோயியல் 
சத்திரசிகிச்சை நிபுணர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல