ஞாயிறு, 15 டிசம்பர், 2013

கறுப்­பின மக்­க­ளுக்­காக போர்க்­கொடி தூக்­கிய மாம­னிதர்

முன்னாள் தென் ஆபி­ரிக்கா ஜனா­தி­பதி நெல் சன் மண்­டே­லாவின் மரணச் சடங்கு இன்று நடை­பெ­று­கி­றது.இறுதி அஞ்­சலி நிகழ்வில் 60 இற்கும் மேற்­பட்ட உலக தலை­வர்கள் கலந்து கொள்­கி­றார்கள்

தென்­னா­பி­ரிக்­காவில் சோஸா என்னும் பழங்­குடி மக்கள் வாழ்ந்து வந்­தனர். இந்தப் பழங்­குடி இனத்தின் ஒரு பிரி­வினர் தெம்பு மக்கள் என்று அழைக்­கப்­பட்­டனர். தெம்பு இன அரசர், தெம்பு மக்­களின் தலை­வ­ராக காட்லா அவர்­களை நிய­மித்­தி­ருந்தார். நிய­மனம் செய்த அரசர் பிரித்­தா­னி­யாவால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டவர். மரி­யா­தைக்­கு­ரிய பதவி, செல்­வாக்­குள்ள மனிதர், தன் இன மக்­க­ளோடு நெருக்­க­மான உறவு கொண்­டி­ருந்த தலைவர் என்­றாலும் பிரித்­தா­னி­யா­வுக்குக் கட்­டுப்­பட்டு நடக்க வேண்­டிய நிலை­மை­யி­லேயே அவர் இருந்தார்.

காட்­லா­வுக்கு நான்கு மனை­விகள் இருந்­தனர். ஒரு ஆபி­ரிக்கர் பல பெண்­களை மணந்­து­கொள்­வது ஆபி­ரிக்­காவில் வழ­மை­யாக இருந்­தது. அவர்­க­ளது இன வழக்­கப்­படி, முத­லா­வது மனைவி மதிப்­புக்­கு­ரிய மனைவி என்றும் இரண்­டா­வது மனைவி வலது கை மனைவி என்றும் மூன்­றா­வது மனைவி இடது கை மனைவி என்றும் நான்­கா­வது மனைவி பணி செய்யும் மனைவி என்றும் அழைக்­கப்­பட்­டனர். காட்­லா­வுக்கும் இடது கை மனை­விக்கும் மக­னாக 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி “குலு என்னும் கிரா­மத்தில் பிறந்­த­வர்தான் நெல்சன் மண்­டேலா.

காட்லா மகன் மண்­டே­லா­வுக்கு வைத்த பெயர் ரோலி­லாலா மண்­டேலா. (பாட்­டனார் பெயர் மண்­டேலா). கறுப்­பின மக்கள் மத்­தியில் வாழ்ந்து வந்த நெல்சன் மண்­டேலா ஐந்து வயது சிறு­வ­னாக இருக்­கும்­போது முதன் முதலில் ஒரு வெள்­ளை­யனைக் கண்டு திகைத்து நின்று விட்டான். நான் அறிந்த யாரும் இத்­தனை வெளுப்­பாக இருந்­த­தில்லை, இவர்கள் நிச்­சயம் கட­வு­ளா­கத்தான் இருக்க வேண்­டு­மென்று தன் நண்­பர்­க­ளிடம் பகிர்ந்து கொண்டான்.

ஏழு வயது வரை அவர் ஒரு போர்­வையை மட்­டுமே ஆடை­யாக அணிந்­தி­ருந்தார். போர்­வையை தோள் பக்­க­மாக போர்த்தி, இடுப்பில் ஊசி மூலம் செரு­கி­யி­ருப் பார். ஓடி­னாலும் ஆடி­னாலும் அவி­ழாது. சிறு பரா­யத்தில் துடிப்பு மிக்க சிறு­வ­னா­கவே இருந்­துள்ளார். கூடு­களில் இருந்து தேன் சேக­ரித்­தார், மாட்டின் மடி­யி­லி­ருந்து நேர­டி­யாக பால் குடித்தார், கூரான குச்­சியைக் கொண்டு மீன்­களைக் குத்திப் பிடித்­தார். உண்டி கோல் வைத்து பற­வை­களை அடித்து வீழ்த்­தினார், குளி­ரான ஆறு­களில் குதித்து உடல் நடுங்க நடுங்க நீந்தி கரை யைத் தொட்டார். தனக்­கான பொம்­மை­களை களி மண், மரப்­பட்­டைகள் கொண்டு தானே செய்து கொண்டார். அத்­துடன் ஒவ்­வொரு ஆபி­ரிக்க சிறு­வ னும் தெரிந்­து­கொள்ள வேண்­டிய குச்சிச் சண்­டை யை கற்­றுக்­கொண்டு சிறு வய­தி­லேயே வீர­மிக்க சிறு­வ­னாக திகழ்ந்தார். ஆரம்ப முதலே அவ­ரது வாழ்க்கை முட்­பு­தர்கள் நிறைந்த ஒன்­றா­கவே இருந்­தது.

சோஸா மக்கள் மான­சீக கட­வு­ளாக “கமாடா” எனும் கட­வு­ளையே வணங்கி வந்­தனர். கிறிஸ்­தவ மதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போது இவர்­களில் முதன் முதலில் மண்­டே­லாவின் தாயாரே கிறிஸ்­தவ மதத்தை தழு­விக்­கொண்டார். இவ­ருக்கு ஃபேனி என்று பெயர் மாற்­றப்­பட்­டது. இத­னை­ய­டுத்து மண்­டே­லாவை மெத­டிஸ்ட்­, ­வெஸ்­லியன் தேவா­ல­யத்­துக்கு அழைத்து செல்­லப்­பட்டு கிறிஸ்­தவ ஞானஸ்­நானம் அளிக்­கப்பட்டது. காட்­லாவின் வம்­சத்தில் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரி­யாது. நெல்சன் மண்­டே­லாவே ஏழு வயதில் முதன் முத­லாக பாட­சா­லைக்கு சென்றார். அவரைப் படிக்க வைத்து சோஸா மக்கள் மத்­தியில் ஒரு பெரும்­த­லை­வ­ராக ஆக்க வேண்­டு­மென்­பதே தந்தை காட்­லாவின் அவா­வாக இருந்­தது.

“படிக்­கப்­போ­வது ஆங்­கிலப் பாடங்­க­ளை, கற்­கப்­போ­வது பிரிட்டிஷ் சரித்­தி­ரத்­தை, பழ­கிக்­கொள்ளப் போவது ஆங்­கி­லேயப் பழக்­க­ வ­ழக்­கங்­க­ளை, அநா­வ­சி­ய­மாக உனக்கேன் ஆபி­ரிக்கப் பெயர்?” என்று ஆசி­ரியர் கடிந்­து­கொண்டு ரோலி­லாலா எனும் பெயரை நெல்சன் என்று மாற்றம் செய்தார். அன்­றி­லி­ருந்து இன்­று­வரை ரோலி­லாலா மண்­டே­லா, நெல்சன் மண்­டேலா எனும் பெய­ரு­டனே வாழ்ந்து வந்தார்.

சோஸா வழக்­கப்­படி விருத்த சேதனம் நடை­பெற்ற பிறகே ஒருவன் இளை­ஞ­னா­கிறான். மண்­டே­லா­வுக்கு பதி­னாறு வயதில் விருத்­த­சே­தனம் செய்­யப்­பட்­டது.

அந்தக் காலத்தில் சோஸா மக்­களை வெள்­ளை­யர்கள் அடி­மை­க­ளா­கவே நடத்­தினர். தங்கச் சுரங்­கங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக கறுப்­பின மக்­களை அடி­மை­க­ளாக வேலை வாங்கி, வேலைக்­கேற்ற ஊதி­யத்தை அவர்­க­ளுக்கு கொடுக்­காமல் அவர்­களை இம்­சித்­தனர். இவ்­வா­றான பல இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் கறுப்­பின மக்கள் செய்­வ­த­றி­யாது திண்­டா­டினர். சொந்த மண்ணில் தம் மக்கள் அடி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் கேவ­ல­மாக நடத்­தப்­ப­டு­வ­தையும் அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்த இளை­ஞ­னான நெல் சன் மண்­டே­லாவின் இரத்தம் கொதித்­த­து, விடு­தலை வேட்கை உணர்வு மனதில் குடி­கொண்­டது. வெள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து கறுப்­பின மக்­களை காப்­பாற்ற வேண்­டு­மென்ற மனப் ­பாங்கும் உத்­வே­கமும் அவ­ருக்கு நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே சென்­றது. வெள்­ளை­யர்­களால் நெல்சன் மண்­டேலா அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்ட பல சந்­தர்ப்­பங்­க­ளு­முண்டு.

வெள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து தம்­மின மக்­களை எவ்­வாறு காப்­பாற்­ற­லா­மென சிந்­தித்­துக்­கொண்­டி­ருந்­த­போது அவ­ருக்கு லாஸர் சிடெல்ஸ்கி எனும் ஒரு யூத உயர் அதி­கா­ரியின் நட்பு ஏற்­பட்­டது. அவ­ரிடம் மண்­டேலா தன் இன மக்­களின் அடிமை வாழ்க்கை பற்­றிய தன் மனக்­க­வ­லை­களை பகிர்ந்­து­கொண்டார். அதற்கு அந்த யூத நண்பர் “நீ ஒரு வழக்­க­றி­ஞ­ராக மாறி உன் இன மக்­க­ளுக்கு நீ உதவ வேண்டும். அப்­போ­துதான் வெள்­ளை­யர்­களின் ஆதிக்­கத்­தி­லி­ருந்து உன் இன மக்கள் விடு­தலை பெற்று சுதந்­திரக் காற்றை சுவா­சிப்­பார்கள். அதற்கு நீ இப்­போ­தி­ருந்தே போராட வேண்டும்” என்று விடு­தலைத் தாகத்தை ஊட்­டினார். அதி­லி­ருந்­துதான் நெல்சன் மண்­டே­லாவின் மனதில் விடு­தலை வேட்கை வேர் விடத் தொடங்­கி­யது. வெள்­ளை­யர்­களின் அடி­மைத்­த­னத்­தி­லி­ருந்து தம் இன மக்­களை விடு­விக்க வேண்­டு­மென்ற உத்­வே­கமும் உற்­சா­கமும் பிறந்து வெறி­கொண்ட வேங்­கையும் சினங்­கொண்ட சிங்­க­மு­மாக செயற்­படத் தொடங்­கினார்.

1941 ஆம் ஆண்டு ஜொக­னஸ்­பேர்க்­கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்­டக்­கல்­வியைக் கற் றார். 1943 ஆம் ஆண்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்­சியில் இணைந்து போராடத் தொடங்­கினார். 1956ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க அர சைக் கவிழ்க்க சதி செய்­த­தா­கவும் வன்­மு­றை யைத் தூண்­டி­விட்­ட­தா­கவும் குற்றம் சாட்டப்­பட்டு மண்­டே­லா­வுடன் சேர்த்து 155 பேர் கைது செய்­யப்­பட்­டார்கள்.

1960 ஆம் ஆண்டு ஷார்ப்வில் சம்­ப­வத்தில் 69 போரா­ளிகள் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி தடை செய்­யப்­ப­டு­கி­றது, இனி அஹிம்சை வழி பலன் தராது என்று நம்­பிய மண்­டே­லாவும் அவ­ரது நண்­பர்­களும் ஆயு­த­மேந்தி போராட முடி­வெ­டுத்து இர­க­சி­ய­மாக நாட்டை விட்டு வெளி­யே­றினர். மண்­டேலா தலை­ம­றை­வா­கிறார். ஆபி­ரிக்­காவின் 'ஈட்டி' எனும் இயக்­கத்தை தொடங்­கு­கிறார்.1961 ஆம் ஆண்டு மண்­டேலா வன்­முறைப் போராட்­டத்­திற்கு அழைப்பு விடுக்­கிறார்.

புதிய இயக்­கத்தின் தலை­வ­ரா­கிறார். பதி­னேழு மாத தலை­ம­றைவு வாழ்க்­கைக்கு பிறகு 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட மண்­டேலா ஜொக­னஸ்பேர்க் கோட்­டையில் சிறை வைக்­கப்­ப­டு­கிறார். அக்­டோபர் 25 ஆம் திகதி வாசிக்­கப்­பட்ட தீர்ப்பில் ஐந்­தாண்டு சிறைத்­தண்­டனை கிடைக்­கி­றது. இரா­ஜ­து­ரோக குற்றம் சுமத்­தப்­பட்டு 1964 ஆம் ஆண்டு ஜுன் பன்­னி­ரெண்டாம் திகதி ஆயுள் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது. ரோபன் தீவில் 18 ஆண்­டுகள் சிறை வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

1968ஆம் ஆண்டு தாயார் மர­ண­ம­டைந்­த­போது அவரின் இறுதிச் சடங்­கு­களில் கூட பங்­கேற்க அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இனி போராட்­டத்தில் ஈடு­ப­டக்­கூ­டாது என்ற நிபந்­த­னைக்குக் கட்­டுப்­பட்டால் விடு­தலை செய்­வ­தாக 1973 ஆம் ஆண்டும் 1983 ஆம் ஆண்டும் தென்­னா­பி­ரிக்க அதிபர் கேட்டும் கூட அதனை ஏற்க மறுத்­து­விட்டார் மண்­டேலா. அவ­ரது மன­வு­றுதி கறுப்­பி­னத்­த­வர்­களை ஒன்­று­பட ஊக்­க­மூட்­டி­யது. நாடெங்கும் போராட்­டங்கள் வெடித்­தன. மண்­டே­லாவை விடு­விக்கக் கோரி உலக நாடு­களும் தென்­னா­பி­ரிக்­காவை நெருக்கத் தொடங்­கின. பணிய மறுக்­கவே உலக நாடுகள் தென்­னா­பி­ரிக்­காவின் மீது 1986 ஆம் ஆண்டு கடு­மை­யான பொரு­ளா­தார தடை­களை விதித்­தன. உல­கமே போர்க்­கொடி தூக்­கிய பிறகு தனது அட்­டூ­ழி­யங்­களை உணர்ந்­தது தென்­னா­பி­ரிக்க அரசு .

இன ஒதுக்கல் என்ற அசிங்­கத்தால் இருண்டு போயி­ருந்த தென்­னா­பி­ரிக்­காவில் விடி­வெள்­ளி­யாக உதித்து அந்த மண்ணின் மைந்­தர்­க­ளான கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்றுத் தந்த ஒப்­பற்ற தலைவர் நெல்சன் மண்­டேலா தன் கொள்­கைக்­காக இரு­பத்­தேழு ஆண்­டுகள் சிறை­வாசம் அனு­ப­வித்தார். 1990 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 11 ஆம் திகதி விடு­தலை பெற்றார். அதனை தொடர்ந்து அன்­றைய பிர­தமர் டி. கிளார்க் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி மீதான தடையை அகற்­றினார். ஜன­நா­யக அமைப்பை தோற்­று­விக்கும் முயற்­சியில் அர­சாங்­கமும் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்­சியும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தின.

அதே ஆண்டில் இந்­தி­யாவின் “பாரத ரத்னா” விருது வழங்­கப்­பட்­டது. நெல்சன் மண்­டேலா 1991 ஆம் ஆண்டு அக் கட்­சியின் தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். அதே ஆண்டில் இரு­பத்­தொரு ஆண்­டு­க­ளாக தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு ஒலிம்பிக் கமிட்டி விதித்­தி­ருந்த தடையை நீக்­கி­யது. 1993 ஆம் ஆண்டு உலக அமை­திக்­கான நோபல் பரிசு இவ­ருக்கு வழங்­கப்­பட்­டது. 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி நடை­பெற்ற தேர்­தலில் முதன்­மு­றை­யாக கறுப்­பின மக்கள் வாக்­க­ளித்­தார்கள். ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி வெற்றி பெற்­றது. நெல்சன் மண்­டேலா மே மாதம் 10 ஆம் திகதி தென்­னா­பி­ரிக்­காவின் முதல் கறுப்­பின ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார். அன்­றுதான் மண்­டே­லாவின் தந்தை காட்­லாவின் கனவு நன­வா­கி­றது.

நெல்சன் மண்­டேலா ஒன்­றன்பின் ஒன்­றாக மூன்று மனை­வி­களை மணந்தார். 1944 ஆம் ஆண்டு எவிலின் மேசேயை மணந்தார். இத் தம்­ப­தி­க­ளுக்கு நான்கு பிள்­ளைகள். 1958 ஆம் ஆண்டு எவி­லினை விவா­க­ரத்து செய்­து­விட்டு வின்­னியை மணந்தார். இத் தம்­ப­தி­க­ளுக்கு இரண்டு பிள்­ளைகள். 1998 ஆம் ஆண்டு வின்­னியை விவா­க­ரத்து செய்­து­விட்டு மொசாம்­பிகா நாட்டின் முன்னாள் அதி­பரின் விதவை மனை­வி­யான கிரேக்கா மேச்­சலை தனது எண்­ப­தா­வது பிறந்த நாளன்று மணந்தார்.

1998 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி நெல்சன் மண்­டேலா தென்­னா­பி­ரிக்க பாட­சா­லை­களில் தமிழ், உரு­து, தெலுங்­கு, ஹிந்­தி, குஜ­ராத்தி ஆகிய மொழி­களை கற்றுக் கொடுக்க ஏற்­பாடு செய்தார்.

1999 ஆம் ஆண்டு நெல்சன் மண்­டேலா ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டு பதவி வகித்ததன் பின் பதவியை விட்டு விலகினார். 2013 ஆம் ஆண்டு ஜுன் எட்டாம் திகதி மண் டேலா நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மண்டேலா, 2013 ஆம் ஆண்டு டிசம் பர் மாதம் ஐந்தாம் திகதி தனது 95 ஆவது வய தில் காலமானார். அவர் மறைந்து சென்றாலும் அவர் செய்த தியாகங்களும் போராட்டங்களும் கறுப்பின மக்களின் மனங்களின் நீங்காத நினைவுகளாக என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்.

அல்ஹாஜ் எம்.எப்.எம்.இக்பால்,
யாழ்ப்பாணம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல