வியாழன், 20 பிப்ரவரி, 2014

தமிழகத்தில் வருகுது அம்மா தியேட்டர்! விஜய், வடிவேலு, கருணாநிதி பேரன்கள் படங்களுக்கு தடை?

தமிழகத்தில் இனி எல்லாம் அம்மா மயம்தான். கட்சியில் அம்மா பேரவையில் தொடங்கியது, இன்று தமிழக அரசுத் துறை திட்டங்கள் அனைத்திற்கும் அம்மா பெயர் சூட்டப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், தங்கள் விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் காட்டவும், மக்களைக் கவரவும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள். மேயர்கள் என பலரும் களத்தில் குதித்துள்ளனர்.



சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடந்தது. கூட்டத்தில், ஜெயலலிதா பெயரில் (அம்மா) பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக அறிவித்த மேயர், கூட்டத்தின் ஹைலைட் விஷயமாக, “சென்னை நகரில் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா குடிநீர், அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, உறைவிடப் பள்ளி, அம்மா கட்டணம் இல்லா கல்விப் பயிற்சி கூடம் என அம்மா பெயரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.

தமிழகத்தில் அம்மா உணவகத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் இருந்து தெரியவருவது என்னவென்றால், சினிமா ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும் விதமாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.

சரி இந்தத் திரையரங்குகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன்கள் தயாரிக்கும், நடிக்கும் படங்கள், மற்றும் நடிகர் விஜய், வடிவேலு, விஜயகாந்தின் மகன் நடிக்கும் படங்களுக்கும் தடை விதிக்கப்படுமா என முன்கூட்டியே கூறினால் நல்லது.

அரசு சார்பில் தொடங்கப்படும் புதிய திட்டங்களுக்கு எல்லாம் அம்மாவின் பெயர் சூட்டப்படுவது மகிழ்ச்சிதான். தமிழகத்தில் வீதிக்கு வீதி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் அம்மா பெயர் சூட்டினாலும் இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.

ஆனாலும், இந்த மகிழ்ச்சி முழுமையடையவில்லையே.. ஏதோ குறைகிறது போல இருக்கிறதே.. உங்களுக்கும் மகிழ்ச்சியில் ஏதோ குறைவது போல ஒரு பீலிங் உள்ளதா? அது என்ன?

ஆங்.. இதுதான்: இப்படி உணவகம், மினரல் வாட்டர், தியேட்டர் என ஒவ்வொன்றாக அம்மாவின் பெயரை வைத்துக்கொண்டு இராமல், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கே ‘அம்மா நாடு’ என பெயரை மாற்றி விடலாமே!

அதன்பின், ‘அம்மா நாடு’ மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும், அம்மா பெயரை இனிஷலாக வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ‘அ.ஆலமரம்’ (அம்மா ஆலமரம்)… ஒரே ஜாலிதான்!

இதற்குள் அம்மா 40 தொகுதிகளிலும் ஜெயித்து பிரதமர் ஆவார் என்று வேறு பீதியை கிளப்புகிறார்கள்! பீதி எமக்கில்லை.. பாவம், ஷாஜகானுக்குதான்!

யாருங்க அந்த ஷாஜகான்? அம்மாவுக்கு புடிக்காத இந்தி நடிகரா? சேச்சே.. ஆக்ராவில் நம்ம ‘அம்மா மஹால்’ கட்டியவர்!

Viruvirupu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல