லண்டன்: "தனது பெற்றோர் முருகன்-நளினி விடுதலையை தடுக்க வேண்டாம்" என்று அவரது மகள் அரித்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா. 22 வயதான அரித்ரா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். முருகன் மீதான தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
"அவர்களை விடுதலை செய்யக்கூடாது" என்று ராஜீவ்காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ராகுல்காந்தி என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு மனு அளித்துள்ளது.
பெற்றோருடன் வாழ உதவுங்கள்: சோனியாவுக்கு நளினி– முருகன் மகள் கோரிக்கை இந்த நிலையில் தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து வாழ உதவுமாறு சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ள அரித்ரா, என் பெற்றோர் விடுதலையை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
விருப்பத்திற்குரியவர்களின் பிரிவால் ஏற்படும் வேதனையை ராகுல், பிரியங்கா உணவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக