வியாழன், 20 பிப்ரவரி, 2014

யாழில் புலிப் பயங்கரவாதம் மீண்டும் வருவதை எவருமே விரும்பவில்லை (காணொளி இணைப்பு)

 British High Commissioner hands over books at the nursery
யாழ்ப்பாணம் எதிர்கொண்டு வருகின்ற சவால்கள் குறித்து தூதுவர் ஜோன் ரங்கின் உரிய விளக்கங்கள் பெற்று வந்து உள்ளார் என்று பிரித்தானிய தூதரகம் அறிவித்து உள்ளது.



தூதுவர் ரங்கின் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டது.

இவ்விஜயத்தின்போது பாலியல் வன்முறை உள்ளிட்ட பல சவால்கள் குறித்து இவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

மட்டும் அன்றி உயர் பாதுகாப்பு வலயம், இராணுவ பிரசன்னம், அகதிகள் குடியேற்றம், வாழ்வாதார சிக்கல்கள் போன்றன குறித்தும் இவருக்கு ஓதப்பட்டு உள்ளது.

ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் இவரது குழுவினர் சந்தித்து உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அபிவிருத்திப் பணிகள் இவர்களை பெரிதும் ஈர்த்து உள்ளன. அபிவிருத்திக்கு மட்டும் அன்றி தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இவருடன் பேசிய எவருமே புலிப் பயங்கரவாதம் மீண்டும் வருவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல