வியாழன், 20 மார்ச், 2014

மாயமான விமானத்தை கண்டுபிடித்த ஒரு டுபாக்கூர் சாமியாரும், 2 சீடர்களும் (காணொளி இணைப்பு)

பெங்களூர்: மாயமான மலேசிய விமானத்தை சாமியார் ஒருவரும், அவருடைய ஆதரவாளர்கள் இருவரும் கண்டுபிடித்துள்ளார்களாம். கடந்த 8ம் தேதி சீனாவுக்கு கிளம்பிய மலேசிய விமானம் மாயமானது. அதில் பயணித்த 239 பேரின் குடும்பத்தார் அவர்கள் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.



இந்நிலையில் கன்னட டிவி ஸ்வர்ணா நியூஸில் ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது.

கன்னட வீடியோ
இணையதளத்தில் சாமியார் ஒருவர் தனது ஆதரவாளர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து மாயமான விமானத்தை கண்டுபிடித்ததாகக் கன்னடத்தில் கூறும் அந்த வீடியோ 5 நிமிடங்கள் ஓடுகிறது.

சிஷ்யை
சாமியாரின் சிஷ்யை ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு விமானத்தை தன் மனக்கண்ணில் பார்க்கிறாராம். விமானம் கடத்தப்பட்டது. அதை கடத்தியவர்களில் ஒருவருக்கு விமானத்தை ஓட்டத் தெரியும் என்று அந்த பெண் வீடியோவில் ஓவர் ஆக்டிங்கோடு கூறுகிறார்.

பயணிகள்
 விமானம் கீழ் நோக்கி வந்து கடலுக்குள் விழுந்துவிட்டது. பயணிகள் அதிர்ச்சியில் இருந்தனர். விமானத்திற்குள் மஞ்சள் நிறத்தில் ஏதோ தெரிகிறது. அது இரவு நேரம். விமானத்திற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது என்று கூறிவிட்டு அந்த பெண் மயக்கமாகிவிட்டார்.

சீடர்
ஆந்த ஆண் சீடர் கூறுகையில், விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது. இதில் பல பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்றார்.



தட்ஸ்தமிழ்

தொடர்புடைய பக்கங்கள்


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல