வியாழன், 20 மார்ச், 2014

மலேசிய விமானத்தின் " பாகங்கள்" இந்தியப் பெருங்கடலில்?

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்படும் இரண்டு பொருட்கள் தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் செய்கோள்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.



இந்தப் பொருட்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சுமார் 2500 கிமீ தொலைவில் காணப்பட்டன என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பொருட்களில் பெரியது சுமார் 24 மீட்டர் நீளமுள்ளதாக இருப்பதாகத் தெரிகிறது என்று ஆஸ்திரேலிய கடல்சார் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.. ஆனால் இந்தப் பொருள் விமானத்துடன் தொடர்பற்றதாகவும்கூட இருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த இடத்துக்கு ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்கள் விரைந்திருக்கின்றன.

"இந்தப் பொருட்கள் சொல்லப்போனால் குறிப்பிடத்தக்க தனித்தன்மை வாய்ந்தவை அல்ல . இவை கணிசமான அளவு பெரியவை, அவை தண்ணீரில் நனைந்திருக்கின்றன, கடல் நீரின் மேற்புறம் ஆடிக்க்கொண்டிருக்கின்றன", என்றார் ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான, அம்சாவின் பொதுச் செயலர், ஜான் யங்.

இது ஒரு துப்பு, அவ்வளவுதான்.ஆனால் இதுதான் நமக்கு இப்போதைக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய துப்பு. எனவே இந்த இடத்துக்குப் போய் , அந்தப் பொருளை ஆராய்ந்து பார்க்கவேண்டும்" என்றார் ஜான் யங்.

இந்தப் பகுதியில் தெளிவற்ற சூழ்நிலை காரணமாக, பார்க்கும் தன்மை குறைவாக இருப்பதாகவும், அதனால் தேடுதல் வேட்டை தடைபடக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கண்டுபிடிப்பு பற்றி ஆஸ்திரேலியா மலேசியாவுக்கு வியாழனன்று காலை தகவல் அனுப்பியிருக்கிறது.

"ஒவ்வொரு தடயத்தையும் நாங்கள் கவனமாக ஆராய்ந்துகொண்டிருக்கிறோம், இந்தத் துப்பு, ஒரு சாதகமான திருப்பம் என்று நம்புகிறோம்" என்றார் மலேசியாவின் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசேன்.

BBC Tamil

தொடர்புடைய பக்கங்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல