செவ்வாய், 25 மார்ச், 2014

கடனட்டை மோசடியில் கை தேர்ந்த ஈழ தமிழ் அகதிகள்!

சர்வதேச கடனட்டை மோசடிச் சூத்திரதாரியான இலங்கைத் தமிழர் ஜயந்தரன் தம்பபிள்ளை - வயது 28 என்பவர் இம்மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தில் பல இலட்சம் ரூபாயை இந்தியாவில் செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள அகதி முகாம்களை சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு விநியோகித்து உள்ளார் என்று தெரிகின்றது.



கடந்த வெள்ளிக்கிழமை இராமநாதபுரத்தில் பொலிஸாரால் இவருடன் மேலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவரின் உதவியாளர்களான இருவரும் அகதி முகாம்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு வங்கி அட்டை மோசடி வித்தையை ஜயந்தரன் பழக்கிக் கொடுத்து இருக்கின்றார்.

வங்கி அட்டை மோசடி தொடர்பாக இன்ரபோல் பொலிஸாரால் ஜயந்தரன் தேடப்பட்டு வந்திருக்கின்றார். 2011 ஆம் ஆண்டு பெருந்தொகை ரொக்க நிதியை மோசடி செய்தமை தொடர்பாகவே தேடப்பட்டு இருக்கின்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை இவர் கையாடி இருக்கின்றார் என்று இவரது மடிக் கணனி மற்றும் ஏனைய ஆவணங்களில் இருந்து துறை சார்ந்த பொலிஸ் நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள மோசடிப் பேர்வழிகளுடன் இவர் இரு வெப் தளங்கள் மூலம் தொடர்பட்டு இருக்கின்றார். 03 டொலர் முதல் 350 டொலர் வரை பெறுமதியான வங்கி அட்டைகளை கடன் எல்லைக்கு ஏற்ப வாங்கி கடனட்டை விபரங்களை பெற்று இருக்கின்றார். பின் கடனட்டைகளை குளோனிங் செய்து தமிழ்நாட்டு வங்கிகளில் உள்ள தானியங்கி இயந்திரம் மூலம் பல இலட்சம் ரூபாயை பெற்று இருக்கின்றார். அத்துடன் கொள்வனவுகளும் மேற்கொண்டு இருக்கின்றார். அகதி முகாம்களில் உள்ள இளையோரை தொடர்பு கொண்டு பணத்தை பகிர்ந்து கொடுத்து உள்ளார்.

இவருடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரதீப் குமார் - வயது 36 திண்டுக்கல் அகதி முகாமில் இருந்து தப்பி சென்றவர். கடந்த 14 ஆம் திகதி பிரேம் அல்லது செல்வநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.இருவரும் ஜயந்திரனால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.

சென்னைவாசிகளில் வங்கிக் கணக்குகளில் ஜயந்திரன் ஏதேனும் துஷ்பிரயோகம் மேற்கொண்டு இருக்கின்றாரா? என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி உள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல