வடமாகாண சபையின் உறுப்பினர் ஆனந்தி சசீதரனின் கணவன் எழிலன் ஒரு ஈவிரக்கமற்ற எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதியாக இருந்து 2009ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவடையும் இறுதி நாட்களில் இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களுக்கு கொடுமை இழைத்ததை தான் நேரில் கண்டதாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான யோ.கர்ணன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
எல்.ரி.ரி.ஈயில் இணைந்து போராடிய போது ஏற்பட்ட காயத்தினால் கர்ணனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுதந்திரப் பிரஜையாக இருந்து வரும் யோ.கர்ணன் ஒரு எழுத்தாளராக மாறி எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த இறுதி நாட்களில் எழிலன் இரத்தம் தோய்ந்த ஒரு வாளுடன் அங்கு நின்று கொண்டிருந்த மக்களை இராணுவத் தரப்புக்கு தப்பியோட வேண்டாம் என்று அச்சுறுத்திக் கொண்டிருந்ததை தான் கண்டதாகக் கூறுகிறார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்தவர்களையே எழிலன் இவ்விதம் அச்சுறுத்தினார் என்று யோ.கர்ணன் மேலும் தெரிவித்தார்.
புதுமாத்தளனில் யுத்தம் நடந்து கொண்டிருந்த இறுதி நாட்களில் இரா ணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல வேண்டும் என்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக அங்குள்ள நால்வரை சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் தன் கையில் இருந்த இரத்தம் தோய்ந்த நீண்ட வாளை வைத்துக் கொண்டு பொதுமக்கள் இராணுவத் தரப்புக்கு செல்வதை தடுக்கக்கூடிய வகையில் அச்சுறுத்திக் கொண்டிருந்ததை தான் கண்டதாக இந்த முன்னாள் எல்.ரி.ரி.ஈ இயக்க போராளி மேலும் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக