செவ்வாய், 25 மார்ச், 2014

மலேசிய விமான புலனாய்வு: ரேடியோவில் பைலட் பேசாமல், கோ-பைலட் பேசியது ஏன்?

“மாயமான மலேசிய விமானம் இந்தியக் கடலின் தென் பகுதியில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது” என்ற மலேசியப் பிரதமரின் அறிவிப்பு நேற்று வெளியான போதிலும், இந்த விமானம் மாயமானது எப்படி என்ற மர்மம் இன்னமும் தொடர்கிறது.



“இந்த மர்மத்துக்கான விடை, விமானத்தின் இறுதி ரேடியோ தொடர்புடன் கனெக்ட் பண்ணப்பட்டு உள்ளது” என்பதே, புலனாய்வாளர்களின் தற்போதைய கோணம்.

கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட விமானம், மலேசிய வான் எல்லையை கடக்கும் பகுதிவரை சரியாகத்தான் பறந்திருக்கிறது. 8-ம் தேதி அதிகாலை 1.19 மணிக்கு (மலேசிய நேரம்) கோ-பைலட் தரையுடனான தமது இறுதி ரேடியோ தொடர்பை, “ஆல்ரைட் குட்நைட்” என்ற வாக்கியத்துடன் முடித்துள்ளார்.

அது நடந்து சரியாக 2 நிமிடங்களில், 2.21-க்கு, விமானத்தின் ட்ரான்ஸ்பொன்டர் (transponder) நிறுத்தப்பட்டது. அதன் அர்த்தம், அந்த கணத்துடன் தரையுடன் இருந்த ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்புவரை, மிக இயல்பாக கோ-பைலட் ரேடியோவில் உரையாடியது, புலனாய்வாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோணத்தில், இந்த மர்மத்துக்கான விடை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் சிறிது காலத்துக்கு இந்த புலனாய்வு, மீடியாக்களில் பெரிதாக அடிபட போகிறது.

இந்த விவகாரத்தில் வாசகர்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய சில கேள்விகளுக்கு விளக்கங்களை விறுவிறுப்பு.காமில் தருகிறோம். அப்போதுதான், இந்த புலனாய்வை உங்களால் ஃபாலோ பண்ணக்கூடியதாக இருக்கும்.

முதலாவது கேள்வி, விமானத்தின் காக்பிட்டில் பிரதான விமானி ஸஹாரி அஹ்மத் ஷாவும், கோ-பைலட் ஃபாரிக் அப்துல் ஹமீட்டும் இருந்துள்ளனர். மலேசிய டவருடன் ரேடியோ தொடர்பை கோ-பைலட் ஃபாரிக் அப்துல் ஹமீட் ஏற்படுத்தி பேசியிருக்கிறார். பிரதான விமானி ஸஹாரி அஹ்மத் ஷா ஏன் குரல் காட்டவில்லை? அவர் எங்கே?

இந்தக் கேள்விக்கு பதில்கூட, சில காக்பிட் நடைமுறைகளை சொல்ல வேண்டும்.

ஜெட் விமானங்களின் காக்பிட்டில், முன்னே இரு சீட்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் இடதுபுற சீட்டில்தான் பிரதான விமானி எப்போதும் இருப்பார். வலப்புற சீட்டில் இருப்பவர் கோ-பைலட்.

விமானத்தின் காக்பிட்டில் இரு விமானிகள் இருக்கும்போது, விமானத்தின் கன்ட்ரோலில் கையை வைத்திருக்கும் விமானி ரேடியோவில் பேசுவதில்லை என்பது விமானிகளுக்கிடையே உள்ள நடைமுறை.

அதாவது, விமானத்தை செலுத்திக்கொண்டு இருக்கும் விமானி, விமானத்தின் கன்ட்ரோலில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க மற்றைய விமானிதான் ரேடியோவில் தரை டவருடன் பேசுவார். (இல்லாவிட்டால் பறப்பதில் கவனம் செலுத்த முடியாது)

இந்த வகையில், மலேசியன் விமானத்தின் கோ-பைலட் மலேசிய டவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, பிரதான விமானி ஸஹாரி அஹ்மத் ஷா விமானத்தை செலுத்திக்கொண்டு இருந்திருக்கலாம்.

இது ஒருவிதத்தில் முக்கியமான விஷயம். ஏனென்றால், கோ-பைலட் ரேடியோவில் பேசி, 2 நிமிடங்களில் விமானம் தரை தொடர்புகளை இழந்தது அல்லவா? அந்த கணத்தில் விமானத்தின் கன்ட்ரோல், பிரதான விமானி ஷாவின் கையில் இருந்திருக்கும்! (காக்பிட்டுக்குள் மூன்றாவது புதிய நபர் யாரும் புகவில்லை என்று எடுத்துக் கொண்டால்).

அதாவது, விமானம் அனுபவசாலியான கேப்டன் ஷாவின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்.

அப்படியான நேரத்தில், தரைத் தொடர்புகள் இழக்கப்படுகின்றன. விமானம் பாதையில் இருந்து விலகி இடதுபுறம் திரும்புகிறது. பிளைட் பாத்தில் (flight path) இப்படியான திடீர் மாற்றத்தை ஒரு கோ-பைலட் செய்ய மாட்டார் என்பதை ஏவியேஷன் அனுபவம் உள்ள யாரும் சொல்லுவார்கள்.

மொத்தத்தில், நாம் விசாரித்தவரை புலனாய்வாளர்களின் கோணம் என்னவென்றால், என்னதான் கோ-பைலட் ரேடியோவில் டவருடன் பேசினாலும், விமானம் திசை திரும்பியபோது, அதன் கன்ட்ரோல், பிரதான விமானி ஷாவின் கைகளில் இருந்தது என்பதே!

இதனால்தான், கோ-பைலட்டை விட்டுவிட்டு, கேப்டன் ஸஹாரி அஹ்மத் ஷாவின் பின்னணி பற்றி அதிகம் துருவுகிறார்கள்.

விறுவிறுப்பு

தொடர்புடைய பக்கங்கள்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல