வெள்ளி, 21 மார்ச், 2014

கிரிமியா நமக்குச் சொல்வது…

சோவியத் யூனியன் உடைவுக்குப் பின்னர் அமெரிக்காவும் அதன் நேசநாடுகள் கூட்டணியும் உலக ஒழுங்கை பெருமளவுக் குத் தாங்களேதான் கையாள்வதாக நினைத்துச் செயற்பட்டு வந்தன. பயங்கரவாதம் எது என்று தீர்மானிப்பதாகட்டும், மனித உரிமை மீறல்கள் எவை என்று தீர்மானிப்பதாகட்டும், எங்கே ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தீர்மானிப்பதாகட்டும், எந்தெந்த நாடுகளைப் பிரிப்பது எந் தெந்த நாடுகளை ஒன்றுசேர்ப்பது, அதற்காக எந்தெந்த நாட்டின் வீதிகளில் மக்களை இறக்கி ஆர்ப்பாட்டங்களை செய்ய வைப்பது என்பதெல்லாம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குரியவை என்றே அவை நடந்து வந்தன. இந்தியாவும் கூட இந்த மேற்கு நாடுகளின் வல்லபங்களுட னேயே தன்னை இணைத்துக் காண்பித்துக் கொள்வதான போக் கும் சமீபகாலம்வரை இருந்தது.



இப்போது, தங்கள் பாணியிலேயே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தியதை அடுத்து, அதற்கு ரஷ்யா கொடுத்த பதிலடி, தற்போதைய உலக ஒழுங் கமைவில் சற்று அதிர்வை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்கக் கூட்டணியின் பூச்சாண்டிகளைப் பொருட்படுத் தாது, ரஷ்யா கிரிமியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட மையானது பல அதிர்வுகளை உலகப்பரப்பில் விட்டிருக்கிறது. முக்கியமாக, அமெரிக்கக் கூட்டின் ரஷ்யா மீதான அச்சுறுத்தல்கள் பொருளாதாரத் தடை அறிவிப்புகளுக்கெல்லாம் இந்தியாவும் சீனா வும் இணக்க மறுப்பை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதா னது புதிய உலகசமநிலையின் வெளிப்படுகை என்றே பார்க்க முடிகிறது.

16.03.2014 ஞாயிற்றுக்கிழமை கிரிமியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாகவும், தங்கள் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தும் கிரிமியப் பிரஜைகளில் 97 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித் துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர் மானம் கொண்டுவர அமெரிக்கா முயற்சித்தது. தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரஷ்யா அதை முறியடித்துவிட்டது. ஆக, உலக மேலாண்மைப் போட்டியில் அமெரிக்காவுக்கு நேர்ந்திருக் கும் சறுக்கல் இது.

தங்கள் சுரண்டலுக்கு ஒத்துவராத நாடுகளில், மக்கள் போராட்டங்களைத் தூண்டிவிட்டு, தங்களது நலன்களுக்குச் சார்பான ஆட்சிகளை அங்கு அமர்த்துவதே அமெரிக்கக் கூட்டின் நோக்கம். புவி அரசியற் பலன்களைத் தவிர அவர்களுக்கு வேறெந்த மனித, இன உரிமை அக்கறைகளும் கிடையாது. யுகோஸ்லாவியாவிலிருந்து கொசோவாவைப் பிரிப்பதில் முன்நின்ற அதே அமெரிக்காதான் இப்போது உக்ரைனிலிருந்து க்ரீமியா பிரியக்கூடாது என்கிறது. உக்ரைனின் இறைமை பற்றிப் பேசுகிறது. வேடிக்கைதான்!

கிரிமிய விவகாரம் நமக்கு இன்னொன்றையும் புலப்படுத்துகி றது. சிறிய நாடுகளின் கதி எல்லாம் அதன் பக்கத்திலுள்ள பெரி யண்ணன் நாட்டினது கையிலேயே தங்கியிருக்கிறது. புலம்பெயர் சகோதரர்களும் அவர்களிடமிருந்து கிடைக்கும் நிதிகளை எதிர்பார்த்துச் செயற்படும் இங்குள்ள தலைவர்களும் நமது மக்களுக்குக் காட்ட முற்படுவது ஏமாற்று நம்பிக்கை. மேற்கு நாடுகளால் நமக்கு எந்தத் தீர்வையும் கொண்டுவர முடியாது.

இலங்கையிலும் இப்படி ஒரு தனிநாட்டுப் பிரிவினைக்கான வாக்கெடுப்பைக் கொண்டுவரலாம் என்ற கனவை விதைப்பவர் கள் தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படியொரு வாக்கெடுப்புத் தீர்மானத்தை இந்தியாவின் சம்மத மின்றி அமெரிக்கா கொண்டு வர இயலாது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் சரி, பா.ஜ.க ஆட்சி ஆனாலும் சரி இந்தியா அப்படியான வாக்கெடுப்புக்குச் சம்மதிக்காது.

thinamurasu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல