செவ்வாய், 20 மே, 2014

இந்த நாடு உருப்படுமா?

'இந்த நாடு உருப்படாது' எண்டு ஒரு பத்துப் பதினைஞ்சு வருசத்துக்கு முந்தி செங்கை ஆழியான் ஒரு நாவல் எழுதியிருந்தாக நினைவு.

என்ன மாதிரி ஒரு அருமையான தலைப்பை தீர்க்க தரிசனத்தோட அந்த நாவலுக்கு மனிசன் வைச்சிருக்கு!



அப்பிடியே அச்சொட்டாக எங்களுக்கும் எங்கட நாட்டுக்கும் பொருந்தியிருக்குப் பாத்தியளா?

ஆனால், இப்பிடிச் சொல்லிறதோ, சாபம் போடுறதைப்போல ஒரு புத்தகத்துக்கு இந்த மாதிரிப் பேர் வைக்கிறதோ சரியில்லை எண்டு புத்தகத்தை அச்சடிச்ச அச்சகக்காரரும் செங்கை ஆழியானின்ரை மனைசியும் அப்ப தடுத்திட்டினமாம்.

அதால அவர் புத்தத்தின்ரை உள்பக்கங்களில 'இந்த நாடு உருப்படாது' எண்டும் புத்தகத்தின்ரை அட்டையில வேற ஒரு பேரும் வைச்சார்.

எப்பிடித்தான் சொன்னாலும் எழுத்தாளன்ரை கண்களில இருந்து ஒண்டையும் மறைக்கேலாது எண்டது சரிதான்.

செங்கை ஆழியான் எழுதினதைப்போல இந்த நாடு உருப்படுகிற மாதிரித்தெரியேல்ல.

பெரிய கொடுமையாக நடந்து கொண்டிருந்த யுத்தம் ஐஞ்சு வருசத்துக்கு முதல் முடிஞ்சுது எண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்ட களைப்பு மாறேல்ல. அதுக்குள்ள தெரு நீளத்துக்கு துவக்கோட ஆமிக்காரர் உலாத்தத் தொடங்கிட்டினம்.

இஞ்ச சண்டை நடக்கேக்கை, தனிநாடு வேணும் எண்டு போராட்டம் நடக்கேக்க, சின்னப் பெடியளும் பெட்டையளும் கரும்புலிகளாகி வெடிச்சுத் தங்கட உயிரைக் குடுக்கேக்க, புலிகளுக்குக் காணி, வீடு, காசு, சொத்து எண்டெல்லாத்தையும் குடுத்துப் பாஸ் எடுத்துக் கொண்டு வந்து கொழும்பிலயும் காசை இறை இறையெண்டு இறைச்சு, ஒரு மாதிரிப் பிளேன் ஏறி வெளிநாட்டுக்குப்போனவை - அங்க இருந்து கொண்டு 'றிமோட் கொன்றோல்'ல மீண்டும் புலிகளை எழுச்சியடைய வைக்கினம்.

சும்மா இருந்த சனத்தை உடுக்கடிச்சு உருவேத்துறாங்கள் பேப்பர்காரர்.

பேப்பர்காரங்களுக்குப் போட்டியாக இணையப்போராளிகள் 'மல்ரி பெரல்' லை போட்டுத் தாக்கிறாங்கள்.

இதெல்லாம் போதாதெண்டு, தமிழ்த்தேசியப் புரட்சிப் பூக்கள் மன்னிக்கவும் தமிழ்த்தேசியப் புரட்சிப்புயல்கள்....

மன்னிச்சுக்கொள்ளுங்கள், தமிழ்த்தேசியப் புலிகள் 'இந்தா விடாதே பிடி' எண்டு பின்னால இருந்து காவேலையைக் கொழுத்திச் சனங்களின்ரை பின்பக்கத்தில பிடிக்கிறாங்கள்.

மற்றப்பக்கத்தில, ஜனாதிபதி தன்ரை சகபாடிகளோட மாத்தறையில போர் வெற்றியைக் கொண்டாடிறார். ஆனால், இது யுத்தவெற்றியில்லை. சமாதானத்தின் வெற்றி எண்டு சொல்லிறார்.

இதுக்குப் போட்டியாக கைதடியில நிண்டு, முள்ளிவாய்க்காலில இழந்தவைக்கு சிவாஜிலிங்கம் விளக்கேத்துறார்.

கீரிமலைக்குப்போய்ப் பிதிர்க்கடன் செய்யப்போறன் எண்டு சொல்லி அனந்தி சசிதரன் றோட்டில இருக்கிறார்.

புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் எண்டு சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கு.

ஐஞ்சு வருசத்துக்கு முந்தி நடந்த அவலக்காட்சிகளை அப்படியே மறந்திடக்கூடாது எண்டு இறைச்சிக்கடையைப் பரவி வைச்சிருக்கிறதைப்போல யாழ்ப்பாணப் பேப்பர் ஒண்டு சவப்பெட்டிக்கடையைப் பரவித் தேசியத்தொண்டை ஆற்றியிருக்கு.

அந்தக் காட்சிகளை இப்பிடிப் பரப்பிப் போட்டிட்டுத் தங்களின்ரை தேசியப்பணி நிறைவேறீட்டுது எண்டு நெஞ்சை நிமிர்திக்கொண்டு போய் நாலு ரின் பியர் அடிச்சிக்கினம் தேசிய ஊடகப்போராளிகள்.

இதையெல்லாம் பார்த்தால் இந்த நாடு உருப்படாது எண்டு சொல்லிறதைத் தவிர, வேற எப்பிடிச் சொல்லலாம்!

ஒரு கிழமைக்குள்ளதான் இந்தப்பக்கத்தில ஒரு விசயத்தை எழுதியிருந்தன். 'நான் அடிக்கிற மாதிரி அடிப்பன். நீ அழுகிறமாதிரி அழு' எண்டு ஒரு கேம் நடந்து கொண்டிருக்குதெண்டு.

அதுதானய்யா நடந்து கொண்டிருக்கு.

தமிழ்த்தேசியம் எண்டு சொல்லிக்கொண்டு இந்த மாதிரிச் சனங்களின்ரை தலையில கொள்ளியை வைக்கிற காரியங்கள் இஞ்சால் பக்கம் எண்டால்...

போர்வெற்றி, சமாதான வெற்றி எண்டு சொல்லிக்கொண்டு அங்கால் பக்கத்தை வளைச்சுப்பிடிக்கிற காரியங்கள் அங்க.. நடக்குது...

இதுதானே கடந்த 60, 70 வருசமாக நடந்து கொண்டிருக்கு...

இப்பவும் இதுதான் நடந்து கொண்டிருக்கு...

இனிமேலும் இதுதான் நடக்கப்போகுது...

இந்த நாடு உருப்படாது எண்டு சொன்ன வாய்க்கு ஆயிரம் பொன்....

 -வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல