ஞாயிறு, 20 ஜூலை, 2014

டி. வி. சீரியலுக்கும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ற டெக்னாலஜி வந்தாச்சுங்கோ!

பெரும்பாலான வீட்ல பெண்கள் எப்ப பாரு சீரியல் பார்க்கிறாங்கன்னு ஒரு சைடு – ஆம்பிளைங்க புலம்புவதும், – ஐயோ இன்னைக்கு கரென்ட் கட்டானால் என் சீரியல் எல்லாம் போச்சே இதை எப்படி பார்ப்பேன்னு பெண்கள் புலம்புவதும் சகஜமாய் அனேக வீட்டில் கேட்கும். தெரிந்தோ தெரியாமலோ உலகம் முழுவதும் இந்த சீரியல்களுக்கு எல்லா மனிதர்களும் அடிமை என்பது மிகையல்ல. ஆனால் அதற்கு ஏற்ற வண்ணம் இப்ப சில டி டி ஹெச் கம்பெனி காரங்க செட் டாப் பாக்ஸிலே ரெக்கார்டிங் வசதியுடன் வருவதால் – எப்பவாவது நீங்க மிஸ் பண்ணிய புரோகிராமை ரெக்கார்ட் செய்து வச்சு அப்புறம் பார்க்க முடியும், ஆனா காலையில 10:30ல இருந்து இரவு 11 மணி வரை சீரியலை எப்படி பார்ப்பாங்க ரெக்கார்ட் பண்ணினாலும் – இனிமேல் இதுக்கு ஒரு நல்ல முடிவு வந்திருக்கு…



அமெரிக்க தமிழரான வாசு ஸ்ரீனிவாசனும், டேவ் பென்னியும் மோட்டரோலா கம்பெனியின் முன்னாள் பணியாளர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து “ஸ்கிமோ” என்னும் புது வகை டெக்னாலஜியை கண்டுபிடிச்சிருக்காங்க. இதன் மூலம் 30 நிமிஷ சீரியலை வெறும் 2 நிமிஷத்தில பார்க்க முடியுமாம்.

இது பத்தி இவங்க என்ன சொல்றாங்கன்னா சினிமாவின் 2 மணி நேர படத்தை 67 – 90 சீன்களை கொண்டு எடுத்திருப்பாங்க ஆனா அதே 2 மணி நேர சீரியலை 20 – 30 சீன்கள் தான் இருக்குமாம் அதனால் முக்கிய காட்சி – முக்கிய வசனத்தை மட்டும் இந்த உபகரணம் (STV 1000) ட்ரிம் பண்ணி கொடுத்திடுமாம். இது ஒரு உபகரண வடிவில் வந்தாலும் இதை ஆப்ஸ் மூலமாகவும் இன்டர்னெட்டில் உள்ள பெரிய பெரிய சீரியல் / படம் எல்லாவற்ரையும் கூட கட் ஷார்ட் பண்ணி டக்குனு பார்த்திடலாமாம்.

ஹும்..கடைசில சீரியலுக்கும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பன்ற டெக்னாலஜியை கண்டுபிடிச்சது பல பேருக்கு மகிழ்ச்சி – ஏன்னா கரெக்டா சாப்பாடு வருமே டைமுக்கு………
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல