யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா?
ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம்.
டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- 3 கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு விடும்.
வீடியோவில் முன்னும் பின்னும் உள்ள மவுனததை நீக்கி விட்டு சேமிக்கும் வசதி இருக்கிறது. ஒலியின் தரத்தையும் சீராக்கி கொள்ளலாம். பெக்கோவிலேயே தேடல் வசதியும் இருக்கிறது. தேடப்படும் வீடியோவுக்கு இணையான தொடர்புடைய வீடியோக்களையும் பட்டியலாக பார்க்கலாம்.
இசைப்பிரியர்களுக்கு ஏற்ற அருமையான இணையதளம்; http://peggo.co/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக