ஞாயிறு, 20 ஜூலை, 2014

உலகின் மிக உயரமான டீனேஜ் பெண் (காணொளி இணைப்பு)


துருக்கியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் உலகின் மிக உயரமாக டீனேஜ் பெண் என்ற பட்டத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.



துருக்கியில் உள்ள கராபுக் பகுதியைச் சேர்ந்த ருமைசா கேல்கி என்னும் 17 வயது பெண், உலகின் மிக உயரமாக டீனேஜ் பெண் என்ற பட்டத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உள்ளார்.

7 அடி 9 இஞ்ச் உயரமுள்ள இவரின் பெற்றோரும், சகோதரர்களும் சாதாரண உயரம் கொண்டுள்ளனர். ருமைசா கேல்கி வேகமாக வளர்வதற்கு Weaver's syndrome என்னும் மரபணு பாதிப்பு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண உயரத்தை தவிர ருமைசா கேல்கியின் பாதம் 30.5 செ.மீ நீளமாக உள்ளது. அதீத வளர்ச்சியால் ருமைசாவிற்கு நடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது குறித்து ருமைசா கேல்கி தெரிவித்தபோது, நான் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன்.

நான் உயரமாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. மிக சிலரால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடியும், அந்த சிறப்பான சிலரில் நான் ஒருவராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல