யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் வடக்கில் சரஸ்வதி சன சமூக நிலையத்தை சேர்ந்த மக்களின் குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்து உள்ள சுடலை குறித்த அதிர்ச்சிப் பதிவு இது.
உரும்பிராய் வடக்கில் மக்கள் கூட்டம் குடியேறிய காலம் தொட்டே இச்சுடலையும் இருந்து வருகின்றது. இருளன் மயானம் என்று இச்சுடலை அழைக்கப்படுகின்றது. தற்போது இச்சுற்றாடலில் 200 குடும்பங்கள் வரை வாழ்கின்றனர்.
ஆனால் இச்சுடலை இப்பகுதி மக்களால் ஒருபோதும் பயன்படுத்தப்படுகின்றமை கிடையாது. மாறாக வெளியூர் ஆட்களே வந்து பிரேதங்களை எரித்துச் செல்கின்றனர்.
இருப்பினும் இங்கு பிரேதங்களை எரிக்கப்படுகின்றமையால் ஏற்படுகின்ற சுற்றாடல் பாதிப்புக்கு இப்பகுதி மக்களே உள்ளாகின்றனர்.
பிரேதங்கள் எரிகின்றபோது ஏற்படுகின்ற நாற்றம் தாங்க முடியாதது. இதனால் பிரேதம் எரிந்து முடிகின்ற வரை இப்பகுதி மக்கள் உண்ணவோ, குடிக்கவோ முடியாதவர்களாக உள்ளனர்.
இப்பகுதியில் திடீரென புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. இது வரை 15 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள். இவர்களில் 11 பேர் இறந்து போனார்கள்.
இதே நேரம் பிறப்பிலேயே குறைபாடு உடைய குழந்தைகளும் இங்கு அண்மைய வருடங்களில் பிறந்து உள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை 05.
இச்சுற்றாடலில் புற்று நோயாளர்கள் மற்றும் பிறப்பிலேயே ஊனமுற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமைக்கு இருளன் மயானமே காரணம் என்று இப்பகுதி மக்களால் விசுவாசிக்கப்படுகின்றது. இது குறித்து துறை சார்ந்த நிபுணர்களே வெளிப்படுத்த வேண்டும்.
சுடலையை சுற்றியதாக வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுடலையோடு சேர்ந்ததாக உள்ள விளையாட்டு மைதானத்தில் தினமும் இளையோர்கள், சிறுவர்கள் விளையாடுகின்றனர். சுடலையோடு சேர்ந்தால் போல உள்ள் வைரவர் ஆலயத்தில் திருவிழா எடுக்கின்றனர். அருகிலேயே சன சமூக நிலையமும் உள்ளது.
இச்சுடலையை அகற்ற வேண்டும் என்று ஊர் மக்களால் ஏகோபித்த வேண்டுகோள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விடயத்தில் பாராமுகமாகவே உள்ளது.

சுடலைக் கிணறு

மைதானம்

சனசமூக நிலையம்
பாலர் பாடசாலை
சுடலையை சுற்றியதாக வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுடலையோடு சேர்ந்ததாக உள்ள விளையாட்டு மைதானத்தில் தினமும் இளையோர்கள், சிறுவர்கள் விளையாடுகின்றனர். சுடலையோடு சேர்ந்தால் போல உள்ள் வைரவர் ஆலயத்தில் திருவிழா எடுக்கின்றனர். அருகிலேயே சன சமூக நிலையமும் உள்ளது.
இச்சுடலையை அகற்ற வேண்டும் என்று ஊர் மக்களால் ஏகோபித்த வேண்டுகோள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விடயத்தில் பாராமுகமாகவே உள்ளது.
புற்று நோயாளி
பிறப்பிலேயே ஊனமுற்ற குழந்தை
தாய்நாடு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக