புதன், 10 செப்டம்பர், 2014

முருகா... எங்களைக் காப்பாற்றுறது யாரப்பா.....?

இந்தியாவை நம்புங்கள்.

மோடியை நம்புங்கள்.

ஜெயலலிதாவை நம்புங்கள்.

கொழும்பை மடக்கப்போகிறம்.



மகிந்தரை மண்டியிடப் பண்ணுகிறம்.

இந்த வரப்போகுது...தீர்வு.

தமிழீழத்துக்குக் கிட்டவாக உங்களை (மக்களை) க் கொண்டு போய் விடப்போறம்.

டண்ட டக்கண டண்... டண்ட டக்கண டண்....

வெற்றிமேல் வெற்றி....

அண்ணனுக்கு ஜே... எங்கள் அப்பு சம்மந்தனுக்கு ஜே.....

யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள் மீண்டும் ஒருக்கால்.... முருங்கை மரத்தில் ஏறுகின்றன.

மீண்டும் சலிக்காத விக்கிரமாதித்தன் வேதாளத்துடன்.....

கோவிந்தா..... கோவிந்தா.... அரோகரா.... அரோகரா.....

'உலகத்தின் மகா முட்டாள்களாக தமிழ்ச்சனங்கள் இருக்கிறார்கள்' எண்டதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ் ஊடகங்களில் பலவும் தமிழ்ப் புத்திஜீவிகளும் வலு கெட்டித்தனமாகச் செய்து முடிச்சிருக்கினம்.

இன்னும் ஒரு தடவை தமிழ்ச்சனங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியா இனப்பிரச்சினைத்தீர்வுக்கு வழிகாட்டும் எண்டு சுத்த்த்த்த்த்தப்பம்மாத்துப் பண்ணியிருக்கினம்.

தெரியாமல்தான் கேட்கிறேன், இந்தத் தடவை, மோடி தலைமையில அல்லது, மோடியின்ரை ஆதரவோட இலங்கை இனப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று நாங்கள் சத்தியமாக நம்பலாமா?

அப்பிடி நம்பிறதுக்கு என்ன ஆதாரங்கள் இருக்கு?
இந்தியாவின்ரை மத்தியஸ்துவத்துடன்தான் பேச்சுவார்த்தை நடக்க வேணும் எண்டு கூட்டமைப்புக் கேட்டதாகவும் செய்திகள் சொல்லுகின்றன.

அப்பிடி 'மத்தியஸ்த்துவத்துக்கு வாய்ப்பில்லை எண்டால்... இந்தியா பார்வையாளராக – கண்காணிப்பாளராக இருக்கோணும் எண்டு இடித்துரைத்திருக்கு கூட்டமைப்பு' எண்டு ஒரு புலுடாச் செய்தியை யாழ்ப்பாணத்துச் செத்தவீட்டுச் செய்திகளைக் காவுகிற பேப்பர் ஒண்டு விட்டிருக்கு.

என்ன மாதிரியான தலையைச் சுத்தி அடிப்புகள்....

என்னமாதிரியான காதில பூவைக்கிற சங்கதிகள்....

நல்லூர்க்கந்தா..... சன்னிதி முருகா.... நீங்கள் எல்லாம் திருவிழாக் கொண்டாட்டத்தில...

எங்கட எம்பி மாரும் மாகாணசபை உறுப்பினர்களும் கொண்டாட்டத்தில....

சனங்களாகிய நாங்கள்தான் திண்டாட்டத்தில....

முருகா... எங்களைக் காப்பாற்றுறது யாரப்பா.....?

- வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல