அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் சத்லோக் ஆசிரமத்தை நடத்தி வந்தவர் சாமியார் ராம்பால் (வயது 63). கடந்த 2006 ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு கொலை வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதில் அவரை கைது செய்ய கடந்த 18 ஆம் தேதி காவல்துறையினர் சென்றபோது அவர்களுக்கும், சாமியாரின் அடியாட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், 6 பேர் பலியானார்கள். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பின்னர், மறுநாள் சாமியார் கைது செய்யப்பட்டார்.
அவர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன்பேரில், அவரை 5 நாள் காவலில் எடுத்தனர். இந்த வழக்கை விசாரிக்க அரியானா காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், சாமியாரின் ஆசிரமத்தை சோதனையிட்டனர்
சோதனையில் அவரது கைத்துப்பாக்கிகள், ஏர் கன்கள், இரட்டைக் குழல் துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு துளைக்காத வாகனம், ஒரு எண்ணெய் டேங்கர் லாரி, 2 டிராக்டர்கள், ஏராளமான இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் சோதனையில் புல்லட் புரூப் ஜாக்கேட்,4250 லத்திகள், 171 ஹெல்மேட்,12 பெட்ரோல் வெடிகுண்டுகள் கண்டெடுக்கபட்டன. மேலும் ரகசிய அறையில் ஆணுறை, போதைபொருட்களும் கண்டெடுகபட்டன. மேலும் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமிர பொருத்தப்பட்டு இருந்ததும் கண்டுபிடிகபட்டது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சாமியார் ஆசிரமத்தை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
சாமியாரின் நெருங்கிய உதவியாளர் பல்ஜித் மற்றும் அவரது மகள் பபிதா குமாரியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்து உள்ளன.
சாமியாருக்கு அதிர்ச்சி பாலியல் பழக்கம் இருந்துள்ளது. ராம்பால் தனது ஆசிரமத்தில் தனது தனி மாளிகையில் அவரது தனிப்பட்ட பணிவிடைகளுக்காக தேர்ந்து எடுக்கபட்ட பணிப்பெண்களை பயன்படுத்தி வந்துள்ளார். அவ்வாறு பணிப்பெண்களாக பயனபடுத்தப்படும் பெண்களுக்கு ”சாதிகயான்“என பெயரிடபட்டுள்ளது.
அந்த மாளிகையில் பல பணிப்பெண்கள் இருந்தாலும் குறிப்பிட்ட பெண்கள் தான் சாமியாரின் படுக்கையறைக்குள் நுழையமுடியும். 27 வயதாகும் பேபி என்ற பபிதா குமாரிதான் சாமியாரின் விருப்பமான படுக்கை துணை ஆவார்.
சாமியாரின் மகனின் அறையில் பபிதா தங்கி உள்ளார். ராம் பால் பபிதா பெயரில் 10 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பு நிதி செய்துள்ளார்.
ஹரியானா மாநில டிஜிபி எஸ்.என் வசிஷ்த் கூறுகையில், “ராம்பாலின் முக்கிய உதவியாளர் இந்த பபிதா. இவருடைய அப்பாவும் ராம்பாலின் ஆஸ்ரம முக்கிய நிர்வாகி. அவரும் கைதாகி சிறையில் உள்ளார்.
பபிதாவுடன் ராம்பால் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. உதவியாளராக இருக்கவும், ராம்பாலின் அறைக்குள் அடிக்கடி சென்று அவருடன் தங்கவும் பபிதா வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பபிதாவின் வீட்டில் இருந்து லேப்டாப், மொபைல் போன்கள், ஆபாச சிடிகள், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக