இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் வந்த நந்தினி, அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பள்ளியில் சென்ற ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்விக்கு விண்ணப்பித்தார்.
இருப்பினும் இந்திய மருத்துவத்துறை சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவக் கல்வி படிக்க முடியாது. ஆனால் பொறியியல் கல்வி படிக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் பொறியியல் படிக்க நந்தினி மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை, நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து கொண்டு, அவர்களை குடும்பத்துடன் இலங்கைக்கு திருப்பி அழைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சீன நாட்டில் சென்னியாங் நகரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் குறித்த நிறுவனத்தின் உதவியுடன் மருத்துவக் கல்வியை கற்று வருகிறார் நந்தனி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக