வெள்ளி, 12 டிசம்பர், 2014

பிரண்டை கேள்விபட்டிருக்கீங்களா…

நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க அம்மா இதை பறிச்சு அரைச்சு தோசமாவுல கலந்து தோசை சுட்டு கொடுத்திறாங்க. முடக்கத்தான் தோசை போல இதுவும் அ ருமையா இருக்கும். பச்சை கலர்ல தோசையை பார்க்கவே அவ்வளவு ஆசையா இருக்கும். ஏன்னா எப்பவுமே வெள்ளை, அரக்கு கலர்லையே தோசைய பார்த்து பழகிய சின்ன வயசுல பச்சை கலர் மேலும் ஆர்வத்தை அதிகபடுத்தும். எல்லாரு வீடு கொல்லபுரதுலயும் கேட்பாறின்றி வளர்ந்து கிடக்கும். மருத்துவ குண தெரியாத வயசுல ருசிக்காக சாப்பிட்டு இப்போ மருதுவத்துகாக கூட கிடைக்கமாட்டது. நகரத்துல.



பிரண்டை எடுத்து அதோட கூர்முனையை வெட்டி எடுத்துட்டு அதன் உள்சதையை சிறு சிறு துண்டா வெட்டி சட்டியில் போட்டு எண்ணெய் ஊத்தி மிளகு, பெருங்காயம், உப்பு, சுக்கு, தக்காளி, இஞ்சி, சீரகம், சோம்பு, ஓமம், வெங்காயம் இதெல்லாம் கையளவு சேர்த்து நல்லா வதக்கி அதை எடுத்து அம்மியில் வைச்சு நல்லா அரைச்சு உருண்டை செஞ்சு சுடு சோத்துல போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா செமையா இருக்கும். ஊளை சதை குறைஞ்சு நல்லா அப்டியே சிக்குன்னு செமத்தியா ஸ்ட்ராங்கா ஆக்கிடும்.

பிரண்டைக்கு இன்னொரு பெயர் வஜ்ரவல்லி. உடம்பை வஜ்ரம் பாய்ந்தது போல வைத்திருக்கக் கூடியது. எலும்புகளையும், நரம்புகளையும் வலுவாக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது. இப்போ அதோட அருமையும் பயனும் தெரியுது ஆனா இந்த நகர வாழ்க்கைல கிடைக்கமாட்டது.

சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடும . இத்தகைய நோய்க்கு பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

வேறுபெயர்கள்: கிரண்டை அரிசணி. வச்சிரவல்லி.
தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.
தாவரக்குடும்பம் - :VITACEAE.

(இது ஒரு சிறந்த கரு கலைப்பானாக நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. எனவே தான் மனதிற்கு பிடிக்காமல் போன மகனையோ ,மகளையோ உன்னை பெற்றதற்கு வயிற்றில் பிரண்டை வைத்து கட்டி இருக்கலாம் என்கிற வசவு சொல் இன்றும் வழக்கில் இருக்கிறது .

அறிவிப்பு இந்த மூலிகை பற்றிய விபரங்கள் அறிமுகமே .
உபயோகப்படுத்தும் போது இதில் வல்லுனரை கலந்து ஆலோசித்து செய்யவும்.)
-தஞ்சை தேவா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல