திங்கள், 26 ஜனவரி, 2015

3 மில்லியன் பெறுமதியான வைர நகையை திருடிய 12 வயது சிறுமி ஹொங்கொங் பொலிஸார் தேடுகின்றனர்

ஆடம்­பர நகைக்கடை­யொன் ­றி­லி­ருந்து 3 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான கழுத்தில் அணியும் வைர ஆப­ர­ணத்தை கள­வா­டிய 12 வயது சிறுமியொரு­வரை ஹொங்கொங் பொலி ஸார் வலைவீசி தேடி வரு­கின்­றனர்.



மேற்­படி திட்­ட­மிட்ட கொள்­ளையில் 30 வய­துக்கும் 40 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டைய பெண்கள் இரு­வரும் ஆணொ­ரு­வரும் பங்­கேற்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­ கின்­றது.

செல்­வந்­தர்கள் போன்று ஆடை­ய­ணிந்து வந்த மேற்­படி மூவரும் எம்­பரர் நகைக்­கடை உத்­தி­யோ­கத்­தர்­க­ளிடம் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்தவேளை, 12 வயது சிறுமி அந்த நகைக்­க­டையின் அலு­மாரி இழுப்­ப­றை­யி­லி­ருந்த சாவி­யொன்றை திருடி கண்­ணாடி அலு­மா­ரியைத் திறந்து கழுத்து ஆப­ர­ணத்தைக் கள­வாடி தனது சட்டைப் பையில் மறைத்து வைத்துக் கொண்­டு ள்ளார். அதன் பின் சிறுமி அந்த நகைக்­க­டையை விட்டு வெளி­யே­றி­யதும் தனது தோற்­றத்தை வேக­மாக மாற்றிக்கொண்டு வாட­கைக் காரொன்றில் தப்­பிச்­செல்­வது அங்­கி­ருந்த சிசி­ரிவி கண்­கா­ணிப்பு வீடியோ கரு­வியில் பதி­வா­கி­யுள்­ளது.

சிறு­மியால் கள­வாடிச் செல்­லப்பட்ட நகையில் சுமார் 100 கரட் அளவான 30 க்கு மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல