திங்கள், 26 ஜனவரி, 2015

ஒபாமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடி….

வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் அவர்களை நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ வரவேற்கும் மரபு கிடையாது. வழியனுப்பும் போது மட்டும் விமான நிலையம் வந்து வழியனுப்புவார்கள்.



மத்திய மந்திரி ஒருவர்தான் தலைவர்களை வரவேற்க விமான நிலையம் வந்து காத்திருப்பார். அதேபோல் இப்போது ஒபாமாவை வரவேற்கும் வரவேற்பு குழு தலைவராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒபாமாவை வரவேற்க பாலம் விமான நிலையம் வந்து வரவேற்பறையில் காத்து இருந்தார்.

ஆனால் திடீர் என்று பிரதமர் நரேந்திர மோடி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். ஒபாமா விமானம் தரை இறங்கியதும் மோடி அந்த விமானத்தின் அருகே சென்று நின்று கொண்டார். அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

ஒபாமா விமான படிக்கட்டுகளில் இருந்து மனைவியுடன் கைகோர்த்த படி இறங்கி வந்தார். அவர் தன்னை வரவேற்க மோடி வந்திருப்பதை கவனிக்க வில்லை. முதலில் அங்கிருந்த ராணுவ அதிகாரி பக்கம் ஒபாமா சென்றார். அவர் ஒபாமாவை கைகுலுக்கி வரவேற்றார். அவருக்கு அருகில் பிரதமர் மோடி நின்றிருப்பதைப் பார்த்து ஒபாமா ஆச்சரியம் அடைந்தார்.

உடனே மோடி முன்னால் சென்று ஒபாமாவை கை குலுக்கி வரவேற்றார். இருவரும் கட்டித்தழுவிக் கொண்டனர். ஒருவர் முதுகில் ஒருவர் தட்டிக் கொடுத்தனர். தன்னை மோடி விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றது ஒபாமாவை நெகிழ வைத்து விட்டது.

பின்னர் மனைவி மிச்செலியை மோடிக்கு ஒபாமா அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு மிச்செலியை மோடி கை குலுக்கி வரவேற்றார். 3 பேரும் சேர்ந்து நின்றபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். ஒரு நிமிடம் சிரித்துக் கொண்டே மோடியும், ஒபாமா பேசியபடி இருந்தனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி விமான நிலையம் வந்திருந்த மத்திய மந்திரிகளை ஒபாமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு ஒபாமாவை அவரது காருக்கு அழைத்துச் சென்றார். ஒபாமா காரில் ஏறி அமர்ந்து மோடியிடம் விடை பெற்றார். கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை மோடி அவரது காரின் அருகில் நின்று கொண்டு இருந்தார். கார் சென்ற பிறகே மோடி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

டெல்லியில் அதிகாலையில் பனி மூட்டம் இருக்கும் என்பதால் பனி விலகிய பின்பு 10 மணிக்கு ஒபாமா விமானம் வரும் வகையில் பயண நேரம் அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும் முன் எச்சரிக்கையாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் ஒபாமா விமானம் தரை இறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் ஒபாமா விமானம் காலை 9.40 மணிக்கு டெல்லியிலேயே தரை இறங்கியது.

வழக்கமாக வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கும் போது பிரதமர் கோட்–சூட் அணிவது வழக்கம். ஆனால் மோடி எளிமையான முறையில் மஞ்சள் நிறத்தில் பைஜாமாவும் குர்தாவும் அணிந்து தோளில் சிவப்பு சால்வை அணிந்து இருந்தார்.

அவரது எளிமையைப் பார்த்து ஒபாமா வியந்தார். சாதாரண முறையில் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இதற்குமுன் 2010–ம் ஆண்டு ஒபாமா இந்தியா வந்த போது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் விமான நிலையம் சென்று வரவேற்றார். இப்போது 2–வதாக மோடியும் ஒபாமாவை விமான நிலையத்தில் வரவேற்றது குறிப்பிடத்தக்கது
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல