வெள்ளி, 16 ஜனவரி, 2015

பொருளாதார வலயத்தில் கைப்பற்றப்பட்ட விமானத்தின் மர்மம் (படங்கள், காணொளி இணைப்பு)

நாரம்பிட்டிய பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறியவகையான விமானத்தை உருவாக்கினார் என்று சிலாபம் - பங்கதெனியா – தெமடபிட்டியவைச் சேர்ந்த ஹெமிலட் மாடிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.



பொறியியலாளரும், முன்னாள் விஞ்ஞானியுமான ரே விஜேவர்தனவின் கொழும்பு வீட்டில் வைத்து இதை உருவாக்கியதாக இவர் கூறியுள்ளார்.

இவ்விமானத்தை சிலாபம் - களுத்துறை பிரதேசங்களின் வான்பரப்பில் செலுத்தி இருப்பதாகவும் இவர் குறிப்பிட்டார்.

எனினும், தனியார் விமானங்கள் செலுத்தப்படுதவதற்கு அரசாங்கம் தடை விதித்ததை அடுத்து இவ்விமானத்தை விமான பயிற்சி பாடசாலையிடம் கையளித்ததாக சொன்னார்.

இதே நேரம்இச்சிறிய விமானத்தை யோசித்த ராஜபக்ஸவுக்கு அன்பளிப்பாக வழங்கினார் என்று திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னம் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2013 ஆம் அண்டு ஜனவரி மாதம் இதைகு அன்பளிப்பு செய்ததாக இவர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் அவசர பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே விமானம் மீட்கப்பட்டது.

இரண்டு பேர் மாத்திரம் பயணிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ள இவ்விமானம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
















Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல