வெள்ளி, 16 ஜனவரி, 2015

கனரக தோண்டும் வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பெண் பலி


தனது வீட்­டிற்கு அருகில் கன­ரக தோண்டும் வாக­னத்தால் மேற்­கொள்­ளப்­பட்ட நிலத்தை தோண்டும் நட­வ­டிக்­கையால் தனது வீட்­டிற்கு ஏற்­பட்ட சேதத்­துக்கு நஷ்ட ஈடு பெற அந்த வாக­னத்தின் சார­தியை தடுத்து நிறுத்த முயன்ற பெண்­ணொ­ருவர் தவ­று­த­லாக அந்த வாக­னத்தின் கீழ் சிக்கி நசுங்­குண்டு உயி­ரி­ழந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.



ஹுபி மாகா­ணத்தில் யிசெங் நக­ரி­லுள்ள கொங்வான் எனும் இடத்தைச் சேர்ந்த ஸென் சங் (48 வயது) என்­ப­வரே இவ்­வாறு மர­ண­மா­கி­யுள்ளார்.

ஒரு வாரத்­துக்கு முன்னர் கொங்வான் பிராந்­தி­யத்தில் நிலக்கீழ் எண்ணெய் குழா­யொன்றை பொருத்­து­வ­தற்­காக நிலத்தை தோண்டும் நட­வ­டிக்­கையில் யு பின் (29 வயது) என்ற சாரதி ஈடு­பட்ட போது, ஸென்னின் வீட்டு சுவரில் வெடிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இதனால் சின­ம­டைந்த ஸென்னும் அவ­ரது கணவர் யு சங்கும் (49 வயது) தமது வீட்­டிற்கு ஏற்­பட்ட சேதத்­துக்­காக நஷ்டஈடு தர வலி­யு­றுத்தி யு பின்னின் தோண்டும் வாக­னத்தை அங்­கி­ருந்து செல்ல விடாது தடுத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் நஷ்டஈட்டு பணத்தை வழங்கி வாக­னத்தை மீட்டு செல்­வ­தாக கூறிச் சென்ற யு பின், மறுநாள் அதி­காலை அங்கு வந்து இர­க­சி­ய­மாக அந்த வாக­னத்தை செலுத்திச் செல்ல முயற்­சித்­துள்ளார்.

இதன் போது சத்தம் கேட்டு விழித்­தெ­ழுந்த ஸென், வாகனம் அங்­கி­ருந்து செல்­வதை தடுக்கும் முக­மாக அதற்கு குறுக்கே படுத்­துள்ளார். அவரைக் கவ­னிக்­காத யு பின் வாகனத்தைச் செலுத்தவும் வாகனம் ஸென்னின் உடலில் ஏறி அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல