ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. இந்த மாற்றத்தினூடாக மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் ஒருபுறம் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவும் தேர்தல் கால வாக்குறுதிகளைக் காப்பாற்றவுமென பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடரில் அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களும் நிறுவனத் தலைவர்களும் நியமிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் விசுவாசிகளாக பரிணமித்த பலர் அவரைவிட்டு விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டிருக்கிறார்கள். மாகாண,மாநகர, நகர, பிரதேச சபைகளின் ஆட்சி மாற்றங்களுக்காக தமது இணைவுகளை ஆயுதமாகவும் பேரம் பேசலுக்கான கருவியாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கையில், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கருதப்படும்–கண்டுபிடிக்கப்படும் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமும், குற்றப்புலனாய்வுப் பிரிவிடமும் முறைப்பாடுகளும் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக் ஷவின் குடும்ப உறுப்பினர்களால் புரியப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிமிக்க புது புது விடயங்கள் நாளாந்தம் சமூக வலைத்தளங்களையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களையும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
நாட்டின் நடப்புக்களை நாளாந்தம் அறிந்துகொள்வதற்காக வாசகர்கள் பத்திரிகைகளை வாங்குவதற்காக பத்திரிகை விற்பனை நிலையங்களை காலை வேளையிலேயே முகாமிட்டிருப்பதையும் சமூக இணையத்தளங்களை இளைஞர்களும் கணினி அறிவுடையோரும் நிமிடத்திற்கொருமுறை திறந்து பார்ப்பதையும் காணக்கிடைக்கிறது. இவ்வாறு தேர்தல் நிறைவடைந்த நாள் முதல் நகரும் நாட்கள் எல்லாம் மிக விறுவிறுப்பாக நகர்வதையும் சம்பவங்கள் இடம்பெறுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த விறுவிறுப்பாக நகரும் நாட்களை உருவாக்கிய, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைந்த மக்கள், மக்களால் ஒன்றிணைந்த மக்கள் பிரதிநிதிகள் பதவிகளுக்காக ஆடும் ஆட்டங்களைக் கண்டு மெய்மறந்து நிற்கின்றனர்.
குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தில் அதிலும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் நிலைமை பல கேள்விக் கணைகளை முஸ்லிம் சமூகத்தில் சமகாலத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஆட்சிமாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான ஆட்சி தொடர்பாகவும் முதலமைச்சர் பதவி குறித்தும் எழுந்துள்ள கேள்விக் கணைகளாகும்.
பதவியும் சமூக ஒற்றுமையும்
தற்போது வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏணைய மாகாணங்களின் ஆட்சி அதிகாரம் மாறும் நிலையில் உள்ளது. ஊவா மாகாண சபையின் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மேல், வடமேல், மத்திய, கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சியிலும் மாற்றங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகம் வாழும் கிழக்கு மாகாண ஆட்சியிலும் மாற்றம் வரப்போகிறது.
இந்த ஆட்சி மாற்றத்தின்போது யார் முதலமைச்சர் பதவி வகிப்பது? எந்த இனத்திற்கு முதலமைச்சர் பதவி போகப்போகிறது என்ற கேள்வி தற்போது தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பதவி பெயர்களால் தமிழ்–முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையில் சிதைவு ஏற்படாது பாதுகாக்க வேண்டியது இரு சமூக, அரசியல் தலைமைகளினது பொறுப்பாகும் அவை விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் அணுகப்பட வேண்டும்.
2012ஆம் ஆண்டின் சனத் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனையோர் அடங்கலாக 1,551,381 மக்கள் தொகையினர் வாழ்கின்றனர். இவர்களில் தமிழ் மக்கள் 617,295 பேரும் முஸ்லிம்கள் 569,738 பேரும் சிங்களவர்கள் 359,136 பேரும் அடங்குவதுடன் ஏனையவர்களாக 5,212 பேர் உள்ளனர்.
கிழக்கில் வாழ்கின்றன மக்களின் விகிதாசாரத்தைப் பார்க்கின்றபோது 39.79 வீதமான தமிழர்களும் 36.72 வீதமான முஸ்லிம்களும் 23,15 வீதமான சிங்களவர்களும் உள்ளனர். வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்தபின் முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 2008ஆம் ஆண்டு நடைபெற்றது. இததேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்திருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து போட்டியிட்டன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டதுடன் மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
308,886 வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாண சபைக்கான 37 ஆசனங்களில் 20 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்று கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்தது. பிள்ளையான் என்றழைக்கப்டும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இச்சபையின் முதலமைச்சராக 5 வருடங்கள் பதவி வகித்தார்.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஆவது கிழக்கு மாகாண சபையின்போது பிரதான கட்சிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி அவற்றுடன் சில சிறிய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டன.
அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் போட்டியிட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டது.
கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றது. இதில் 3 ஆசனங்கள் தேசிய காங்கிரஸுக்குரியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 64,190 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை ஐ.ம.சு.கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது இதில் 3 ஆசனங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குரியது. ஒன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குரியது. திருகோணமலை மாவட்டத்தில் 43,324 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை ஐ.ம.சு. கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. ஆக, 12 ஆசனங்களுடன் 2 போனஸ் ஆசனமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கிடைத்தது,
ஆனால், தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 3 ஆசனங்களும் தேசிய காங்கிரஸின் ஒரு ஆசனமும் மற்றும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஒரு ஆசனமும் தற்போதைய ஜனாதிபதியின் பக்கம் உள்ளன ஐ.ம.சு.கூட்டமைப்பின் மொத்தம் 14 ஆசனங்களில் 5 ஆசனங்கள் இழக்கப்பட்டுள்ளன. ஆக 9 ஆசனங்களே கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பக்கம் உள்ளது.
கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இததேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 193,827 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைப் பெற்றுக் ோகண்டது. அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132,917 வாக்குகளைப் பெற்று மொத்தமாக 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 74,901 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி 95,22 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது,
தற்போதைய நிலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே அதிகூடிய 11 ஆசனங்கள் உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் 7 ஆசனங்களும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துள்ளதாகக் கருதப்படும் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் ஆசனம் உட்பட மு.கா.பக்கம் 8 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 4 ஆசனங்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 3 ஆசனங்களும் மற்றும் ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து விலகிய திருகோணமலை மாவட்ட உறுப்பினர் பிரியந்த பிரமேகுமாரவின் ஒரு ஆசனம் உட்பட்ட மத்திய தேசிய அரசாங்கத்தின் பக்கம் மொத்தமாக 27 ஆசனங்கள் உள்ளன. இதில் ஆசனங்கள் வரிசையில் நோக்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் 11 ஆசனங்கள் உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் 8 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்துள்ள கட்சிகளின் ஆசனங்களைச் சேர்த்து 8 ஆசனங்களும் உள்ளன.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படுமாயின் எந்தக் கட்சிக்கு எந்தப் பதவி வழங்குவது என்ற இடியப்பச் சிக்கல் ஏற்படுவது யதார்த்தம். மக்களினதும் மாகாணத்தினதும் எதிர்கால நலன் கருதி பதவி விடயத்தில் விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்பதை சகல தரப்புக்குகளும் புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்வது முக்கியமானது.
கிழக்கு மாகாணம் மூவின மக்களையும் கொண்ட ஒரு மாகாணம் என்பதனால் அம்மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயற்படுவதற்கான பதவிப் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுவது அவசியம். ஆனால் தற்போது எழுந்துள்ள கேள்வி, யாருக்கு எந்த எந்தக் கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதாகும்.
கிழக்கு மாகாண சபைக்கு இன்னும் ஏறக்குறைய இரு வருட ஆட்சிக்காலமே உள்ளது. முதலமைச்சர் பதவிக்காக 3 பிரதான கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்தப் பதவிப் போட்டியானது கட்சிகளுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் மாவட்டங்களுக்கிடையிலும் பிரதேசங்களுக்கிடையிலும் முரண்பாடுகளையும் வாதப் பிரதிவாதங்களையும் பிரதேச வாதங்களையும் ஏற்படுத்தாது இருப்பதில் தேசிய அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமாகும். அத்துடன் கட்சிகளும் இதில் அக்கறைகொள்வது ஆரோக்கியமான எதிர்காலத்தை இம்மாகாணத்தில் ஏற்படுத்த வழிவகுக்கும்.
ஆளுனர் மற்றும் முதலமைச்சர் பதவிகளில் ஆளுனர் பதவியை ஒரு பெரும்பான்மை சிங்கள பிரதிநிதிக்கு வழங்குவதுடன், முதலமைச்சர் பதவியை எஞ்சியிருக்கும் இரு வருட ஆட்சிக் காலத்தில் ஒரு வருடத்திற்கு தமிழ் தரப்புக்கும் மற்றுமொரு வருடத்தை முஸ்லிம் தரப்புக்கும் வழங்க அரசாங்கம் முடிவுசெய்யுமாயின் அம்முடிவானது பிரச்சினைகள் உருவாகுவதைத் தவிர்க்கும். அத்தோடு வழங்கப்படும் பதவிகள் சமூக ஒற்றுமையைச் சிதைக்காது சமூக மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்குமெனவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது கவனத்திற்கொள்ளத்தக்கது
இந்நிலையில், ஒரு வருட முதலமைச்சர் பதவி தமிழ் தரப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குச் செல்வதில் பெரியளவில் பிரச்சினைவாராது. கட்சி தீர்மானிக்கும் ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் முதலமைச்சராகலாம் ஆனால், முஸ்லிம் தரப்பில் ஒரு வருட கால முதலமைச்சர் பதவி யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு வழங்குவது என்ற பிரச்சினை எழலாம். அந்த வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் யாருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது என்ற திரிசங்கு நிலை மு.கா.வின் தலைமைக்கு ஏற்படுவது திண்ணம். தலைமைத்துவத்தின் ஆளுமையுள்ள முடிவிலேயே பிரதேசவாதமும் பிரிவினைகளும் ஏற்படாதிருப்பதைத் தவிர்க்கும். ஆட்சி மாற்றம் பிரதேச ஒற்றுமையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
மக்கள் நலனும் கோரிக்கையும்
ஆட்சி மாற்றம் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மையென்றபோதிலும் அம்மாற்றமானது பதவிகளிலும் ஆசையையும் அதிருப்பதியையும் ஏற்படுத்திவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. தங்களை மக்கள் பிரதிநிதிகளாக ஆக்கி அலங்கரித்தவர்கள் மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காது கடந்த 7ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட்டு அவரின் வரப்பிரசாதங்களை அனுபவித்துவிட்டு 8ஆம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து நாங்களும் ஆட்சியிலேதான் இருக்கிறோம். புதிய ஆட்சிக்கு எங்களது ஆதரவும் உண்டு என சில அரசியல்வாதிகள் வாய்கிழிய ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி இந்நாட்டு மக்களிடம் கூறிவருகிறார்கள். இவை அவர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்காளிகளாக பரிணமிப்பதற்கு மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் என மக்கள் பேசிக் கொள்வதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
நாட்காலிகள் மீதான ஆசை நடு வீதியில் தள்ளியிருக்கும் நிலைமையை நாம் கண்டுள்ளோம். வரிச்சுமைகளினால் மக்களை வாட்டிவதைத்து, ஏழ்மைக்குத் தள்ளி, ஒவ்வொருவரையும் கடனாளிகளாக ஆக்கி ஆட்சி மேற்கொண்ட அரசாங்கத்தை இறைவன் சின்னாபின்னமாக்கியுள்ளான் என்ற வரலாற்றை வாசித்து கொண்டிருக்கும் இந்நாட்களில் பதவிகளைப் பெறுவதில் மக்கள் பிரதிநிதிகள் முண்டியடிப்பது வேதனையளிக்கிறது.
கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டு மக்கள் அரச ஆதரவுடன் பேரினவாத சக்திகளின் தாக்குதல்களினால் மனமுடைந்து அவர்களை வளர்க்கும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்ற நிலையை உருவாக்கி இருந்தனர் என்பது தெரிந்த விடயம்.
அதற்கான சந்தர்ப்பமாக வந்ததே ஜனாதிபதித் தேர்தல் எந்தவொரு கட்சித் தலைவர்களும் இவருக்குத்தான வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு முன்னமே இவருக்குத்தான் வாக்களிப்பது என்று இந்நாட்டிலுள்ள ஏறக்குறைய 11 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்களும் முடிவெடித்திருந்த நிலையில், மக்களோடு இணைந்துவிடாதுவிட்டால் நமது எதிர்கால அரசியல் பூச்சியமாகிவிடும் என்று பயந்து ஓடோடி வந்து, நாங்களும் உங்களுக்குத்தான் ஆரதவு என்று இணைந்து கொண்டும் மக்களின் உணர்வுகளோடு சங்கமித்துவிட்டோம் என்று மக்களையும் வழமையாக ஏமாற்றுவது போன்று ஏமாற்றி முஸ்லிம்களின் முழு ஆதரவையும் பெற்றுத் தருகிறோம் என்று எதிரணியாகச் செயற்பட்ட கட்சிகளுக்கும் படம் காட்டிவிட்டு தற்போது அமைச்சுப் பதவிகளுக்காகவும் முதலமைச்சர் பதவிக்காகவும் போட்டிபோடுவதில் என்ன சுரணையிருக்கிறது.
இன்றுள்ள முஸ்லிம் 18 பாராளுமன்ற உறுப்பினர்களிலும் 100க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களிலும் கணிசமான எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் வழிநடத்திய மு.கா.வின் தோற்றுவாயிலிருந்து தோன்றியவர்கள்.
அத்தலைவர் பிரதேச வேறுபாடின்றி தேசிய ரீதியில் சிந்தித்து முஸ்லிம்கள் மாத்திரமின்றி இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் பயன்பெற வேண்டுமென்பதற்காக தனது அதிகாரத்தையும் ஆளுமையும் பதவியையும் பயன்படுத்தி உரிமைகளைப் பெற்றுக்கொண்டதோடு அபிவிருத்திகளையும் மேற்கொண்டார்.
புதிய முஸ்லிம் அரசியல் யுகத்தின் தந்தையெனப் போற்றப்படும் அத்தலைவன் விதைத்த விதையிலிருந்து முளைத்தவர்கள் தங்கள் தங்களது நலன்களுக்காக கட்சிகளை உருவாக்கி, அதனூடாக தங்களது அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் தூய எண்ணத்துடன் செயற்படாது, முஸ்லிம்களுக்கெதிராக பிரச்சினைகள் எழுகின்றபோது கடன்கழிப்பது போன்று அறிக்கைகளை மாத்திரம் விட்டுவிட்டு தங்களது பிரதேச அபிவிருத்தியில் மாத்திரம் அக்கறை செலுத்தியதையும் தங்களுக்கு எங்கெல்லாம் வாக்குகள் இருக்கிறதோ அங்கெல்லாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் மக்கள் அறியாமலில்லை. அவை கடந்த காலங்களில் நடந்தேறிய கசப்பான உண்மைகளாகும்
வடக்கு, கிழக்கு உட்பட இந்நாட்டிலுள்ள கணிசமான முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ். இந்தக் கட்சியின் தலைமைத்துவம் உட்பட இக்கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி அமைச்சர்களாவும் பிரதி அமைச்சர்களாகவும் பதவி பெற்றவர்கள் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களாக பரிணமித்தவர்கள் கடந்த காலங்களில் இந்தக் கட்சிக்காக வாக்களித்த மக்களுக்குச் செய்த சேவை என்ன என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுப்பப்டாமல் இல்லை.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேச வீதிகளே அவர்களின் சேவைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது. யாரோ புரிந்த அபிவிருத்திப் பணிகளுக்கு தங்களது பெயரை போட்டுக்கொண்டு தங்களால் செய்ய வேண்டிய அபிவிருத்திப் பணிகளை செய்யாமல் பதவிகளை பக்குவமாக வைத்துக்கொண்டிருந்த வரலாறுகளே அதிகம். அந்த வரலாற்றுத் தவறுகளை எதிர்காலத்திலும் தொடரச் செய்வதற்காகவா பிரதேசவாதத்தைத் தூண்டிவிட்டு பதவிகளைப் பெறுவதற்கு தற்போது முன்னுரிமை வழங்கும் வகையில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன என்பதையும் மக்கள் விளங்கிய வண்ணம் உள்ளனர்.
மக்களின் நலன்களைப் பெறுவதற்கு முன்னுரிமை வழங்காது தங்களதும் தங்களை அங்கீகரிப்பவர்களினதும் எதிர்கால வாழ்வு இன்பகரமாக அமைய வேண்டுமென்பதற்காக பதவிகளைப் பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படப்போகிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது, கடந்த காலங்களில் இவர்கள் வகித்த பதவிகளினால் பயன்பெற்றது யார், யார் என்று சிறு ஆய்வு செய்தாலே போதும் அத்தனையும் வெளிச்சத்திற்கு வரும் மாற்றத்திற்காக மக்கள் தங்களது பாதுகாப்பையும் அடகுவைத்து எதிர்காலத்தின் அச்சத்திற்கு மத்தியில் ஒன்றிணைந்தபோது வரப்பிரசாதங்களை விட்டுவிட்டு வரமுடியாமல் மாறி மாறிக் கூட்டங்களை நடத்துவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் முதலமைச்சர் பதவிகளையும் பிரதி அமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்.
இந்தநிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் பிரதேசவாதக் கோரிக்கைகளுக்கும் தூண்டுதல்களுக்கும் துணைபோகுமாயின் மு.கா.வின் எதிர்காலம் மக்களின் நம்பிக்கை இழந்ததாக மாறிவிடும். யாருக்கு பதவி வழங்குவது என்பது முக்கியமல்ல. யாருக்கு அவை வழங்கப்பட்டால் மக்கள் நலன்கள் பெறுவார்கள் பிரதேசங்கள் வளம் என்பதே கவனிக்கத்தக்கது. அவற்றில் கவனம் செலுத்துவது ஆளுமையுள்ள தலைமைத்துவத்தில் தங்கியுள்ளது. கடந்த கால வரலாறுகளை சான்றுகளாகக் கொண்டு மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளக் கூடியவர்களுக்கு பதவி வழங்குவதில் மு.கா.வின் தலைமைத்துவம் மறைந்த தலைவரின் ஆளுமையுள்ள அனுபவங்களை வழிகாட்டல்களாக பின்பற்ற வேண்டுமேன்பதே மு.கா.வின் சமூக நலன் கொண்ட அபிமானிகளின் கோரியாக்கையாகவுள்ளது.
எம்.எம்.ஏ.ஸமட்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக