கனடாவில் வெள்ளிக்கிழமை கிடைக்கும்
கனடா- பரிசில் இடம்பெற்ற சார்ளி ஹெப்டு கார்ட்டூன் பத்திரகை பயங்கரவாத தாக்குதலில் நான்கு பத்திரிகை கார்ட்டூன் சித்திர ஓவியர்கள் கொல்லப்பட்ட பின்னர் வெளிவந்துள்ள இதழ் ஈபே போன்ற தளங்களில் பெருமளவிலான கேள்வி மனுக்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றன.
புதன்கிழமை காலை வெளியீட்டின் ஒரு பிரதி சுமார் 680-கனடிய டொலர்களிற்கு ஈபேயில் விற்பனையாகி உள்ளது. ஆரம்ப விலையாக 500-அமெரிக்க டொலர்களிற்கு 6-மனுக்கள் கிடைக்கப்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய இதழ் பரிசில் விடிவதற்கு முன்னரே விற்பனையாகி விட்டது.
வழக்கத்தை விட 50-தடவை அதிகமாக 3-மில்லியன் பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு உலகம் பூராகவும் மக்கள் பிரதிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கனடாவிற்கு 1,500 பிரதிகள் மட்டும் வெள்ளிக்கிழமை கிடைக்க கூடியதாக இருக்கும்.
இந்த நையாண்டி பத்திரிகை வழக்கமாக கியுபெக்கிலும் மற்றும் ரொறொன்ரோவில் ஒரு கடையிலும் மாத்திரம் கிடைக்க கூடியதாக இருந்தது. ஆனால் இம்முறை விநியோகம் பரந்த அளவில் இருக்கும் என கனடிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளதாகவும் இருப்பினும் அதிகரிக்கப்பட்ட தயாரிப்பு கனடாவின் தேவையை பூர்த்தி செய்வது கடினமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
canadamirror




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக