அக்கா,
சற்று இங்கே பாருங்கள் நாங்கள் பேசவேண்டிய அவசியம் உள்ளது.
ஸ்ரீலங்கா பிரச்சினைகளை நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத அதே வேளை, கடந்த
வாரம் சொல்லப்பட்ட சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதேவேளை உங்கள்
கருத்துக்கள் எனக்குத் தெரிந்த பெரும்பாலான ஸ்ரீலங்காவாசிகளை
பிரதிநிதித்துவப் படுத்துபவவை அல்ல, நான் இந்தக் கடிதத்தை என்னுடைய
சிந்தனைகள் ஏதோ ஒரு வழியில் உங்களுடன் பொருத்தப்படும் என்கிற
நம்பிக்கையில்தான் எழுதுகிறேன்.- 1.புலம் பெயர்ந்தவர்கள் விடயம்
எங்கள்
சம்பாஷணையின் ஆரம்ப உரையாடலில் இருந்து இதை தொடங்க விரும்புகிறேன்: புலம்
பெயர்ந்தவர்களைப் பற்றி ஸ்ரீலங்காவாசிகள் ஏன் கவலைப்பட வேண்டும்? அதில்
ஒன்று, புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கள் ஸ்ரீலங்காவாசிகளுக்கு பெரிய
விஷயமாகத் தோன்றுவதுதான். இதை புரிந்துகொண்ட ஜனாதிபதி ராஜபக்ஸ
ஸ்ரீலங்காவாசிகள் தமிழ் புலம் பெயர்ந்தவர்களைக் கண்டு அச்சமடைய வேண்டும்
என்கிற இந்த யோசனையை முதற்கோளாக வைத்துத்தான் தனது முழுப் பிரச்சாரத்தையும்
மேற்கொண்டார். இன்றும்கூட, சிங்கள தேசியவாதிகள் மற்றும் பௌத்த
தீவிரவாதிகள் தமிழ் புலம் பெயர்ந்தவர்களை தங்களின் ஒரு பிரச்சார ஆயுதமாகத்
தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இரண்டாவது
காரணம்: புலம் பெயர்ந்தவர்களில் உள்ள அங்கத்தவர்கள் கொண்டுள்ள தொழில்
திறன், அறிவாற்றல் மற்றும் பணம் என்பன அனைத்து ஸ்ரீலங்காவாசிகளின்
நலன்களையும் மேலுயுயர்த்தப் பயன்படும். தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் பற்றிய
உங்கள் ஒதுக்கீடுகள் மேலெழுவதுக்கு காரணம் தமிழ் புலம் பெயர்ந்தவர்களின்
கலப்பற்ற பன்முகத்தன்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியதுதான்.
உதாரணத்துக்கு லண்டனில் வாழும் தமிழ் தேசியவாதியான எனது நண்பர் பாலாவை
எடுத்துக் கொண்டால். பாலா உண்மையிலேயே புத்திசாலி, கூடிவாழப் பிரியமுள்ளவர்
மொத்தத்தில் அற்புதமான மனிதர். ஸ்ரீலங்கா தொடர்பான விடயங்கள் வரும்போது
நாங்கள் வெறுமே ஏற்றுக்கொள்வதில்லை.
இதனால்தான் தமிழ் புலம் பெயர்ந்தவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமானதும் முற்றிலும் தவறானதும் ஆகும்.
- 2.தமிழ் புலம் பெயர்ந்தவர்களுக்கும் மற்றும் ஸ்ரீலங்காவாசிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள்
தமிழ்
புலம் பெயர்ந்தவர்கள் (ஸ்ரீலங்காவுக்கு வெளியே வாழும் பிரத்தியேகமாகத்
தமிழர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள்) மற்றும் ஸ்ரீலங்கா புலம்
பெயர்ந்தவர்கள் (சுயமாக அடையாளம் காணப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு வெளியே வாழும்
ஸ்ரீலங்காவாசிகள் எனும் குறியீடு உள்ளவர்கள்) ஆகிய அனைவரும் வௌ;வேறு
சூழலில் பிறந்தவர்கள்.
ஸ்ரீலங்கா வரலாற்றில் பல்வேறு வன்முறை அத்தியாயங்கள் அரங்கேறியதன் விளைவாக
உருவாகியதே தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் அமைப்பு. கறுப்பு ஜூலையில் நடந்த
வன்முறைகள் உச்ச நிலைக்குச் சென்றதின் விளைவாக பாலாவின் குடும்பம் ஐக்கிய
இராச்சியத்துக்கு அகதிகளாகச் சென்றது. முறையான இனவாதம், மற்றும் ஆங்கிலம்
பேசுவதில் உள்ள சிக்கல்; போன்ற காரணங்களால் வேலை தேட முடியாமல் லண்டனில்
பாலாவின் குடும்ப மிகப் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டது. தொழில் முறை
நிபுணத்துவம் பெற்றிருந்த பாலாவின் அப்பா தனது குடும்பத்தை போற்றுவதற்கும்
மற்றும் பாலாவை பாடசாலைக்கு அனுப்புவதற்கும் வேண்டி, இரண்டு வேலைகளைச்
செய்துவந்த அதேவேளை வேலை செய்யும் இடத்தில் தவறான வாய்ப் பேச்சுக்களை
கேட்கவேண்டிய நிலைக்கும் ஆளானார். இத்தகைய அனுபவங்கள் இருந்தபோதும்
பாலாவின் தந்தை ஸ்ரீலங்காவில் உள்ள தனது குடும்ப உறவுகளுக்கு இன்னமும்
ஆதரவு வழங்கி வருகிறார். தனது முன்னோர்களின் சமூகத்துடன் தொடர்புகளை
வைத்திருப்பதற்காக பாலா தன்னால் இயன்றவரை பாடுபட்டு வருகிறார். தமிழ் நெற்
என்பது ஒரு செய்தித் தளம் மட்டுமன்றி ஆனால் அவர்களது வரலாற்றை
நினைவுபடுத்தும் ஒரு ஆயுதமாக மட்டுமன்றி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிடையே
உள்ள உறவுமுறைளை அங்கீகரிக்கும் ஒரு ஆயுதமாகவும் உள்ளது என்பதை பாலாதான்
எனக்கு காட்டித் தந்தார். இந்த அனுபவங்கள் பாலாவின் வரலாற்றுடன்
பொறிக்கப்பட்டுள்ளது, அத்தகைய அனுபவங்களை வெறுமனே மறந்துவிட முடியாது
ஏனெனில் அது கேட்கப்படுகிறது.
தமிழ்
புலம் பெயர்ந்தவர்களின் அனுபவங்களை ஏற்றுக்கொள்வது எங்கள் சொந்த
புலம்பெயர் அனுபவங்களை குறைத்து விடாது. தமிழ் புலம் பெயர்ந்தவர்களின்
நிதியுதவியினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் காரணமாக
ஸ்ரீலங்காவை விட்டு கட்டாயமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட எங்கள் மாமா
ஹசிந்து, அதன்பின் எப்படி தமிழ் சமூகத்துக்கு எதிரான வைரியாக மாறினார்
என்று நான் பாலாவிடம் சொல்லியுள்ளேன். பொது பேரூந்துகளில் மேற்கொள்ளப்பட்ட
தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதலில் இருந்து சிரமத்துடன் தப்பித்த
சமிந்தவின் அனுபவமும் பாலாவுக்குத் தெரியும். ஜேவிபி கிளர்ச்சி மற்றும்
அதன்காரணமாக பின்னர் வந்த அரசாங்கங்கள் அமுலாக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள்
என்பனவற்றை அனுபவித்துக் கற்றுக் கொண்ட தனது சொந்த அனுபவங்கள் தந்த அச்சம்
காரணமாக மானெல் மாமி வெளியிடங்களில் வைத்து அரசியல் பேசக்கூடாது என்று
எங்களுக்கு வழங்கிய எச்சரிக்கை பற்றி ஒருவேளை நீங்களும் அறிந்திருக்கலாம்.
பெரும்பாலான ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்களாகிய நாங்கள் நிலமையை
பாழக்கினால் எங்களுக்கு அல்லது எங்கள் பிரியப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும்
என்பதை நன்கு அறிந்துள்ளோம். இந்த அனுபவங்கள் எங்கள் குடும்ப வரலாற்றுடன்
பொறிக்கப்பட்டுள்ளது, அத்தகைய அனுபவங்களை வெறுமனே மறந்துவிட முடியாது
ஏனெனில் அது கேட்கப்படுகிறது.
- 3.மியா : 2015 ல் ஸ்ரீலங்கா
இதன்
விளைவாக ஸ்ரீலங்கன் மற்றும் தமிழ்; புலம் பெயர்ந்தவர்கள் வித்தியாசமான
அரசியல் மயமாக்கப்பட்டார்கள். தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் குறிப்பிட்ட
செயற்திட்டத்துக்காக வாதாடும் அரசியல் குழுவாக தங்களை முறைப்படி
ஏற்படுத்திக் கொண்ட அதேவேளை எங்கள் சமூகம் அரசாங்கத்துடன் நெருக்கம்
இல்லாமல் பெருமளவு அரசியல் சார்பற்ற குழுவாக இருப்பதையே தெரிவு செய்தது.
தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு
முடிவையும் அரசியல் சார்பானதாகவே; காட்டினார்கள். ஸ்ரீலங்கன் புலம்
பெயர்ந்தவர்கள் அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் நடைமுறைக்கு ஏற்றதாகவும்
நடுநிலையானதாகவும் இருப்பதாக நினைத்தார்கள்.
மியாவின்
(மாயா அருட்பிரகாசம்) சனல் - 4 நேர்காணல் அரசியல் மயமாக்கலில் உள்ள இந்த
வேறுபாட்டை நிருபிக்கிறது. மியாவின் ஆரம்ப வலியுறுத்தல் “அடிப்படையில்
ஸ்ரீலங்காவில் அதே அரசாங்கம் வித்தியாசமான முகத்துடன் இருக்கிறது”
என்பதாகும், அது தெளிவாக உண்மையில்லை, ஜனாதிபதி வித்தியாசமானவர்,
அதேபோலத்தான் பிரதமர் மற்றும் அமைச்சரவையும் - இவ்வளவுக்கும் மியா சொல்வது
ஜனாதிபதி சிறிசேன அறியப்படாதவர் என்று. வட மாகாண ஆளுனராக இருந்த இராணுவத்தை
சேர்ந்தவர் மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு ஒரு சிவிலியன் நியமிக்கப்
பட்டுள்ளார். தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீள்
குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு உட்பட முக்கியமான பதவிகளுக்கு
நியமிக்கப் பட்டுள்ளார்கள்.
இவை அனைத்தும் முன்னேற்றத்துக்கான அறிகுறிகள்.
ஆனால்
பல அம்சங்களில் மியா சொல்வது தவறு, அதேவேளை குறைந்தது மியா முக்கியமான
விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்: ஸ்ரீலங்காவிலுள்ள அனைத்து மக்களின்
நலன்களுக்கு வேண்டியே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள் மற்றும் அவர்கள்
விரும்புவது சமாதானம், கண்ணியம், மற்றும் வீடு,கல்வி, வேலை போன்ற சாதாரண
விடயங்கள் மற்றும் அரசாங்கத்தில் பங்களிப்பு போன்றவற்றை. இங்கு குறிப்பிடத்
தக்கது என்னவென்றால் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்று
மியா சொல்லவில்லை.( மேலும் குறிப்பிட வேண்டியது மியாவுக்கான ஸ்ரீலங்கா
விஜயம் திறந்தே உள்ளது! யாராவது ஒரு பயணச்சீட்டை அவருக்கு பெற்றுக்
கொடுக்கவும். இப்போது வெளிநாட்டவர்களுக்கான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு
விட்டது)
மீண்டும் முன்னேற்றத்துக்கான அறிகுறிகள்.
- 4.ஸ்ரீலங்கன் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் : கண்ணாடி விம்பங்கள்?
நிச்சயமாக,
மியா ஸ்ரீலங்கா அரசியல் விடயங்களை தனது சொந்த அனுபவக் கண்களால்
பார்க்கிறார். ஆனால் நீங்கள் அப்படியல்ல. சிந்தித்துப் பாருங்கள்:
-“கனடிய
அரசியல்வாதிகள் எப்போதும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் வாக்குகளின் மீது
செல்வாக்கு செலுத்துகிறார்கள்”. அப்படியானால் ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள்
அதே வழியில் தங்கள் தொகுதியிலுள்ளவர்களின் வாக்குகள் மீது செல்வாக்கு
செலுத்துகிறார்;கள் என்று நான் சுட்டிக் காட்டினால் நீங்கள் ஏன் என்னுடன்
வாதாடுகிறீர்கள்? ஒரு சிறுபான்மையினர் என்கிற வகையில் உங்கள் குரலுக்கு
மதிப்பளிக்க வேண்டும் என்று நீங்கள் கோரினால் ஸ்ரீலங்காவிலுள்ள சிறுபான்மை
மக்களின் குரல் மதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோர மாட்டார்களா?
-“புலம்பெயர்
தமிழர்கள் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யக் கூடாது” என்றால், தமிழ் புலம்
பெயர்ந்தவர்கள், தங்களை ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கு வெளிக்காட்டாமல் போனால்,
-ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் தங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டாம் என்று கருதுவதை இவர்களால் எப்படி அறிந்து கொள்ள முடியும்?
-“தமிழர்கள்
தங்களை ஸ்ரீலங்காவாசிகள் என்று வெளிப்படுத்த வேண்டும்” தமிழ் புலம்
பெயர்ந்தவர்களை நீங்கள் ஸ்ரீலங்காவாசிகளாக உபசரித்து அவர்களுக்கு மதிப்புக்
கொடுத்தால் அநேகமாக அவர்கள் தங்களை ஸ்ரீலங்காவாசிகள் என்று அடையாளம் காட்ட
அதிகம் விருப்பம் கொள்வார்கள்.
-“தமிழர்கள்
குறுகிய மனப்போக்கு கொண்டவர்கள் மற்றும் சிங்களவரைஃ ஸ்ரீலங்காவாசியை
தங்களை வழி நடத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்”. அது உண்மையில் சரியா
என்று எனக்குத் தெரியாது – ஆகக்கூடி ஸ்ரீலங்காத் தமிழர்கள் எல்லோரும்
ஜனாதிபதி சிறிசேனவுக்கு வாக்களித்ததின் பின்னர் – ஆனால் நேர்மையாகச்
சொன்னால் நீங்கள் உங்கள் வாக்கை ஒரு தமிழ் அரசியல்வாதிக்கு செலுத்த
விரும்புவீர்களா?
புலிகள்
மாற்றுக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஒழித்தபோது மற்றும்
தேர்தல்கள் நடக்கவிடாமற் செய்தபோதும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் அமைதியாக
இருந்தார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆமாம் தமிழ் ஆர்வலர்கள் இந்த
அமைதி காத்த முகத்தை வைத்துக்கொண்டு சுயநிர்ணய உரிமையை பற்றி போதனை செய்வது
வெறும் பாசாங்குத்தனம் . மற்றும் ஆமாம் 2009 பெப்ரவரியில் முக்கியமான
தமிழ் ஆர்வலர்கள் புலிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போடவேண்டும் என
விடுக்கப்பட்ட அழைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள் மற்றும் பொதுமக்களை
புலிகள் கட்டாயப்படுத்தி மோதல் வலயத்தில் வைத்திருந்தார்கள் என்கிற
ஆதாரத்தையும் அவர்கள் சந்தேகித்தார்களாம். புலிகள் பெப்ரவரி 2009ல் தங்கள்
ஆயுதங்களை கீழே வைத்திருப்பார்களானால் அதனால் பல உயிர்கள் காப்பாற்றப்
பட்டிருக்கும். ஆம் சர்வதேச சமூகத்தின் கவனத்தில் ஒரு குறுகிய இடைவெளி
இருந்தது.
ஆனால்
மியா சொல்வது சரி: 2009 மே மாதத்துக்கு ஐந்து வருடங்களின் பின்னர்
எல்.ரீ.ரீ.ஈ மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் பற்றிய அச்சம்
ஸ்ரீலங்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கொள்கையாக கருத முடியாது. அதேவேளை
ஸ்ரீலங்காவாசிகள் எல்லோரும் எப்போதும் தீவிரவாதத்துக்கு எதிராக விழிப்புடன்
இருக்க வேண்டும், ஆனால் அத்தகைய விழிப்புணர்வுகள் சிறுபான்மை குழுக்கள்
அல்லது பொது சிவில் சுதந்திர உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றின்
இழப்பில் உருவாக முடியாது. இதைத்தான் தம்ம பதமும் சொல்கிறது:
பகையினை
பகையினால் களைந்து விட முடியாது, எதுவாக இருந்தாலும் பகையினை பகையற்ற
வழியின் மூலமே களைய முடியும்: இது முடிவில்லாத ஒரு உண்மை.
- 5.மீள் கட்டமைக்கும் பொறுப்பு : புலம் பெயர்ந்தவர்களின் பங்கு
ஸ்ரீலங்காவில்
மீந்திருக்கும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் தேவை புலம்
பெயர்ந்தவர்களில் பிரதிபலிக்கிறது. மீள்கட்டமைப்பு பொறுப்புக்கான
கொள்கைகளைப் புனரமைக்கும் பொறுப்பு இது தொடர்பில் ஒரு பிரதான பங்கினை
வகிக்கிறது. இந்த மீள்கட்டமைப்பு பொறுப்புக்கான கோட்பாடு முதன்முதலில்
நிறுவப்பட்ட 2001ல் பிரேரிக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை பாதுகாக்கும்
பொறுப்பாக, மீட்பு, புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில்
தலையிடும் காரணத்துக்கு ஏற்ற அல்லது தவிர்க்கத் தக்க விதத்தில்
வடிவமைக்கப்பட்டு அதற்கான முழு உதவிகளையும் வழங்கவேண்டியது சர்வதேச
சமூகத்தின் கடமை எனச் சொல்கிறது. மீள்கட்டமைப்பு பொறுப்புக்கான கொள்கை
ஐநாவின் உத்தியோகபூhவமான கொள்கையாக இல்லாத போதும் சர்வதேச சமூகம்
மற்றவர்கள் குறிப்பிடுவதுபோல மோதல்கள் அங்கு திரும்பவும் உருவாகாததை உறுதி
செய்யும் விதத்தில் தொடர்ந்தும் அதில் ஆர்வம் காட்டி வருகிறது.
போரினால்
பாதிப்படைந்தவர்களுக்கும் மற்றும் வறியவர்களுக்கும் வேண்டிய தேவைகளை
நிறைவேற்ற ஜனாதிபதி சிறிசேன கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது,
இதற்காக ஸ்ரீலங்காவாசிகளும் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்களும் சில
உதவிகளை வழங்கலாம். எனது அனுபவத்தில் ஸ்ரீலங்காவாசிகள் மற்றும் தமிழ் புலம்
பெயர்ந்தவர்களில் உள்ள பலர் இதில் பங்குபற்றுவதில் அவர்களுக்கு
எதிர்பார்ப்பு எதுவும் இணைக்கப் பட்டிருக்காவிட்டால், ஸ்ரீலங்காவில்
சமூகங்களை புனரமைக்கும் பணியில் உதவும் பங்கிற்காக வரவேற்கப்படுகிறார்கள்.
இப்படித்தான் நானும் பாலாவும் நண்பர்களானோம். பாலா தன்னை ஒரு ஸ்ரீலங்கனாக
அடையாளப் படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை மற்றும் அரசியல்
பிரச்சினைகளை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாலாவும்
எதிர்பார்க்கவில்லை பாலாவுக்கும் எனக்கும் நாங்கள் வந்த இடத்தைப் பற்றி ஒரு
வலிமையான புரிந்துணர்வு இருந்தது மட்டுமன்றி பரஸ்பர அக்கறையுள்ள விடயங்கள்
தொடர்பாக பணி செய்யும்போது எங்கள் நட்புக்கு மகத்தான மதிப்பு கிடைப்பதை
நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் ஆழமாக நேசிக்கும் மக்களுக்கு உதவும்போது
எங்கள் நட்பு சிறப்பாகச் செயல்படுகிறது.
ஸ்ரீலங்கன்
மற்றும் தமிழ் சமூகங்களிடையே ஊக்கமளிக்கும் தொடர்புகள் ஏற்படுவதற்கு
சர்வதேச அமைப்புகளும்கூட ஒரு பங்கினை வகிக்கலாம் அத்தகைய பங்களிப்புகளில்
சேர்க்கப்பட வேண்டியது:
-புலம்
பெயர்ந்தவர்களுக்கிடையில் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை முன்னேற்றுவதற்கு,
முறையான மற்றும் முறைசார இடையீடுகள் மூலமான வசதிகள் மற்றும் நிதிகளைப்
பயன்படுத்துவது மற்றும் ஸ்ரீலங்கா தீவு அடங்கலாக உள்ள சமூகங்களின்
தேவைகளைத் தீர்ப்பதற்கு ஒருமித்து வேலை செய்வதுடன் தேவையான நிதியுதவியும்
வழங்குவது, குறிப்பாக பெருமளவு உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அல்லது
-ஸ்ரீலங்காவில்
நீதியும் மற்றும் சமாதானமும் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்படும்
அறிக்கைகள் மற்றும் நிலைகளுக்கு பொறுப்பான சமூகங்களுக்கு அதை வழங்கலாம்.
முடிவுரை
அக்கா,
இந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை அடிப்படையாககக் கொண்டு என்னை வகைப்
படுத்துவதற்கு நீங்கள் வழி தேடுவதை என்னால் உணர முடிகிறது. நான்
நினைக்கிறேன் மோதல்கள் நிபந்தனைக்கு உட்படுவது, எங்களில் ஒருவர் தாங்கள்
வெளியிடும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த மக்களை உளரீதியாக
வகைப்படுத்தப்படுவது, மற்றும் அவர்கள் உண்மையில் என்ன சொன்னார்கள்
என்பதற்கு பதிலளிப்பதற்கு மாறாக, நாங்கள் நினைப்பதை அப்படியே வெளியே
சொல்வது, போன்ற சந்தர்ப்பங்களிலேயே. நிச்சயமாக கடந்தகாலங்களில் இதனுடன்
நான் மிகவும் போராடியுள்ளேன்.
மற்றும்
நீங்கள் நினைப்பது சரி, நான் தமிழ் புலம் பெயர்ந்தவர்களுக்காக பேச
முடியாது, எனது தமிழ் நண்பர்களுடாக தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பாக
நான் பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில் நான் வெறுமனே எழுதுகிறேன். எனது
தமிழ் நண்பர்கள் தாங்கள் கண்ணியமும் திறமையும் உள்ள மனிதர்கள் என்பதை
அளவுக்கு அதிகமாகவே நிரூபித்துள்ளார்கள். அவர்கள் தமிழர்கள் என்பதனால்
மட்டும் வெறுமே அவர்களிடம் இந்தக் தரங்களை நீங்கள் காணமுடியாது. நாங்கள்
புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றியோ அல்லது மதிக்காதவர்களைப்பற்றியோ அவர்களது
உண்மையான அனுபவங்கள்(அநேகமாக உணர்ச்சிகரமான) மறைக்கப் பட்டுள்ளபோது,
அவர்களுக்கு எதிராக குற்றங் குறைகளை எழுதுவது மிகவும் சுலபம். அதேவேளை
ஸ்ரீலங்கா மக்களின் வாழக்கையையும் மற்றும் வாழ்வாதாரத்தையும்
அச்சுறுத்துவதற்கு புலிகள் அங்கு இல்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாக
உள்ளது. மே 2009ல் நடந்த உணர்வுபூர்வமான சம்பவங்கள் மற்றவர்களுக்கு
ஏற்படுத்திய அர்த்தத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அதை ஏற்றுக்
கொள்ள பாலா எனக்கு உதவினார். மற்றவர்களின் அனுபவங்களை மதிப்பிடுவதில்
ஒருவேளை ஸ்ரீலங்கன் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோர்
ஸ்ரீலங்காவாசி; என்கிற குழப்பத்துக்குள் அகப்படாமல சதந்திரமாகி ஒருமித்து
வேலை செய்வதற்கான வழிகளை கற்றுக் கொள்ள முடியும்.
நான்
இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தது இதிலுள்ள சில சம்பவங்கள் உங்களுடன்
பொருத்தப்படும் என்கிற நம்பிக்கையிலேயே. நிச்சயமாக அது உறுதியாகியுள்ளது.
நீங்கள் என்னை விமர்சிக்க விரும்பினால், பகன்ரே எங்களுக்கு கற்பித்த
முறையான பேச்சுக்களுக்கான ஐந்து முக்கிய அம்சங்களை ஞ}பகப்படுத்திக்
கொள்ளுங்கள். அதேவேளை உங்களுக்கும் மற்றும் எனது குடும்பத்தில் உள்ள
ஏனையோருக்கும் நான் எப்போதுமே உங்கள் “லூணி மல்லி” தான், நான் எப்போதுமே
உங்களை எனது குடும்பமாகவே கருதுகிறேன். குடும்பம் என்பதற்கான உங்கள்
வரைவிலக்கணம் மேலும் அநேகமானவர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று
நான் சாதரணமாக விரும்புகிறேன்.
முகப்
புத்தகத்தின் ‘கதே கதை’ அங்கத்தவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்.
அத்தகைய துடிப்பான விவாதங்கள் இல்லாதிருந்தால் என்னால் இத்தகைய கடிதங்களை
எழுதியிருக்கவே முடியாது.
பாலா
மற்றும் ஏனைய பெயருடைய நபர்கள் கற்பனையானவை ஆனால் அதில் விபரிக்கப்பட்ட
சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் உண்மை. புலம் பெயர்ந்தவர்களின் வேர்களை
அறிவதற்காக தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் அமைப்பினைச் சேர்ந்த சில
அங்கத்தவர்கள் மேற்கொண்ட உண்மையான கடும் முயற்சியினை வாசகர்கள்
அறியவேண்டும் என்பதை குறிப்பாக ஊக்குவிக்க விரும்புகிறேன்.
- ரொமேஸ் ஹெட்டியாராய்ச்சி
(கனடா
, ரொரான்ரோவில் உள்ள றொமேஸ் ஹெட்டியாராய்ச்சி ஒரு வழக்கறிஞர் மற்றும்
மத்தியஸ்தராக உள்ளார். மற்றும் எல்லைகளற்ற இலங்கையர்கள் என்ற அமைப்பின்
முன்னாள் தலைவரும் ஆவார்.)
Share |
Share |


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக