சனி, 24 ஜனவரி, 2015

அறுவைச் சிகிச்சை பிரிவில் தனது இரட்டை குழந்தைகளை தானே பிரசவிக்க செய்த தாய் (படங்கள் இணைப்பு)

தாயொ­ருவர் மருத்­து­வ­மனை அறுவைச் சிகிச்சை பிரிவில் தனது இரட்டை குழந்­தை­களை தனது கைகளைப் பயன்­ப­டுத்தி தானே பிர­ச­விக்க செய்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.



நியூ­சவுத் வேல்ஸில் நியூ­கா­ஸ­லி­லுள்ள ஜோன் ஹன்டர் மருத்­து­வ­ம­னையில் இடம்­பெற்ற இந்த விநோத பிர­சவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஏற்­க­னவே 9 பிள்­ளை­க­ளுக்கு தாயான ஜெரி வூல்ப் (41 வயது) என்ற பெண்ணே தனது 10 ஆவது, 11 ஆவது குழந்­தை­க­ளான மேற்­படி இரட்டை குழந்­தை­களை தனது கைகளைப் பயன்­ப­டுத்தி அடி வயிற்­றி­லி­ருந்து வெளி­யேயெ­டுத்து மருத்­து­வர்­களை வியப்பில் ஆழ்த்­தி­யுள்ளார்.

தாயின் உத­வி­யுடன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிர­சவம் தொடர்­பான இணை­யத்­தள பக்­கத்தை வாசித்து அதனை பின்­பற்றி குழந்­தை­களை அவர் பிர­ச­வித்­துள்ளார்.

அறுவைச்சிகிச்சை மூலம் குழந்­தையை பெறு­வது ஜெரி வூல்­பிற்கு இது ஐந்­தா­வது அனு­ப­வ­மாகும்.

இத்­த­கைய அறுவைச்சிகிச்சை பிரசவங்கள் மருத்துவர்களாலேயே மேற் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல