வியாழன், 25 ஜூன், 2015

மாய­மான 3 வயது கிளி­நொச்சி குழந்தை பணத்­திற்­காக விற்­பனை செய்­யப்­பட்­டதா?

- பொலிஸார் தீவிர விசா­ரணை; வெளி­நாட்­டுக்கு கடத்­தப்­ப­டு­வதை தவிர்க்க விமான நிலை­யங்­க­ளிலும் உசார் -

கிளி நொச்­சி, உருத்­தி­ர­புரம் - எள்­ளுக்­காடு பிர­தே­சத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உத­ய­குமார் யர்­சிகா பணத்­திற்­காக விற்­பனை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். குழந்­தையின் தாயார் கிளி­நொச்சி பொலி­ஸா­ருக்கு வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வழங்­கி­யுள்ள வாக்கு மூலங்­களின் பரஸ்­பர வேறு­பா­டு­க­ளையும் இன்னும் சில தட­யங்­க­ளையும் வைத்து இந்த சந்­தே­கத்தை எழுப்­பி­யுள்ள பொலிஸார், குழந்தை விற்­பனை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­படும் யாழ். பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒரு­வரை தேடி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இது தொடர்பில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஷேட பொலிஸ் குழு­வொன்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர நேற்று நான்­கா­வது நாளா­கவும் குழந்­தையைத் தேடிய வேட்டை தொடர்ந்­த­தாக குறிப்­பிட்டார்.



இந் நிலையில் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கிளி­நொச்சி பொலி­ஸாரும் பொது மக்­களும் இணைந்து இந்த தேடுதல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­துடன் மாய­மா­கி­யுள்­ள­கு­ழந்தை வெளி நாடொன்­றுக்கு கடத்­தப்­ப­டு­வதை தடுக்க அவ­ரது புகைப்­படம் உள்­ளிட்ட தக­வல்கள் கட்­டு­நா­யக்க, மத்­தள விமான நிலைய அதி­கா­ரி­க­ளுக்கு பொலி­ஸாரால் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது.

எவ்­வா­றா­யினும் காணாமல் போயுள்ள சிறு­மியின் தாயார் உள்­ளிட்ட உற­வி­னர்கள் பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்ள முன்­னுக்கு பின் முர­ணான வாக்கு மூலங்­களால் விசா­ர­ணை­களை எந்த கோணத்தில் முன்­னெ­டுப்­பது என்­பதில் தெளி­வற்ற நிலைமை நில­வு­வ­தா­கவும் எனினும் பல்­வேறு கோணங்­களில் பல பொலிஸ் குழுக்­களைக் கொண்டு குழந்­தையை தேடும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார். குறித்த குழந்­தையின் தாயார் குழந்­தையை தனது கள்ளக் காத­ல­னிடம் ஒப்­ப­டைத்­த­தாக பொலி­ஸா­ருக்கு இறு­தி­யாக வாக்கு மூலம் அளித்­துள்ள நிலையில், யாழ்ப்பா­ணத்தில் உள்ள குறித்த நபரைத் தேடியே தாயா­ரையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் குழு யாழ். சென்­றுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார். எனினும் நேற்று இரவு 9.30 மணி வரை குழந்தை தொடர்பில் எவ்­வித தக­வல்­களும் கிடைக்­க­வில்லை என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

குறித்த சிறு­மியின் தாயுடன் அவர் இருந்த போது அவரின் உறவு முறை அண்ணன்மார் எனக் கூறப்­படும் இரு இளை­ஞர்கள் அந்த இடத்­துக்கு வந்­துள்­ள­துடன் சிறு­மியை மோட்டார் சைக்­கிளில் ஏற்­றிக்­கொண்டு வீட்­டி­லி­ருந்து 2 கிலோ­மீற்­றர்கள் தூரத்தில் உள்ள சக்­தி­புரம் குளத்­துக்கு அழைத்துச் சென்­றுள்­ளனர். தாய் குளிப்­ப­தற்­காக குளத்­துக்கு செல்ல தயா­ராக இருந்­ததைத் தொடர்ந்தே அவர்கள் இவ்­வாறு அழைத்துச் சென்­றுள்­ளனர்.

குளத்­துக்கு சென்ற இவர்கள் குழந்­தையை குளக்­கட்டில் வைத்­து­விட்டு நீரா­டி­யுள்­ளனர். இதன் போது அவ்­வி­டத்­துக்கு வந்த குழந்­தையின் தாய் குழந்தை எங்கே என வின­விய போது அவள் குளக்­கட்டில் இருப்­ப­தாக அவர்கள் பதி­ல­ளித்த போதும் குழந்தை அங்­கி­ருக்­க­வில்லை என பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் இது குறித்து காணா­மற்­போன குழந்­தையின் பெற்றோர், ஒன்­று­விட்ட சகோ­தரன், பாதி­ரியார் ஒருவர் உள்­ளிட்ட 07 பேரிடம் கிளி­நொச்சி பொலிஸார் விசா­ரணை நடத்தி வாக்கு மூலம் பதிவு செய்­தனர்.

இத­னி­டையே கிடைக்கப் பெற்ற வாக்கு மூலம் ஒன்றில் குழந்­தையை வேறு ஒரு பிர­தே­சத்தில் தாம் நபர் ஒரு­வ­ருடன் கண்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் நேற்று குழந்­தையின் தாயிடம் மீண்டும் பொலி ஸார் விசா­ரணை நடத்­தினர். அதன் போது குழந்­தையை தான் மாமா­வுடன் யாழ்ப்­பாணம் அனுப்­பி­ய­தாக பொலி­ஸா­ரிடம் குறிப்­பிட்­டுள்ளார். எனினும் மாமா என கூறப்­படும் குறித்த நபர் தாயின் கள்ளக் காதலன் என குறிப்­பிடும் பொலிஸார் அவருக்கு குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக் கலாம் என சந்தே கிக்கின்றனர். இதனையடுத்தே குழந்தையைத் தேடி யாழ்ப் பாணத்திற்கு குழந்தையின் தாயையும் உடன் அழைத்துக் கொண்டு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது. ஆனாலும், குழந்தை இதுவரைகிடைக்கவில்லை என தெரிவிக்கும் பொலிஸார், குழந்தை பணத்திற்காக விற்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

(எம்.எப்.எம்.பஸீர்)
 வீரகேசரி

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல