Stunning: It is difficult to believe that these incredible dresses were made from such an everyday item as toilet paper
அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவநாகரிக கண்காட்சி ஏற்பாட்டு நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட நவநாகரிக கண்காட்சியில் யுவதிகள் மலசலகூடத்தில் பயன்படுத்தப்படும் கடதாசிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட கண்ணைக் கவரும் அலங்கார மணப்பெண் ஆடை களை அணிந்து வலம் வந்து பார்வையாளர்களை வியப் பில் ஆழ்த்தியுள்ளனர்.A model walks the runway wearing 'Garden Party' a design by Carol Touchstone during the 11th annual toilet paper wedding dress contest
11 ஆவது வருடாந்த மலி வான மலசலகூட கடதாசியாலான மணப்பெண் ஆடைகளுக்கான போட்டி நிகழ்ச்சியிலேயே யுவதிகளின் இந்த அலங்கார அணிவகுப்பு இடம்பெற்றது.
மலசலகூட கடதாசிச் சுருள்கள், ஒட்டுப் பசை, நாடாக்கள் மற்றும் நூல்கள் என்பவற்றைப் பயன்படுத்தி இந்த மணப்பெண் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டி நிகழ்ச்சியில் தென்னஸி மாநிலத்தில் பிரென்ட்வூட் எனும் இடத்தைச் சேர்ந்த டோனா போப் வின்கிளேயர் என்ற நவநாகரிக ஆடை வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட மலசலகூட கடதாசியாலான மணப்பெண் ஆடை முதலிடத்தைப் பெற்று 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசை வென்றுள்ளது.
அவர் இந்த ஆடை உருவாக் கத்திற்காக 22 மலசலகூட கடதா சிச் சுருள்களைப் பயன்படுத்தி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக