In March this year, specialists told Omar and his family he had just three months to find a stem cell donor
இதயத்தை கலங்க வைக்கும் சோகக்கதை ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது. தனது மரணப் படுக்கையில் படுத்தபடியே தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்.
But, because of Omar's background - he came from a mixed Arabic and Romanian heritage - finding a suitable match proved extremely difficult. Tragically, he ran out of time
16 வயதான ஒமர் அல் ஷேக்குக்கு புற்றுநோய் முற்றிய நிலை. அவருக்கு சிகிச்சை அளிக்க ஸ்டெம் செல் தானம் செய்வோர் கிடைக்காத நிலை. இதனால் இன்னும் சில நாட்களே வாழ முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். வாழ்வின் கடைசிப் பக்கத்திற்கு வந்து விட்ட ஒமர் தனது மனம் கவர்ந்த, தன் வயதேயான அமியிடம் தனது காதலையும், திருமணம் செய்யும் விருப்பத்தையும் சொன்னார். அமியும் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 3 நாட்களில் ஒமர் மரணத்தைத் தழுவினார். முன்னதாக ஒமரின் நாட்கள் எண்ணப்படுவதாக பிரிமிங்காம் க்வீன் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் அவரது குடும்பத்தாரிடம் கூறவே, தனது கடைசி ஆசையைச் கூறியுள்ளார் ஒமர். அமியும் உடனடியாக திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார். அதுவும் புன்னகையுடன்.
16 வயது இளைஞனாக மருத்துவமனைக்கு வந்த ஒமர் திருமணமான நபராக உயிர் பிரிந்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இந்தத் திருமணம் நடந்தது. இருவரும் மணக்கோலத்தில் வர குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்கள் புடை சூழ திருமணம் சந்தோஷமாக நடந்தேறியது.
இந்தத் திருமணம் குறித்து அமி கூறுகையில், ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் ஒமருக்கு புற்றுநோய் பாதிப்பு வந்து விட்டது. வளர்ந்து பெரியவர்களானதும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக 16 வயதில் அது நடந்து விட்டது. இருப்பினும் இதற்காக நான் மிகவம் மகிழ்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
லூகேமியா புற்று நோயால் மரணமடைந்தார் ஒமர். சிறு வயதினருக்கு அது பெரும்பாலும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Omar, pictured in hospital during treatment with his mother Mira,
Omar had been diagnosed with leukaemia after he collapsed and fainted during a football match
Omar's funeral took place on Tuesday, a day after he passed away at the Queen Elizabeth Hospital
Omar Al Skaikh, 16, embraces his new wife, Amie after they married at Birmingham's Queen Elizabeth Hospital last Friday. Three days later, on Monday, Omar lost his battle with cancer
Omar's last wish was to marry Amie, his high school sweetheart. Hours after doctors dealt the teenager the devastating blow that he had just days to live, he proposed to Amie, having made a ring out of flowers
Dressed in his hospital dressing gown, Omar married Amie, who was dressed in a pink gown, a crown of flowers in her hair
The couple married in an emotional Islamic ceremony at the hospital, surrounded by friends, family and staff. They are pictured with Omar's mother Mira, back right and Amie's mother, Becky Cook, back left











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக