Twins: Shuanglong (far left) recognised his younger brother, who was abducted 20 years ago, straight away
இரண்டு வயதுக் குழந்தையாக காணாமல் போன ஒருவர் 20 வருடங்கள் கழித்து தனது பெற்றோருடனும் சகோதரனுடனும் மீள இணைந்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
Moving: Father Wan Xiaodong (in green shirt) hugs long-lost son Shuangjian, with twin Shuanglong standing by
கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.1995 ஆம் ஆண்டு தென் சீனாவில் ஷென்ஸென் நகரிலுள்ள தனது வீட்டிற்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த வேளை ஷுவாங்ஜியான் என்ற மேற்படி இளைஞர் கடத்தப்பட்டு குடும்பமொன்றுக்கு 1,325 ஸ்ரேலிங் பவுணுக்கு விற்கப்பட்டிருந்தார்.
அவரை தத்தெடுத்த குடும்பத்தினர் அவருக்கு லுவோ ஸியோடிங் என்ற புதிய பெயரைச் சூட்டியிருந்தனர்.
இந்நிலையில் அவரது இரட்டைச் சகோதரரான ஷுவாங்லோங், தனது காணாமல்போன சகோ தரரை கண்டு பிடிக்கும் முகமாக 2008 ஆம் ஆண்டில் தனது புகைப்படமொன்றை ஆட்கத்தல் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் கையளித்தார்.
அந்தப் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் கடந்த மாதம் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஷுவாங்ஜியானை (தற்போது 22 வயது) கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மரப ணுப் பரிசோதனையில் ஷுவாங்லோங்கின் காணாமல்போன சகோதரர் அவர் என்பது உறுதியானது.
அவர் கடத்தப்பட்டதுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களில் ஒருவரான சென் பிகனை பொலி ஸார் கைதுசெய்துள்ளனர்.
ஷுவாங்ஜியான் கடத்தப்பட்ட போது காணா மல்போன அவரது சகோதரி இதுவரை கண்டு பிடிக்கப்படாத நிலையிலேயே உள்ளார்.
Reunion: They were reunited after Shuanglong handed a picture of himself to police, who tracked down Luo
Tearful: Both parents wept after seeing their youngest son for the first time in two decades
Desperate search: Mr Wan described how he had looked for his son and daughter after they were taken
Arrested: One of the suspected traffickers, Chen Biqun, was arrested by police at the end of May









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக