ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

உயிர் கொடுத்த தாயின் உயிரைக் காக்கும் மகன் (படங்கள் இணைப்பு)

சீனாவில் கைகளை இழந்த நபர் ஒருவர் தனது தாயை பொறுப்­புடன் கவ­னித்து வரு­வது நெகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சீனாவின் சாங்க்காங் நக­ரத்­திற்கு அருகில் உள்ள டோங்க்சின் கிரா­மத்தை சேர்ந்­தவர் சென் க்சிங்யின்(48).


வீட்டில் ஆறா­வது பிள்­ளை­யாக பிறந்த இவர் தனது ஏழு வயதில் மின்­சாரம் தாக்­கி­யதில் இரண்டு கைக­ளையும் இழந்துள்ளார்.

இரு கைகளை இழந்­த­போதும் தனது அன்­றா­டப்­ப­ணி­களை அவரே கவ­னித்து வரு­கிறார், மேலும் தங்­க­ளது குடும்­பத்­தொ­ழி­லான விவ­சாயம் மற்றும் ஆடு மாடு­களை மேய்க்கும் பணி­க­ளையும் மேற்­கொண்டு வரு­கிறார்.

இதில் நெகிழ்ச்­சி­யூட்டும் விட­ய­மாக, மூச்­சுக்­குழாய் அழற்­சியால் பாதிக்­கப்­பட்டு படுத்த படுக்­கையாய் இருக்கும் தனது 88 வயது தாயையும் கவ­னித்து வரு­கிறார்.

அன்­றாடம் உண­வு­களை தயா­ரித்து, அதனை தனது வாயில் பற்­றி­யி­ருக்கும் கரண்டியால் தாயா­ருக்கு உணவை ஊட்டி வரு­கிறார்.
இவர் இவ்­வாறு தனது தாயை பராமரித்து வருவதை சீன ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.








Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல