புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஏற் பாடு செய்து வருகின்றது. இந்தத் தகவலை "நியூயோர்க் இன்டர்நெஷனல்”என்ற நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் செப்டெம்பர் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பிதழ் அனு ப்பி வைக்கப்படலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 14இல் ஆரம்பமாகவிருக்கின்றது. ஐ.நா. கூட்டத்திற்கு பெரும்பாலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவுள்ளன.
எனவே ஜெனீவா ஐ.நா. பணிமனையில் இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை அரசு, தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆகியோருடன் அமெரி க்கா ஆலோசனை நடத்தியதன் பின் அது ஒரு தீர்மானத்தை எடுக்க இருக்கின்றது.
முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசின் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே இந்தச் சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பான ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.
அந்த அறிக்கையின் விபரங்களோ, பரிந்துரைகளோ இதுவரை வெளியிடப்படவில்லை. வெளியிடப்படும் அந்த அறிக்கையின் விபரங்களை கொண்டு அமெரிக்கா புதிய தீர்மானம் ஒன்றைக்கொண்டு வரவுள்ளது.
இது குறித்து இவ்வாரம் இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் தென்கிழக்கு, மத்திய ஆசிய நாடுகளின் இராஜாங்க துணை அமைச்சர் நிஸா ரேசாய் பிஸ்வால் சில விபரங்களை வெளியிட்டிருந்தார். அது குறித்து இலங்கையின் நாளிதழ்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன.
வலுவான உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் அங்கு வெளியிட் டுள்ளார். விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அவ்வாறான உள்ளக விசாரணைப் பொறிமுறை எவ்வாறு சாத்தியப்படும் என்ற விபரங்களை அமெரிக்கா இன்னமும் வெளியிடவில்லை. உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
அதனடிப்படையிலேயே கடந்த மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை செப்டெம்பர் மாதம் வரை பின் போடப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அதன் பின் உள்ளக விசாரணை குறித்து இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்கு இலங்கை அரசு ஒருபோதும் ஆதரவளிக்காது என்றே அதன் அமைச்சர்கள் அடிக்கடி குறிப்பிட்டு வந்தனர். சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலின்போது ஆவேசமாக கூறி வந்தார்.
அது மாத்திரமல்ல இது தொடர்பாக இராணுவத்தினரையோ அல்லது அதிகாரிகளையோ தாம் காட்டிக்கொடுக்கப்போவதில்லை என்றும் அவர் சூளுரைத்துள்ளார். எனவே அமெரிக்கா கூறும் வலுவான உள்ளக பொறிமுறை இங்கு ஏற்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகின்றது. மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய, இராணுவ மேஜர், ஜெனரல்கள் போன்ற உயர் பதவி வகித்தவர்களுக்கு எதிராகவும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் களை அழைத்து விசாரணை செய்ய ரணில் அரசு முன்வருமா?
இவ்வாறு அழைக்க முற்பட்டால் உடனடியாக நாட்டில் சிங்கள மக்கள் தூண்டி விடப்பட்டு கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி விடும். அதன் பலன் விசாரணைகள் முற்று முழுதாக முடங்கிப் போய்விடும் நிலையே ஏற்படும் என புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் தமிழருக்கு நியாயம் கிடைக்கும் இந்த விசாரணையை நடத்த ரணில் அரசு ஒரு போதும் முயற்சிக்காது என்பது விமர்சகர்களின் ஆணித்தரமான கருத்து. எனவே ஆறு ஆண்டுகள் அல்ல மேலும் பல ஆண்டுகள் சென்றாலும் உள்ளக விசா
ரணைப் பொறிமுறையில் எவ்வித தீர்ப் பும் வழங்கப்படமாட்டாது என்பதே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கணிப் பாகும்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் தமது நம்பிக்கையீனத்தை வெளியிட்டுள்ளார். உள்ளக விசாரணைகள் பலவற்றை நான் அவதானித்துள்ளேன். அவை முற்றுப்பெறாத விசாரணைகளாகவே இன்றும் காணப்படுகின்றன.
எனவே, உள்ளக விசாரணையில் எவ்வித பிரயோசனமும் இல்லை. இருப்பினும்அமெரிக்கா இது தொடர்பாக என்ன கருத்தை வெளியிடப்போகின்றது என்பதை அறிந்ததின் பின்பே எமது செயற்பாடு அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வடமாகாண சபைக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டால் இந்த நாட்டில் இருந்த ஆறு ஓடும் என உதய கம்பன்பில பகிரங்கமாக கூறியதற்கு இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், அரசு உள்ளக விசார ணையை நீதியாக நடத்தும் என்பதில் நம்பிக்கை கொள்வது எங்ஙனம்? இருப்பினும் இலங்கை அரசுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவிப்பதிலிருந்து உள்ளக விசாரணைக்கு அதன் ஆதரவு உண்டு என்பது புரிகின்றது.
அதற்கு எதிராக இந்திய அமெரிக்க தூதரகத்தின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் முடிவை அவர் பகிரங் கமாகக் கண்டித்துள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் இது குறித்து தற்போது ஆலோசித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளிலுள்ள அமெரிக்க தூதராலயங்களின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதும் அவர்களின் திட்டமாகலாம்.
உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற த்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ஐ.நா.வைக்கோரும் மனுவொன் றில் இதுவரை பதினைந்து இலட்சத்திற்கு அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அம்மனு ஐ.நா.விடம் செப்டெம்பர் முத லாம் திகதி கையளிக்கப்படலாம். இது ஒரு மிக வலுவான கோரிக்கை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த கோரிக்கையை உதாசீனம் செய்து அமெரிக்கா உள்ளக விசாரணைக்கு ஆதரவளிக்குமேயானால் புலம்பெயர் தமிழர் தீவிரமான ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
செப்டெம்பர் 21ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஜெனீவா ஐ.நா. முன்றலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறித்து நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால் அதில் முதல் கோரிக்கையாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைதேவை எனக் கேட்கப்பட்டுள்ளது. அமெரி க்கா உள்ளக விசாரணையில் தொடர்ந்தும் தீவிரம் காட்டுமேயானால் அமெரிக்காவுக்கு எதிரான தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் புலம்பெயர் அமைப்புக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த 20ஆம் திகதியே ஐ.நா. அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெனீவா ஐ.நா. பணியகம் அதனை அனுப்புவதில் தொடர்ந்தும் தாமதம் காட்டி வருகின்றது. அதற்கான உத்தியோகபூர்வமான காரணம் இதுவரை குறிப்பிடப்படவில்லை. ஆனால் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக 47 நாடுகளிடமும் நேரில் அந்தஅறிக்கை கையளிக்கப்படும் என ஜெனீவா ஐ.நா. பணிமனை அறிவித்துள்ளது.
அதாவது செப். 11ஆம் திகதி வெள்ளி யன்று பிற்பகல் அறிக்கை வெளியிடப்ப டும். ஆனால் அடுத்த இரண்டு நாட்களும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அரசு செயலகங்கள் இந்த அறிக்கை குறித்து ஆராயாமல் விடலாம்.
ஆனால் இலங்கை அரசு இவ்விடயத் தில் விடுமுறை தினமான போதும் கூடுதல் அக்கறை செலுத்தும் எனக்குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயத்தை முற்றிலும் கிட ப்பில் போட்டு விடவே இலங்கை அரசு விரும்புவதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனால்தான் உள்ளகப் பொறிமுறை விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என அமெரிக்கா முயற்சிப்பதாகவும் இணையத்தள செய்தி ஒன்று குறிப்பிடுகின்றது. அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளிக்கப்படுவதற்காகவே ஐ.நா. வின் அறிக்கை வெளியிடப்படுவது தாமதிக்கின்றது என் றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரத்தில் செனல் 04 தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கெலம் மக்ரே அடுத்த வாரம் ஸ்பெய்ன் மொழி பேசும் நாடுகளை நோக்கி பயண மாகின்றார். அந்நாடுகளிலுள்ள ஊடகவியலாளர்களை சந்தித்து இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை போர்க்குற்றங் கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளார்.
அது தொடர்பாக தம்மால் வெளியிடப்பட்ட காணொளிகளின் பிரதிகளையும் அவர் வழங்கவுள்ளார். ஸ்பெய்ன் மொழிபேசும் ஊடகவியலாளர்களின் ஒத்துழை ப்பைப் பெறுவதே அவரின் விஜயத்தின் நோக்கமாகும். அதன் மூலம் அந்நாடுக ளின் கொள்கை வகுப்பாளர்களின் ஆதரவை பெறமுடியும் என்றும் அவர் குறிப்பிடுகின் றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக