ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

ஏமாற்றிவிட்­டதா அமெ­ரிக்கா?

பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வு கள் வெளி­யா­கி­யதும், ஜெனீவா களம் குறித்த கலக்­கத்­துடன் காத்­தி­ருந்த இலங்கை அர­சாங்­கத்­துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்­தி­யோடு வந்­தி­றங்­கி­யி­ருந்தார் தெற்கு, மத்­திய ஆசி­யா­வுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.



இந்த ஆண்டில் – இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர், அவர் மேற்­கொண்ட மூன்­றா­வது பயணம் இது. கடந்த ஜன­வ­ரியில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி தேர்­தலில் பெற்ற வெற்­றியைத் தொடர்ந்து, பெப்­ர­வரி 2ஆம் திகதி கொழும்பு வந்­தி­ருந்தார் நிஷா பிஸ்வால்.

அந்தப் பய­ணத்தின் போது, அவர் கொழும்­புக்கு ஒரு புதிய சமிக்­ஞையைக் காட்டி விட்டுச் சென்­றி­ருந்தார்.

மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 29ஆவது அமர்வில், இலங்கை தொடர்­பான ஐ.நா. விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த சூழல் அது.

போர்க்­குற்­றச்­சாட்டுத் தொடர்­பான உள்­நாட்டு விசா­ரணை ஒன்றை நடத்த புதிய அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துக்கு வாக்­கு­று­தியை அளித்தால், இலங்­கையைக் காப்­பாற்றும் வகையில், ஐ.நா. விசா­ரணை அறிக்­கையை பிற்­போடச் செய்­வ­தற்கு அமெ­ரிக்கா நட­வ­டிக்கை எடுக்கும் என்று அப்­போது இலங்­கைக்கு தெளி­வாக கூறி­யி­ருந்தார் அவர். இதன் பின்னர் தான், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, ஜெனீவா, வொஷிங்டன், லண்டன், நியூயோர்க் என்று பறந்து, பறந்து வாக்­கு­று­தி­களைக் கொடுத்தார்.

அதன் பின்­னரே, புதிய அர­சாங்­கத்­துக்கு கால­ அ­வ­காசம் அளிக்கும் வகையில், ஐ.நா விசா­ரணை அறிக்கை பிற்­போ­டப்­பட்­டது.

அந்த முடிவு ஐ.நா. பொதுச்­செ­ய­ல­ராலோ ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராலோ எடுக்­கப்­ப­ட­வில்லை. அந்த முடி­வுக்கு முழுப்­பொ­றுப்பும் அமெ­ரிக்கா தான் காரணம்.

அதற்குப் பிள்­ளையார் சுழி போட்­டவர் தான் நிஷா பிஸ்வால். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், தனது இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் மூலம், சீனாவின் பக்­கத்தில் இருந்து இலங்­கையை அமெ­ரிக்­காவின் பக்­கத்­துக்கு கொண்டு போய்ச் சேர்த்­தி­ருந்தார் அவர்.

அதை­ய­டுத்து, கடந்த மே மாத துவக்­கத்தில், இரண்­டா­வது தட­வை­யாக மீண்டும் கொழும்பு வந்தார் அவர்.
அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் வர­லாற்று ரீதி­யான பய­ணத்தின் போது கூடவே அவரும் வந்­தி­ருந்தார்.

ஜோன் கெரி தனது பய­ணத்தை முடித்துக் கொண்டு கிளம்­பிய பின்­னரும், நிஷா பிஸ்வால் கொழும்பில் தங்­கி­யி­ருந்து வெசாக் வழி­பா­டுகள் கொண்­டாட்­டங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன் இணைந்து பங்­கெ­டுத்துவிட்டே அமெ­ரிக்கா சென்றார்.

அமெ­ரிக்கா தொடர்­பாக சிங்­கள பௌத்த மக்­க­ளிடம் காணப்­பட்ட வெறுப்பைக் களை­வ­தற்­காக அவர் மேற்­கொண்ட அடுத்த இரா­ஜ­தந்­திர நகர்வே இது. இப்­போது மூன்­றா­வது முறை­யாக வந்து சென்­றி­ருக்­கிறார்.

பாரா­ளு­மன்றத் தேர்தல் முடிந்து, சரி­யாக இரண்டு வாரங்கள் கழித்து அவர் கொழும்பு வந்தார்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 30ஆவது அமர்வில் இலங்கை தொடர்­பான ஐ.நா. விசா­ரணை அறிக்கை, குறித்து விவாதம் நடப்­ப­தற்கு சரி­யாக ஒரு மாதம் முன்­ன­தாக அவ­ரது இந்தப் பயணம் இடம்­பெற்­றது, அவ­ருடன் அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தில் ஜன­நா­யகம், மனித உரி­மைகள், தொழி­லாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச்­செ­யலர் ரொம் மாலி­னோவ்ஸ்­கியும் கொழும்பு வந்­தி­ருந்தார்.

இவரும் கடந்த நான்கு மாதங்­க­ளுக்கு முன்னர் இலங்­கைக்கு ஒரு பய­ணத்தை மேற்­கொண்­டவர் தான்.

ஏப்ரல் மாதம் கொழும்பு வந்த இவர், வடக்­கிற்கும் பயணம் செய்­த­துடன், முள்­ளி­வாய்க்­கா­லிலும், போரில் இறந்­த­வர்­க­ளுக்­காக மலர் அஞ்­சலி செலுத்தி, அதனை தமது டுவிட்­ட­ரிலும் வெளி­யிட்­டி­ருந்தார்.

இவர்கள் இரு­வரும், இம்­முறை இலங்கை வந்­ததன் நோக்­கமே, அமெ­ரிக்­காவின் அணு­கு­மு­றையில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காகத் தான்.

அதா­வது, புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள சூழலில், அத­னுடன் ஒத்­து­ழைப்­பையும் உற­வு­க­ளையும் வலுப்­ப­டுத்திக் கொள்ளும் வகை­யிலும், சர்­வ­தேச நெருக்­க­டிக்குள் இருந்து இலங்­கையைக் காப்­பாற்றும் வகை­யிலும் தான் இவர்­களின் பயணம் அமைந்­தி­ருந்­தது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை என்ற பொறிக்குள் இலங்­கையைத் தள்ளிச் சென்ற அமெ­ரிக்கா தான், இப்­போது அந்தப் பொறியில் இருந்து காப்­பாற்­று­கின்ற ஆபத்­பாந்­த­வ­னா­கவும் வந்து நிற்­கி­றது.

2012, 2013ஆம் ஆண்­டு­களில் ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­களைக் கொண்டு வந்த அமெ­ரிக்கா, போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பொறுப்­புக்­கூற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று இலங்கை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யது.

அதற்கு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் போதிய ஆத­ரவும் கிடைத்­தது. ஆனால், இலங்கை அர­சாங்கம் அதனை ஏற்றுக்கொள்­ள­வில்லை.

இதன் பின்னர், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம், மீண்டும் ஒரு தீர்­மா­னத்தைக் கொண்டு வந்­தது அமெ­ரிக்கா.
அதில், உள்­நாட்டு விசா­ர­ணையை ஊக்­கு­விக்கும் அதே­வேளை, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ர­ணை­யையும் மேற்­கொள்ள வலி­யு­றுத்­தி­யது.

அந்த தீர்­மா­னத்­தையும் இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தது.
அதன் விளை­வா­கவே ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இப்­போது, இந்த விசா­ரணை அறிக்கை வெளி­வரத் தயா­ரா­கி­யுள்ள நிலையில் தான், அமெ­ரிக்கா இப்­போது, இலங்­கைக்கு ஆத­ர­வாகத் திசை திரும்­பி­யி­ருக்­கி­றது.
இலங்­கைக்கு ஆத­ர­வ­ளிக்கும் தீர்­மானம் ஒன்றை -– உள்­நாட்டு விசா­ர­ணை­க­ளுக்கு கால­அ­வ­காசம் அளிக்கக் கோரும் தீர்­மானம் ஒன்றை ஜெனீ­வாவில் கொண்டு வரப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார் நிஷா பிஸ்வால்.

ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் பின்னர், போர்க்­குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ரிக்க, ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் சர்­வ­தேச விசா­ரணை ஒன்­றுக்கு ஆத­ர­வான தீர்­மானம் நிறை­வேற்­றப்­படும் என்று எதிர்­பார்த்­தி­ருந்­தது தமிழர் தரப்பு.

ஆனால், அதற்­கான வாய்ப்­புகள் மிக­மிக அரி­தா­னது என்­பது இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் தொடர்பில் இருந்­த­வர்கள், மனித உரி­மைகள் சார் நட­வ­டிக்­கை­களில் தொடர்பில் இருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.

சர்­வ­தேச விசா­ர­ணையின் மூலம், நியாயம் பெற்றுக் கொள்­ளலாம் என்ற தமிழர் தரப்பின் கருத்து சரி­யா­ன­தே­யா­னாலும், சர்­வ­தேச புறச்­சூழல் அதற்குச் சாத­க­மாக உள்­ளதா என்­ப­தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

2012, 2013, 2014ஆம் ஆண்­டு­களில் இலங்­கையில் இருந்த சூழல் இன்­றில்லை. எல்­லாமே மாறி­யி­ருக்­கி­றது.

இன்று மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இல்லை. குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்க முடி­யாது என்று கூறும் யாரும் இப்­போது அதி­கா­ரத்தில் இல்லை. குற்­றச்­சாட்­டு­களை மறுக்கும் திரா­ணியும் எவ­ருக்கும் இல்லை.

குற்­றச்­சாட்­டு­களை ஏற்­றுக்­கொள்­ளா­வி­டினும், உள்­நாட்­டுக்குள் விசா­ரிக்­கிறோம் என்று கூறு­கின்ற அர­சாங்கம் தான் இப்­போது இருக்­கி­றது.

இதற்கு இணங்­கா­விட்டால் சர்­வ­தேச நகர்வு ஆபத்­தாக அமையும் என்­பதை தற்­போ­தைய அர­சாங்கம் அறியும்.

எனவே, சர்­வ­தேச சமூ­கத்­துடன் இணைந்து செயற்­படத் தயா­ராக இருக்­கி­றது இப்­போ­தைய அர­சாங்கம்.

இந்தச் சாத­க­மான சூழலைப் பயன்­ப­டுத்திக் கொள்ள முனைந்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா.

மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் உள்­நாட்டில் விசா­ரணை நடத்­து­வ­தாக கொடுத்­தி­ருக்கும் வாக்­கு­று­தியை ஏற்­றுக்­கொண்டு, நல்­லி­ணக்­கத்­துக்­கான புறச்­சூ­ழலை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, அதற்கு கால­அ­வ­காசம் கொடுக்­கலாம் என்ற நிலைப்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா.

அதை­விட முக்­கி­ய­மான ஒரு விடயம், ஜெனீ­வாவில் இம்­முறை ஒரு தீர்­மா­னத்தைக் கொண்டுவரப் போவ­தா­கவும் அமெ­ரிக்கா கூறி­யி­ருக்­கி­றது.

அதுவும் அந்த தீர்­மானம் இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்து அதன் இணக்­கப்­பாட்­டுடன் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­படும் சில தீர்­மா­னங்கள், சம்­பந்­தப்­பட்ட நாடு­களின் அர­சாங்­கங்­களின் இணக்­கப்­பாட்­டுடன் கொண்டு வரப்­படும்.

அதற்­காக இரா­ஜ­தந்­திர அழுத்­தங்கள் அல்­லது வேறு வகை­யி­லான அழுத்­தங்கள் பின்­பு­லத்தில் கொடுக்­கப்­ப­டு­வ­துண்டு.

இரண்­டா­வது சம்­பந்­தப்­பட்ட நாட்டின் ஒப்­பு­தலைப் பெறாமல் நிறை­வேற்­றப்­படும்.

ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்கள் மூன்­றுக்­குமே, இலங்கை அரசின் ஒப்­பு­தலைப் பெற முயற்­சிக்­கப்­பட்­டது ஆனால் அது ­மு­டி­ய­வில்லை.

அதற்­காக பல்­வேறு தடைகள் அழுத்­தங்கள் விதிக்­கப்­பட்­டன.

ஆனால் இப்­போ­தைய அர­சாங்­கத்தை அமெ­ரிக்கா தனது கைக்குள் போட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

அதனால் சுல­ப­மாக, இந்த தீர்­மா­னத்தை நிறை­வேற்ற முடியும்.

கடந்த மூன்று தீர்­மா­னங்­க­ளையும் நிறை­வேற்­று­வ­தற்கு அமெ­ரிக்கா கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

காரணம், இந்­தியா, ரஷ்யா, சீனா என்று முப்­பெரும் வல்­ல­ர­சுகள் இலங்­கைக்கு துணை­யாக இருந்­தன.

கடைசித் தீர்­மானம் நிறை­வேற்­றிய போது கூட இந்­தியா உள்­ளிட்ட 12 நாடுகள் நடு­நிலை வகித்­தி­ருந்­தன.

இதனால், இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச விசா­ரணை ஒன்று கோரி தீர்­மா­னத்தை முன்­வைத்தால் நிச்­ச­ய­மாக இந்­தியா, சீனா, ரஷ்யா உள்­ளிட்ட நாடுகள் அதனை எதிர்க்கும் என்­பது அமெ­ரிக்­கா­வுக்குத் தெரியும்.

எனவே, அவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னத்தை முன்­வைத்து, ரிஸ்க் எடுப்­பதை விட, இலங்­கை­யுடன் இணைந்து தீர்­மா­னத்தை முன்­வைப்­பது அமெ­ரிக்­கா­வுக்கும் சுல­ப­மா­னது.

ஆனால் தீர்­மா­னத்தின் உள்­ள­டக்கம் எவ்­வாறு அமையும் என்­பது ஐ.நா. விசா­ரணை அறிக்கை வெளி­யான பின்னர் தான் இரு­நா­டு­களும் இணைந்து தீர்­மா­னிக்கும் என்று கூறி­யி­ருக்­கிறார் நிஷா பிஸ்வால்.

ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் உள்­ள­டக்கம் ஏதோ வெளியே தெரி­யா­தது போல அவர் கதைவிட்­டி­ருக்­கிறார்.

ஆனால், உள்­ள­டக்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் சில­ருக்கும் கூடத் தெரிந்­தி­ருப்­ப­தாகத் தகவல்.

எனவே நிஷா பிஸ்வால் அதை அறிந்­தி­ருக்க மாட்டார் எனக் கருத முடி­யாது.
அமெரிக்கா அடுத்த தீர்மானத்தை ஏற்கனவே வரைந்திருக்கும். ஆனால் இரகசியமாக அது வைக்கப்பட்டிருக்கும். இந்த முறை தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடன் நிறைவேற்றப்படும்போது, எந்த நாடும் அதை எதிர்க்க முடியாது.

அதேவேளை, இலங்கையுடன் இணைந்து – உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அது முற்றிலும் இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக இருக்கும் என்று கருத முடியாது.

சில நுட்பமான விடயங்களின் ஊடாக அது கொளுக்கிப் பிடி ஒன்றை போடவே முயற்சிக்கும். ஆனால் இது தமிழர் தரப்பை பொறுத்­த­வ­ரையில் ஏமாற்­ற­ம­ளிக்கும் ஒன்­றா­கவே இருக்கப் போகி­றது.

ஏனென்றால் சர்­வ­தேச விசா­ர­ணையே அவர்­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது.

அதற்கு வாய்ப்பு மறுக்­கப்­படும் போது, தமிழர் தரப்பு என்ன செய்யப் போகி­றது?
கிடைக்கும் இடை­வெ­ளி­களின் ஊடாக பொறுப்­புக்­கூ­றலை நகர்த்தப் போகி­றதா?- அல்­லது சர்­வ­தேச சமூ­கத்­துடன் முரண்­பட்டு நிற்­கப்­போ­கி­றதா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல