மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல நினைவுக் கட்டுரைகள் வெளிவந்தன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு வெளிப்படுத்துவது அவசியமாகும்.
டெஸ்மன்ட்பெர்னான்டோ சிரேஷ்ட மனித உரிமை சட்டத்தரணி - 2000.8.12
இன்று உங்களுடன் கூடியிருக்க எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் பெரும்பேறாகும். குமார் பொன்னம்பலம் எமது சந்ததியைச் சேர்ந்த இலங்கையர்களில் ஒரு மாமனிதர். ஒரு தமிழரல்லாதவராக நான் பேசுகின்றபோது, எனது கருத்துப்படி அவர் அர்ப்பணிப்பும் துணிவும் ஒளிவுமறைவின்றிப் பேசும் பாங்கும் கொண்ட ஆகச் சிறந்த தமிழ் அரசியல் தலைவராகத் திகழ்ந்தவர்.
குமார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கல்விகற்றுப் பின்னர் கேம்பிரிட்ஜ் பிட்ஸ்வில்லியம் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து லண்டன் லிங்கன்ஸ் இன் இங்கிலாந்து வழக்கறிஞர் குழுவில் அவரை இணைத்துக் கொண்டது. இலங்கைக்குத் திரும்பி வந்ததன் பேரில் அவர் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக அங்கீகரிக்கப்பட்டார்.
அன்றைய காலத்தின் முதன்மையான தமிழ்த் தலைவரும் இராணி வழக்கறிஞருமான காலஞ்சென்ற ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஒரே மகன் தான் குமார். ஜீ.ஜீ.பொன்னம்பலம். இலங்கையின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்ததுடன், சுதந்திரத்துக்கு முன்னர் அரச சபை உறுப்பினராகவும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 1965இல் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம் ஆட்சியிலிருந்தபோது ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பேராளர் குழுவுக்கு அவர் தலைமை தாங்கிச் சென்றார். குமாரின் தந்தையார் அவரின் காலத்தில் தலைசிறந்த கிரிமினர் வழக்கறிஞராகவும் புகழ்பெற்றிருந்தார்.
1970களில் குமாரை நன்கறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாம் இருவரும் குடியியல் உரிமைகள் இயக்கத்தின் தாபக உறுப்பினர்களாயிருந்தோம். குமார் மனித உரிமைகளின்பால் ஆழமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். குடியியல் உரிமைகள் இயக்கக் கூட்டங்களில் அவர் கிரமம்தவறாமல் பங்குபற்றியதுடன், சீரிய சிந்தனையுடன் பயனுள்ள முறையில் தமது பங்களிப்புகளையும் செய்தார். குடியியல் உரிமைகள் இயக்கத்தின் அந்த ஆரம்ப நாட்களில் மனித உரிமை மீறல்களுக்குப் பலியானவர்கள் சிங்கள இளைஞர்களாயிருந்தனர். குமார் அச்சிங்கள இளைஞர்களுக்கெதிரான வழக்குகளில் கட்டணம் எதுவுமின்றி அவர்களுக்காக வாதாடினார். பிரபல்யம் பெற்ற தர்மசேகர சம்பவத்தின் காரணமாக அமெரிக்கத் தூதர்களுக்கு வெளியே நடத்தப்பட்ட ரகத்து ஆர்ப்பாட்டமொன்றில் கொல்லப்பட்ட ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான ஒரு சிக்கலான வழக்கில் அவருக்குக் கிடைத்த வெற்றி அவரின் ஆரம்பகால வெற்றிகளில் ஒன்றாகும். குமார் அச்சிக்கலான வழக்கைத் தமக்கேயுரிய வழமையான ஆற்றலுடனும் பொறுதியுடனும் சிங்களத்தில் நடத்தி வெற்றிகண்டார். குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்ட ஆட்சியையும் நேர்மையான வழக்கு விசாரணைக்கான உரிமையையும் மீறுகின்றதென்று அவர் அதனைக் கடுமையாக எதிர்த்தார். அது சம்பந்தமான இரு நீதி முறைமைகளைத் தோற்றுவித்திருப்பதனால் மோசமான ஒரு முன்மாதிரியென்றும், அதுவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் பின்பற்றப்படக் கூடிய ஒரு முன்மாதிரியாகிவிடுமென்றும் அவர் உணர்ந்தார். அதன்படி செயற்பட்டார்.
குமார் பொன்னம்பலத்தின் குரல் அல்லது மௌனித்தது குமார் பொன்னம்பலத்தின் குரல்
- எஸ்.சிவசேகரம் பேராசிரியர் - 2000ஆம் ஆண்டு (இடதுசாரி)
குமார் பொன்னம்பலத்தின் ஈமச் சடங்கின்போது ஆற்றப்பட்ட இரங்கலுரைகள் குறித்து மனச் சோர்வளிக்கும் விடயம் யாதெனில், கொலையைக் கொலைதான் என்று அடித்துக்கூறி அதைக் கண்டனம் செய்ய அங்கு உரையாற்றியவர்கள் பலரும் காட்டிய தயக்கமேயாகும். தமிழ் மக்களின் பல்வேறு பிரிவினர் சார்பாகவும் குரல் தரவல்லவர்களின் தலைமைத்துவத்தின் தாழ்நிலை தரத்தின் ஒரு பிரதிபலிப்பாகவே அதை நான் பார்த்தேன். எதிர்பார்க்கப்பட்ட வட்டாரங்களிலிருந்து தான் ஒரு சில மறைவை தங்களுக்கே ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட இழப்பாக ஏன் நோக்கினார்கள். மக்களைப் பொறுத்தவரையில் அவரது மரணச் செய்தி கேட்டவுடன் அவர்கள் துணுக்குற்றவிதம் இயல்பானதாகவும், முன்னெப்போதுமில்லாத அளவுக்குப் பிரமாண்டமானதாகவும் இருந்தது.
அவரது அரசியல் பார்வைகளில் எனக்குப் பங்கில்லை என்றபோதிலும், சில விடயங்கள் குறித்த அவரது அணுகுமுறை பெரிதும் அகவெண்ணம் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால், சில விடயங்கள் குறித்துத் தமக்கு எல்லாம் தெரியும் என்று கூறிக் கொள்வோர் அமைதியாக இருப்பதையே தமது சிறந்த தெரிவாகக் கொண்டிருந்த வேளைகளில் கூட விடயத்தின் முக்கியத்துவம் கருதி அவர் பேசினார். அவர் இறந்ததிலிருந்து அவரைப் பற்றிப் பல்வேறு விடயங்கள் பல்வேறுபட்டவர்களாலும் கூறப்பட்டுள்ள குறுகிய எண்ணம் கொண்ட நாட்டுப் பற்றாளர்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவளிப்பவர்கள் எனத் தம்மை போலியாகக் காட்டிக் கொள்ளும் ஒருசிலர் என்போரிடமிருந்துவரும் தீய எண்ணங்கள் கொண்ட சில கூற்றுக்களையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை.
அவரது மரணத்தையிட்டு இலங்கைவாழ் தமிழ் மக்கள் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் தமது ஆத்திரத்தையும் ஆழ்ந்த கவலையையும் எதுவித சிறு தூண்டுதலுமின்றி வெளிப்படுத்தி வருகையில், இவ்வாறான சக்திகளிடமிருந்து வேறெந்தப் பதிவுச்செயற்பாட்டையும் எதிர்பார்ப்பது தவறு. குமார் மீதான தாக்குதல்கள் போன்று காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட புகழுரைகள் கடந்தசில வருடங்களின் போது அவர் ஆற்றிய அரசியல் வகிபாகத்திற்கானது.
ஜனநாயகச் செயன்முறை மற்றும் பேச்சுச் சுதந்திரம் என்பவற்றின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையானது, இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நலனோம்புகை மட்டில் அவருக்கிருந்த அர்ப்பணிப்புச் சிந்தை போன்று முக்கியத்துவம் கொண்டதாக விளங்கியது. பிரேமதாஸ ஆட்சியின் கடைசி வருடங்களின்போது அவர் ஆற்றிய வகிபாகத்தை நினைவூட்டுவது சிலருக்குப் பிடிக்காது. அவரது கடைசி வருடங்களின்போது அவர் காட்டிய மன வலிமையானது அதிலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அத்துடன், சில பகுப்பாய்வாளர்கள் காட்ட முனைவது போலல்லாது, குமாரின் அரசியல் நிலைப்பாடானது ஏறுமாறானதாகவோ சந்தர்ப்பவாதப் போக்குடையதாகவோ இருக்கவில்லை. அதன்வாதப் பொருத்தமும் மாறாநிலையும் 1970களின் நடுப்பகுதியிலிருந்து இடம்பெற்ற அரசியல் வளர்ச்சிகளின் சூழமைவில் புரிந்து கொள்ளப்பட வேண்டியனவாகும்.
எண்ணிப் பார்க்கமுடியாத வழமைக்கு அப்பாற்பட்ட துணிவு கொண்ட மாமனிதர் சதி செய்து கொலை செய்யப்பட்டவர்.
தமிழ்த்தேசிய இனம் தனது வாழ்வோ சாவோ எனப் போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர் நேர்மையையும் வெளிப்படையாகப் பேசுவதையுமே தனக்குப் பொருத்தமான ஆயுதமாகக் கொண்டார். அந்தவகையில் அவற்றை எதிர்பார்க்க முடியாத வீரியத்துடன் பயன்படுத்தியவர் என்பது பலரும் அறிந்ததே. யாழ். மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய திலகமாக விளங்கியவர் ஜீ.ஜீ.என அன்பாக அழைக்கப்பட்ட அமரர் பொன்னம்பலம் ஆவார். அவருடைய மகனாகிய குமார் பொன்னம்பலம் தனது ஆயுதமாக தந்தையின் செல்வாக்கையும் தந்தையின் சட்டப் புத்திக் கூர்மையையும் அறிவையும் பெற்று தந்தையின் பெயரினால் அவருக்கு ஏற்பட்ட துணிவினால் தன் உயிரைப் பொருட்படுத்தாது தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக தன்னால் செய்யக்கூடியளவை செய்து மறைந்துவிட்டார். அவர் நாமம் என்றும் நிலைத்து நிற்கும்.
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக